Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: கவனமாக செலவு செய்ய வேண்டிய 3 ராசிகள்…ஆகஸ்ட் 5, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 04, 2022 & 13:50 [IST]
Nalaya Rasi Palan: கவனமாக செலவு செய்ய வேண்டிய 3 ராசிகள்…ஆகஸ்ட் 5, 2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:  9:15- 10:15 வரை

மாலை:   4:45- 5:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகத் தோன்றும், தெளிவான மனநிலை உத்தியோகத்தில் திறம்பட உழைக்க ஊக்கப்படுத்தும். வியாபாரம் சிறப்பாக இருக்கும், கணமான பண வரவு உண்டு, வருமானத்தை ஈட்ட இன்று ஒரு அருமையான வாய்ப்பாகும்.

குடும்ப வாழ்க்கை இன்பமாக இருக்கும், குடும்பத்தினரின் ஆசை நிறைவேற்ற இன்றைய தினம் ஒரு வாய்ப்பாக அமையும். காதல் வாழ்க்கையில் பிரச்சனை இல்லை, சுமுகமாக நகரும். கல்வி ஸ்தானம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யோகம்! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கிடைக்கும் பாராட்டு உங்களைப் பெருமை கொள்ள செய்யும் மேலும் உங்களின் அலுவலகத்தில் புதிய வேலைகள் இருக்கும், முக்கிய பொறுப்பு உங்களைத் தேடி வரும்.  வியாபாரத்தில் அகலக் கால் வைக்க வேண்டாம். பண வரவு ஓரளவு தான் உள்ளது, செலவு கட்டுப்படுத்த முயலவும். 

குடும்ப வாழ்க்கையில் சிறிய ஊடல் உருவாகும். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போவது இனிமையான தருணத்தை அளிக்கும். இன்று பயணம் செய்யும் வாய்ப்பு இருக்கும். குடும்பத்துடன் வெளியே செல்வதற்கு வாய்ப்பு அதிகமாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. பெருமை! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சில முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய நாளாக அமையும், தொழில் சார்ந்த விஷயங்களில் கலந்து உரையாடுவது மேன்மை அளிக்கும். சக பணியாளர்களின் உதவி தேவைப்படும். பணம் அதிகமாக செலவாகும்.  

குடும்பத்தில் வெளிப்படையாக பேச வேண்டும், கணவன் மனைவி உறவில் சில குழப்பங்கள் உருவாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நண்பர்களிடம் உதவி எதிர்பார்ப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கடுமையாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும், தொழிலில் வேலைச் சுமைகள் க்குடும், சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பணியின் காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உள்ளது. செல்வ வரவு எதிர்பார்த்த அளவு இருக்காது, பணத்தை கையாளும்போது கவனம் தேவை.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக அமையும், வாழ்க்கை துணையுடன் பயணம் கொள்வீர்கள். கல்வி ஸ்தானத்தில் இன்று கவன சிதறல் உண்டாகும். நண்பர்களுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆரோக்கியத்தில்  கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாகும். கவனம்!  

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் தைரியமான மனம் இன்று இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க உதவியாக இருக்கும், தொழிலில் முன்னேற்றம் காண அதிகமாக உழைக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரத்தில் பொறுமை காப்பது நன்மை அளிக்கும். முதலீடு ஏற்ற பண வரவு இருக்காது.

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். வீட்டில் நிம்மதி இருக்க முடியும். காதல் வாழ்க்கை ஆனந்தமாக நகரும், நல்ல புரிதல் உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும்,  வயிறு சார்ந்த தொல்லைகள் உருவாகக்கூடும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் தெளிவான திட்டமிடல் இன்றைய தினம் உங்களைக் காக்கும் அரணாக  அமையும், தொழில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாது பல தடைகள் உருவாகும்.  தடையை சரி செய்ய அதிக நேரம் செலவாகும். பணம் வரவைக் காட்டிலும் அதிகமாக செலவாகும். 

குடும்ப வாழ்க்கையில் சிறிய மன வருத்தம் ஏற்படும். காதல் வாழ்க்கையில் பிறரின் அறிவுரை சிறிய தொல்லையாகத் தோன்றும்.  உடல்நலக் கோளாறு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தொல்லை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (5.08.2022, வெள்ளிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்