Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: தேவையற்ற செலவால் கையில் இருக்கும் தொலைக்கும் ராசிக்காரர்..... ஆகஸ்ட் 6, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 05, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: தேவையற்ற செலவால் கையில் இருக்கும் தொலைக்கும் ராசிக்காரர்..... ஆகஸ்ட் 6, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை (06.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:  7:45- 8:45 வரை

மாலை:   4:45- 5:45 வரை

Part 2:  மேஷம் - கன்னி  6 ராசியின் ராசிபலன் (6.08.2022, சனிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் செய்யும் செயலுக்கான பலனைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் கவனக் குறைவால் சிறிய குழப்பம் உருவாகும். பணிகளை திறம்பட செய்து பிறரின் பாராட்டை பெறுவீர்கள்.  செல்வ நிலையில் வழக்கமான வரவு தான் இருக்கும் ஆனால் செலவு அதிகமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், குடும்பத்டுடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர்கள். உடல்நலத்தில் சிறிய பிரச்சனை வரும், ஓய்வு தேவைப்படும். பெருமை! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருந்த பதட்டமான சூழல் மறைந்து தைரியமாக முடிவெடுக்க தூண்டும், அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சக பணியாளரின் ஒத்துழைப்பு தேவைப்படும். வியாபாரய்த்தில் லாபம் காண நிதானமாக இருக்க வேண்டும். பண இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. 

குடும்ப வாழ்வில் வெளிப்படையான பேச்சு புரிதல் அளிக்கும். உங்கள் காதல் வாழ்வில் சிறிய சங்கடம் தோன்றும். பழைய நண்பர்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உடல் சோர்வாக இருக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் பிறரின் செயல் உங்களுக்கு சாதகமாக அமையும், திருப்திகரமான பணப்புழக்கம் உருவாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். குறித்த வேலைஅயை திட்டமிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியும். செல்வ நிலை சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் நல்லுறவு இருக்கும். கணவன் மனைவி உறவில் வருங்கால வாழ்க்கை பற்றிய எண்ணம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் நன்றாக உள்ளது. கல்வி நிலையில் கவன சிதறல் ஏற்படும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும், தொழிலில் நல்ல பெயர் கிடைக்கும். புதுமையான முயற்சியில் வெற்றி காண முடியும். வேலையில் திருப்தி இருக்கும், மனம் நிம்மதியடையும். நல்ல பண வரவு உண்டு. 

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும், வீட்டில் வேலைகள் அதிகமாக இருக்கும். வீட்டில் வேலைகள் அதிகமாக இருக்கும். காதல் வாழ்வில் நெருக்கம் உருவாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்:  2

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களுக்கு புதிய மனிதரால் கிடைக்கும் உதவி இன்றைய தினம் மிகவும் உதவிக்கரமாக இருக்கும், தொழிலில் மேன்மை கிடைக்கும். வியாபாரத்தின் மூலம் ஓரளவு நல்ல செல்வ வரவு இருக்கும், வரவும் செலவும் சமமாக போகும். 

குடும்ப வாழ்க்கை சில ஊடல் உருவாகும், வெளிமனிதர்கள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பர். இரத்த சொந்த்துடன் வெளியே செல்லுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் ஏற்படும் குழப்பம் தொழிலில் சில தவறுகளை உருவாக்கும், நேரம் விரையத்தை  உருவாக்கிவிடும். வியாபாரத்தில் லாபம் காண சிரமமாக இருக்கும். நிதி நிலையில் பெரியளவு முன்னேற்றம் இருக்காது. தேவையற்ற செலவுகள் அதிகமாக இருக்கும்.

குடும்பத்தில் பொறுமை இழப்பதால் பிரச்சனை உருவாகும், கணவன் மனைவி உறவில் சிறிய பிரச்சனை உருவாகும், வெளிப்படையான  பேச்சு  தீர்வு காணும். காதல் வாழ்வில் சண்டைகள் உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், மருத்துவ செலவு உருவாகும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்