Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர் கையில் பணம் விளையாடும்.... ஆகஸ்ட் 6, 2022 ராசிபலன் !

Manoj Krishnamoorthi August 05, 2022 & 13:45 [IST]
Nalaya Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர் கையில் பணம் விளையாடும்.... ஆகஸ்ட் 6, 2022 ராசிபலன் !Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை (06.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:  7:45- 8:45 வரை

மாலை:   4:45- 5:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கையில் இருக்கும் செல்வம் அதிகமாக செலவாகும், செலவு சற்று மனதில் வருத்தம் அளிக்கும். தொழிலில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு நல்ல வரவு இருக்கும், ஆனால் சேமிக்க முடியாது.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவி உறவில் அன்பான தருணங்கள் அதிகமாகும். காதல் வாழ்க்கையில் உங்கள் துணையின் மனதை நன்கு புரிந்து கொள்ளுவீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. செலவு !

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் வெற்றி தொழிலில் நல்ல வாய்ப்பை அளிக்கும். பணியில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் ஒற்றுமையாக பணியாற்றுவீர்கள். பணப் புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள். காதல் வாழ்க்கை சுமுகமாக நகரும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் அருமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  ஆதாயம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

பல நாட்களாக அயராது உழைத்த பலன் இன்று கிடைக்கும், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கணமான செல்வ வரவு இருக்கும். பணத்தை நல்ல முதலீட்டில் செலவு செய்வீர்கள். 

வீட்டில் உள்ள அனைவருடனும் பாசமாக நடந்து கொள்ளுவீர்கள். பெற்றோரின் ஆதரவால் நன்மைகள் நடக்கும். இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் பிறக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கல்வியில் நல்ல பாராட்டு கிடைக்கும். வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் தோன்றும் தயக்கம் துணிச்சலாக வேலை செய்யத் தூண்டாது, மேலும் தொழில் சார்ந்த புதிய முயற்சிகளின் பலன் இன்று கிடைக்காது. பணியிடத்தில் இருக்கும் தடைகள் மனதில் திருப்தியற்ற எண்ணத்தை உருவாக்கும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும், செலவுகள் பெரியதாக இருக்காது.

குடும்ப வாழ்க்கையில் அமைதியின்றி சூழல் இருக்கும். நண்பர்களின் உதவி ஊக்கப்படுத்தும், இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. முயற்சி!  

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் அமைதியான மனநிலை இன்றைய தினத்தை சிறப்பான நாளாக மாற்றும், பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடினமான வேலைகளை எளிதில் முடித்து திறமையை வெளிப்படுத்துவீர்கள். செல்வ நிலையில் இன்று உயர்வு ஸ்தானம் தான், தேவையான அளவு பணம் கையில் இருக்கும். 

குடும்ப வாழ்வில் பொறுமை அவசியமாகும், கணவன் மனைவி ஊறவில் அமைதி காப்பது நன்மை அளிக்கும். காதல் வாழ்வில் அன்பான பரிமாற்றம் இருக்கும்.  உடல்நலம் நன்றாக இருக்கும்.  நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சுகமான நாளாக இருந்தாலும் திடீரென உருவாகும் பிரச்சனை அமைதியில் தடுமாற்றம் ஏற்படுத்தும், பணியிடத்தில் சவாலான சூழல் உருவாகும். வியாபாரம் இயல்பாக நடக்கும். செலவுகள் பெரியதாக இருக்காது.

வீட்டின்  பிரச்சனைகளைத் தீர்க்க அதிகமாக முயலுவீர்கள், காதல் வாழ்க்கையில் நட்பான சூழல் அதிகமாகும். குடும்பத்தினரின்  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  உங்கள் உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

Part 1: துலாம் - மீனம் அடுத்த 6 ராசியின் ராசிபலன் (6.08.2022, சனிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்