Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த 2 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்…. ஆகஸ்ட் 7, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi August 06, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த 2 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்…. ஆகஸ்ட் 7, 2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (07.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி ராசிபலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:  7:45- 8:45 வரை

மாலை:   3:15- 4:15 வரை 

PART 1: மேஷம்- கன்னி ராசிபலன் (7.08.2022, ஞாயிறு)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் தன்னம்பிக்கையால் புதிய இடத்தில் உங்கள் பெயர் நிலைக்கும் படி செயல்படுவீர்கள், தொழில் ஸ்தானம் வழக்கம்போல் செயல்படும். நிதி நிலையில் மிதமான வளர்ச்சி இருக்கும். சேமிக்கும் எண்ணம் அதிகமாக இருக்கும். மேலும் புதிய மனிதரின் சந்திப்பு தொழிலை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும். பண விஷயத்தில் சற்று கவனமாக செலவு செய்ய வேண்டும், தேவையற்ற செலவுகள் தோன்றும்.

வீட்டில் பொறுமையாக இருந்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுவீர்கள். கணவன் மனைவி உறவில் நிம்மதி பிறக்கும். காதல் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் கலகலப்பான பேச்சு சந்தோஷம் அளிக்கும். உடல்நலத்தில் கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை தோன்றி மறையும்.  நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: மெருன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் இருக்கும் அமைதி சுற்றத்தாருடன் சகஜமாக பழல ஊக்குவிக்கும், மேலும் உங்கள் அயராது உழைக்கும் குணம் தலைமை எண்ணமும் பார்ப்போரை மனதில் நம்பிக்கை அளிக்கும். பணியிடத்தில் சில முக்கிய பொறுப்புகள் அமையும். உங்கள் கணமான பண வரவு தேவைகளைப் பூர்த்தி செய்யும். நீண்ட நாட்கள் ஆசை நிறைவேறும். 

குடும்பத்தில் இருக்கும் அமைதி உங்களை தொழிலில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும். திருமண பந்தத்தில் நிம்மதியான நாளாக இருக்கும். காதல் வாழ்வில் முக்கியமான முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கும். உடல்நலம் ஓரளவு நன்றாக இருக்கும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உருவாகும் புதிய வாய்ப்பு தொழில் சார்ந்த பயணம் மேற்கொள்ள வைக்கும், தொழிலில் உருவாகும் சில தடைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கடுமையான உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றி அளிக்கக் கால தாமதமாக்கினாலும் உங்கள் மீது மதிப்பை உருவாக்கும். பண பரிவர்த்தனையில் கவனம் செலுத்த வேண்டும் பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்க ஆசைப்படுவீர்கள், இன்று உங்கள் குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்ய அதிகமாக கஷ்டப்படும் நிலை உருவாகும். காதல் வாழ்க்கை அமைதியாக நகரும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணம்!    

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களின் கலகலப்பான பேச்சால் இன்று பணியிடத்தில் நல்ல உறவை உருவாக்கி விடுவீர்கள். வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்வதால் தொழிலில் நல்ல லாபம் காண முடியும். பணத்தை நிலம் போன்ற இடத்தில் முதலீடு செய்ய எண்ணம் தோன்றும். பலரின் ஆலோசனையை எதிர்பார்ப்பீர்கள்.  

வீட்டில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாளாக இருக்கும். நண்பர்களின் ஆசையை நிறைவேற்றுவீர்கள், நட்பு வட்டாரம் பலமாகும். ஆரோக்கியத்தில் உடல் வலி சிறிய தொல்லையாக இருக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்:  8

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பாராத நேரத்தில் அறிமுகமாகும் நபரின் சந்திப்பு நன்மை அளிக்கும். தொழிலை மேம்படுத்த ஒரு தருணமாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு நண்பர்களின் உதவி தேவைப்படும். கணிசமான பண வரவு இருந்தாலும் செலவு கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும். 

வீட்டில் சகஜமான நிலை தான் நிலவும், வெளியில் செல்லும் எண்ணம் அதிகமாகத் தோன்றும். கணவன் மனைவிக்குள் புரிதல் அதிகமாகும். காதல் வாழ்வில் எதிர்கால சிந்தனை இருக்கும்.ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சுகமான உடல்நலத்தைப் பெறுவீர்கள். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் விடாமுயற்சியால் இன்று ஏற்படும் வெற்றி உங்களுக்கு நல்ல மதிப்பு அளிக்கும், தொழிலில் வெற்றி பெற அதிகமான தடைகளைக் கடக்க வேண்டும். வியாபாரத்தில் நிலையான  வெற்றி இருக்கும். பண வரவு இருக்கும், ஆடம்பர செலவுகள் இருக்கும்.

வீட்டில் சந்தோஷமாகப் பொழுது நகரும், நண்பர்களின் சந்திப்பு ஆனந்தம் அளிக்கும். தந்தை வழியில் ஆதாயம் பிறக்கும். குடும்பத்தில் பெற்றோருடன் ஆலோசனை நல்ல பலன் அளிக்கும்.  காதல் வாழ்வு திருமண பந்தமாக மாற்ற முயற்சி செய்யலாம். உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். வெற்றி!   

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்