Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பிரச்சனையை சமாளிப்பதிலே இந்த ராசிக்காரருக்கு நாள் ஓடிவிடும்… ஆகஸ்ட் 7, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 06, 2022 & 13:45 [IST]
Nalaya Rasi Palan: பிரச்சனையை சமாளிப்பதிலே இந்த ராசிக்காரருக்கு நாள் ஓடிவிடும்… ஆகஸ்ட் 7, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (07.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:  7:45- 8:45 வரை

மாலை:   3:15- 4:15 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் முயற்சியில் இன்று சில தடங்கள் ஏற்படுவதால் மனதில் சில குழப்பங்கள் ஏற்படும், மனதில் தடுமாற்றம் ஏற்படும். தொழிலில் செய்யும் புதிய முயற்சி சாதகமாகாது. மேலும் உங்கள் கல்வி ஸ்தானத்தில் கவன சிதறல் ஏற்படும். நிதி நிலையில் பண வரவில் பிரச்சனையில் வழக்கம்போல் இருக்கும் ஆனால் தவிர்க்க முடியாத செலவுகள் உருவாகும்.

குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும், குடும்பத்தினரின் உடன் அதிக நேரம் செலவழிக்க முயலுவீர்கள்.  திருமண வாழ்வில் சாதாரணமான பேச்சு கருத்து வேறுபாட்டை உருவாக்கும். முக்கியமான விஷயத்தைக் கலந்துரையாடாமல் முடிவு எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நன்மை!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் தைரியமான நடவடிக்கை இன்று சுற்றத்தாரைப் பயமுறுத்தும், தொழிலில் உங்கள் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் செயல்படுத்தும் திட்டம் நல்ல பலன் அளிக்கும், ஆனால் திட்டத்தை செயலாக்கக் கால தாமதம் ஏற்படும். நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடு செய்யலாம். 

குடும்பத்துடன் கலந்துரையாடல் அதிகமாக இருக்கும், குடும்பத்தினரின் மனதைப் புரிந்து கொள்ளுவீர்கள். காதல் வாழ்க்கை இயல்பாக இருக்கும். நண்பர்களின் தலையீடு  உங்கள் செயலிலிருந்து கவனத்தை திசை திருப்பும். உடல்நலத்தில் வயிறு சார்ந்த தொல்லைகள் இருக்கும். தாமதம்!    

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

நீங்கள் எதிர்பார்த்த ஓய்வு  இன்று கிடைத்தாலும், புதிய வேலைகள் வந்து உங்களை பிசியாகவே வைத்திருக்கும். உங்களின் வித்தியாசமான பேச்சு  பார்வையாளரை ஈர்க்கும். தொழில் ஸ்தானம் முன்னேற்றம் கொள்ளும். சுய தொழில் செய்பவர்களுக்கு இன்றைய தினம் புதுமையாக இருக்கும், புதிய வாடிக்கையாளர் வருகை நம்பிக்கை அளிக்கும். பண வரவு உண்டு.

வீட்டில் நிம்மதியாகப் பொழுதைக் கழிப்பீர். கணவன் மனைவி உறவில் நட்பான சூழல் இருக்கும். குடும்பத்துடன் வெளியே செல்லுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக நகரும். ஆரோக்கியத்தில் கால் அல்லது மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாகும்.  நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் மனதில் இருக்கும், குழப்பம் உங்கள் சுற்றத்தாரின்  தெளிவைக் கெடுக்கும். தொழில் ஸ்தானத்தில் அனுபவமுள்ள மனிதரின் ஆதரவு உதவியாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த உதவி கிடைக்கும், ஆனால் குழப்பமான மனநிலை முன்னேற்றம் அடையத் தூண்டாது. கல்வி ஸ்தானத்தில் பெரிய அளவு முன்னேற்றம் இருக்காது. நிதி நிலையில் இன்று போதுமான அளவு பணம் கையில் இருக்கும்.

வீட்டில் பொறுமையாக இருப்பீர்கள், உங்களின் கணிசமான பேச்சு குடும்பத்தினரின் மனதை நிம்மதியாக வைக்கும். கணவன் மனைவி உறவில் அன்பான தருணமாக இன்றைய நாள் இருக்கும். உடல்நலத்தில் தூக்கமின்மை சிறிய பிரச்சனை அளிக்கும். உணவுப் பழக்கத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் நேர்மையான அணுகுமுறை தொழிலில் நல்ல முன்னேற்றம் அளிக்கும், பணியிடத்தில் உங்கள் மீது மதிப்பு கூடும். வருமானத்தை உயர்த்த இன்றைய நாள் ஒரு சந்தர்ப்பம் அமையும். வியாபாரத்தில் எடுக்கும் புதிய திட்டங்களைக் கலந்துரையாடி குழுவாக எடுப்பீர்கள். உங்களின் திறன் வெளிப்படும். மனதில் நல்ல எண்ணங்கள் அதிகமாக இருக்கும். நிதி நிலையில் செலவு கொஞ்சம் அதிகமாகும்.

வீட்டில் நிம்மதியாக இருப்பீர்கள், ஓய்வு நேரத்தில் தியானம் அல்லது புதிய கலைகள் கற்கும் ஆர்வம் தோன்றும். கணவன் மனைவி சுமுகமாக இருக்கும். ஆன்மீக எண்ணம் இருக்கும் மத ஸ்தலம் செல்ல நினைப்பீர்கள். சிலர் இறைப்பணியில் கலந்து கொள்வீர்கள். உங்கள் அமைதியான மனநிலை நலமான உடல்நலத்தை அளிக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 8

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்று இருக்கும் ஆசை வாழ்க்கை மேம்படுத்த ஊக்கப்படுத்தும் ஆனால் தொழிலில் அவசரப்பட்டு எடுக்கும் முயற்சி உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். வியாபாரம் சார்ந்த பயணம் மேற்கொள்ளுவீர்கள். அலுவலகப் பணிகளில் அதிக நேரம் செலவிடுவீர்கள். இன்றைய தினம் எண்ணங்கள் முழுவதும் தொழில் சார்ந்ததாக இருக்கும். கல்வியில் நல்ல வளர்ச்சி இருக்கும். கையில் வரும் பணம் அதிகமாக செலவாகும். சேமிப்பு குறையும்.

குடும்ப வாழ்க்கையில் கருத்து  வேறுபாடு உருவாகும், கணவன் மனைவிக்கு இடையில் செலவுகள் பிரச்சனையாக மாறும். ஆடம்பர பொருட்கள் வீட்டுக்காக வாங்குவீர்கள். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள், நண்பர்களின் ஆலோசனை நல்ல பலன் அளிப்பதாகத் தோன்றும். ஆரோக்கியத்தில் ஏற்படும்  தொல்லைகள்  குடும்பத்தினரின் மனதைக் குழப்பும். வளர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

PART 2: துலாம் - மீனம் ராசிபலன் (7.08.2022, ஞாயிறு)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்