Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: தெளிவாக இருக்கும் ராசிக்காரருக்கே இப்படியென்றால்... அப்போது மற்ற ராசிகள்... ஆகஸ்ட் 9, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 08, 2022 & 12:30 [IST]
Nalaya Rasi Palan: தெளிவாக இருக்கும் ராசிக்காரருக்கே இப்படியென்றால்... அப்போது மற்ற ராசிகள்... ஆகஸ்ட் 9, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (09.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:  7:30- 8:00 வரை

மாலை:   4:45- 5:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் மனநிலையை சாந்தமாக வைக்கும், தொழிலில் இருந்த பிரச்சனையை படிப்படியாகத் தீர்க்கும். நிதி சார்ந்த பிரச்சனை இருந்தாலும் அதை சமாளிக்கும் வண்ணம் மன உறுதி இருக்கும். வியாபாரம் இயல்பு நிலை திரும்பும்.

குடும்பத்தில் பொறுமையாக இருப்பதால் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும், குடும்பத்தினரின் அக்கறை கிடைக்கும். காதல் வாழ்வில் ஆலோசனை அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் தலைவலி போன்ற பிரச்சனை வரலாம். எதிர்ப்புகள் நீங்கும்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு சற்று அலைச்சல் நிறைந்த நாளாக அமையும், பணியிடத்தில் முக்கிய வேலையை மறக்கக் கூடும். அதை சரி செய்ய உடல் அலைச்சல் ஏற்படும். மனம் ஒரு நிலையில் இருக்காது. வியாபாரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

வீட்டில் சிறிய சண்டை சச்சரவு இருக்கும்,  கணவன் மனைவி உறவில் பழைய பிரச்சனை இன்று வாக்குவாதமாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. காதல் வாழ்வில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கல்வி ஸ்தானத்தில் பிரச்சனை இல்லை. ஆரோக்கியத்தில் ஓய்வு குறைவு ஒரு தொல்லையாக அமையும். மறதி! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் வேலைச் சுமை சற்று அதிகமாகக் கோபப்பட வைக்கும், பொறுமையாக இருப்பது நட்பான சூழலை உருவாக்கும். தொழில் சாதகமாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு இன்று மதிப்பு கிடைக்கும்.  ஆன்மீக தொண்டுகளில் உங்கள் நாட்டம் அதிகமாக இருக்கும். செலவு சற்று அதிகமாக இருக்கும். 

குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பீர்கள். வீட்டில் உற்சாகமாக இருப்பீர்கள். கணவன் மனைவி உறவில் சிறிய சச்சரவு வரும். உடல்நலம் சிறப்பாக உள்ளது. கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வெற்றி பெற வேண்டும் என்ற  ஆர்வம் அதிகமாக இருக்கும் அதனால் தொழிலில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்,  உங்கள் அணுகுமுறை இன்று வியாபாரத்தில் நன்மை அளிக்கும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்,  சேமிக்க முடியும்.

குடும்ப வாழ்வு அமைதியாக நகரும். வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு சிறப்பாக பணியாற்ற ஒத்துழைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. போட்டி!  

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் இருக்கும் பரபரப்பு உங்கள் மனதை பதட்டப்படுவதும், தொழிலில் சில முக்கிய முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கும். சக பணியாளரின் கருத்து தேவைப்படும். வியாபாரத்தில் பதட்டமாகாமல் பொறுமை காப்பதால் நன்மை அளிக்கும். நிதி நிலையில் செலவு சற்று அதிகமாக இருக்கும்.

குடும்பத்தில் எதிர்காலத் தேவைக்காக சில காரியங்கள் செய்வீர்கள், குழந்தைகளின் வருங்காலத்திற்காக சில செலவுகள் செய்ய வேண்டியதாக இருக்கும். காதல் வாழ்க்கையில் அமைதி காக்க வேண்டும். ஆரோக்கியத்தில் உடல் சோர்வு ஒரு பிரச்சனையாக இருக்கும். பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் மனம் பெறும் அமைதி இன்று வழக்கமான வேலைகளைத் திறம்பட செய்யும், தொழிலில் வெற்றி காணும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வியாபாரத்தில் எடுக்கும் முயற்சி நல்ல பலன் அளிக்கும். செல்வ நிலையில் வரவும் செலவும் கலந்து இருக்கும். 

குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மறையும். பெற்றோரின் மூலம் நன்மை நடக்கும். நண்பர்களின் வழியில் தொழிலில் ஆதாயம் பிறக்கும். ஆரோக்கியத்தில் கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். மாணவர்களின் கல்வியில் கவனம் காட்ட வேண்டும். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (9.08.2022, செவ்வாய்க்கிழமை) 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்