Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டால், இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்..! | 17.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டால், இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்..! | 17.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 02 ஆம் நாளுக்கான [17 ஜூன்2023, சனி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.30 – 08.00 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

 

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உங்களின் பேச்சுக்களால் மதிப்பும் மரியாதையும் பெருகும். வீடு, வாகனம் சார்ந்த பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள். எந்த காரியமாக இருந்தாலும், தெளிவாகப் பேசி முடிவெடுக்க வேண்டும். உடல் சோர்வு குறையும். கல்வி பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கான எண்ணம் மனதில் தோன்றும். அதற்கேற்ற முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிலும் முன்பாக யோசித்து செயல்படுவது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை  பேராசை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

எந்தவொரு கஷ்டமான காரியத்திலும், விடாபிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றுவீர்கள். எந்த விஷயத்தையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகலாம். இருப்பினும், இது மனதிற்கு நிறைவைத் தரும். வரவுக்கேற்ற செலவு செய்வீர்கள். மனதில் உண்டாகும் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகலாம். இளைய சகோதரர்கள் வழியில் அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

உங்களின் கனிவான பேச்சுக்களால் நம்பிக்கை மேம்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பயணங்களால், அனுபவம் உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்காலம் பற்றிய சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எந்த காரியத்தையும் பொறுமையாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

சமூகப் பணிகளில் உங்களின் பொறுப்புகள் அதிகமாகும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படலாம். உயர்நிலைக் கல்வியில் மாணவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளிடையே இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். மறைமுக சிந்தனைகள் விலகி, மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் இருந்தால், எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த நஷ்டங்கள் குறையும். ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகமாகலாம். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். மனக்குழப்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் அதிக கவனம் தேவை. சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி | Nalaya Rasi Palan Kanni

வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கும், மதிப்பும் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பாக இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு உண்டாகும். தந்தை வழி சொத்துக்களால், ஆதாயம் பெறுவீர்கள். புதிய ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். சபை சார்ந்த பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி தெளளிவு பிறக்கும். எதிலும் தைரியத்துடனும், நிதானத்துடனும் செயல்படுவது சிறப்பைத் தரும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

துலாம் | Nalaya Rasi Palan Thulam

வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் உங்களது செயல்பாடுகளில் சற்று சோர்வு உண்டாகலாம். மாணவர்கள் படிப்பில் இருந்து குழப்பங்கள் நீங்கி தெளிவுடன் இருப்பீர்கள். கட்டிடம் சார்ந்த செயல்பாடுகளில் சோர்வு ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் அலைச்சலைத் தரும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அரசு சார்ந்த செயல்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவி இடையே இருந்து வந்த குழப்பங்கள் விலகி அன்புடன் செயல்படுவீர்கள். சோதனை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு பெறுவீர்கள். தந்தையின் எண்ணங்களைப் புரிந்து நடந்து கொள்வீர்கள். பயணங்களால், புதிய அனுபவம் உண்டாகலாம். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளைப் பெறுவீர்கள். இதனால், நெருக்கடியான விஷயங்களை எளிதில் சமாளிக்க முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தொழில்துறையில், உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் அதிக கவனம் தேவை. பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகமாகும். மனதில், நேர்மறையான சிந்தனைகள் மன மகிழ்ச்சியைத் தரும். மற்றவர்களிடம் பேசும் போது சிந்தித்து பேசுவது நல்லது. உடல் உழைப்பு சார்ந்த துறையில் வேலைப்பழு அதிகரிக்கும். உறவினர்களின் வழி நன்மைகள் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். பணியிடத்தில் உடனிருப்பவர்களின் உதவியுடன் நன்மை உண்டாகும். இழுபறியான செயல்கள் அனைத்தும் விரைவில் செய்து முடிப்பீர்கள். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

மகரம் | Nalaya Rasi Palan Magaram

புதிய நபர்களின் அறிமுகம் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை வெளிக்காட்டி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால், புதிய வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவால், மன மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் உள்ள எதிர்ப்புகளை மீறி செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகமாகும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் குறையலாம். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகளை எடுப்பதால், ஆதாயம் கிடைக்கும். எளிதில் முடியக் கூடிய காரியங்களும் சற்று தாமதமாகலாம். எதிலும் தைரியத்துடனும், பொறுமையுடனும் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதரர்கள் வழி ஆதாயம் பெறுவீர்கள். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் | Nalaya Rasi Palan Meenam

உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து செயல்படக்கூடிய நாள். இணைய வழியில் வருமானம் ஈட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணியிடத்தில் உங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து, வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும். தைரியமாகவும், திறமையுடனும் செயல்படுவீர்கள். போட்டித் தேர்வுகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்