Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்... | Tomorrow Rasi Palan in Tamil | 18.06.2023

Nandhinipriya Ganeshan Updated:
நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்... | Tomorrow Rasi Palan in Tamil | 18.06.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 03 ஆம் நாளுக்கான [18 ஜூன் 2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 

நல்ல நேரம்

காலை: 06.30 - 07.30 வரை

மாலை: 03.30 - 04.30 வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வழக்கு சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியில் வேலையை சிறப்பாக செய்து முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் தனவரவு உண்டு. சண்டையால் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். தம்பதிக்குள் அன்பு, அக்கறை அதிகரிக்கும். உங்களுடைய துணையின் மனதை புரிந்துக் கொண்டு அவர்களின் விருப்பதை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் ஏற்றம் இரக்கமின்றி சீராக இருக்கும். நீண்டதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். உடல் அளவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். லாபம் இரட்டிப்பாகும். எந்த காரியத்தையும் வழக்கத்தைவிட மிக விரைவாக செய்து முடிப்பீர்கள். கடன் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்படவும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணவரவு தாராளமாகவே இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

கனவுகள் நனவாகும் நாள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு போட்டி தேர்வுகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணவரவு எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிரச்சனை குறைந்து ஒற்றுமை மேம்படும். தூரத்து சொந்தம் வழியாக நல்ல செய்தி காதுக்கு வரும். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு சகஊழியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உற்பத்தி தொடர்பான துறைகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இருப்பினும், வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வாழ்க்கை துணை பற்றிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். பணியிடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. செலவுகள் மிகுந்த நாளாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்கள் அனுகூலப் பலன்களை தரும். உறவினர் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும். யோகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

கன்னி | Nalaya Rasi Palan Kanni

அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது. தேவையற்ற விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்த்துவிடுங்கள். எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க முடியாது. அரசு சார்ந்த துறையில் பணிபுரிவோர்களுக்கு பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும். சிலருக்கு பூர்விக சொத்து மூலம் பணவரவு உண்டு. புதிய முயற்சிகளில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கட்டிடம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 6

துலாம் | Nalaya Rasi Palan Thulam

கலை சார்ந்த துறையில் வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்திக் கொள்ளுங்கள். துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் கவனத்துடன் செயல்படுவது சிறந்தது. நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். வயதில் மூத்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது அனுகூலப் பலன்களை தேடி தரும். சிலருக்கு எதிர்பாலினத்தவரின் நட்பு கிடைக்கும். தேர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் லாபம் ஏறி, இறங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன் பிறந்தவர்களின் வழியாக சுபசெய்திகள் வீடு தேடி வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். எழுத்து சம்பந்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும். பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

பணவரவு தாரளமாக இருப்பதால், தொழிலை சாமர்த்தியமாக நடத்துவீர்கள். கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவீர்கள். இருப்பினும், அனாவசிய செலவை குறைத்துகொள்வது நல்லது. பங்குச்சந்தை நல்ல பலனை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்ப்பது உத்தமம். சகஊழியர்களை அனுசரித்து போவதால், அவர்களின் ஒத்துழைப்பை பெறமுடியும். தன்நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தில் திடீர் சுப காரியம் நடைபெற வாய்ப்புள்ளது. ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 1

மகரம் | Nalaya Rasi Palan Magaram

எதிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது, எனவே திட்டமிட்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த பிரச்சனை குறையும். சுபகாரியம் சம்பந்தமான விஷயங்களில் தடை வரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணவரவு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்காது. இருப்பினும், சமாளிப்பீர்கள். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

யாருக்கு கடன் கொடுத்தாலும் எழுத்து வடிவில் பரிவர்த்தனை செய்வது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் விலகி இருப்பது நல்லது. திருமண காரியங்களில் இருந்த சிக்கல் விலகும். சிலருக்கு புதிய தொழில்நுட்ப சாதனம் வாங்கும் யோகம் உண்டு. தூரத்து சொந்தபந்தங்களிடம் இருந்து நற்செய்தி தேடி வரும். வியாபாரம் பிரமாதமாக நடக்கும். அதிகம் பழக்கம் இல்லாதவர்களிடம் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை ஷேர் செய்ய வேண்டாம். நீர்நிலைக்கு செல்வதை தவிர்க்கவும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: மயில் பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

மீனம் | Nalaya Rasi Palan Meenam

நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் நிறைவேறும் நாள். புதிய முயற்சிகள் அதிர்ஷ்டமான பலன்களை தேடி தரும். உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் கொடுத்த வேலையை குறித்த செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் நட்பாக பழகுவீர்கள். உங்க துணையிடம் இருந்து உங்களுக்கு ஒரு இன்பதிர்ச்சி காத்திருக்கிறது. சிலருக்கு வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு. சுமாராக சென்று வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கும். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்