Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீண் பேச்சுக்களால் விபரீதம் உண்டாகலாம்.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 20.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in Tamil

Gowthami Subramani Updated:
வீண் பேச்சுக்களால் விபரீதம் உண்டாகலாம்.. இந்த ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..! | 20.06.2023 ராசிபலன் | Nalaya Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 5 ஆம் நாளுக்கான [20 ஜூன்2023, செவ்வாய்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.30 – 08.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

வியாபாரத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவில் ஆதாயம் பெறுவீர்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது சிறப்பைத் தரும். ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

பகையாளிகளும், நண்பர்களாக மாறுவர். தனவரவு மேம்பாடு அடையும். வீடுகளில் ஆபரணச் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நட்பு வட்டாரங்கள் விரிவடையும். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்படுவீர்கள். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி விடும். கணவன், மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான பணிகள் உங்களுக்குச் சாதமாக அமையும். நண்பர்களைப் பற்றிய புரிதல் அதிகமாகும். இதுவரை இருந்த இழுபறியான காரியங்கள் அனைத்தும் விரைவில் முடியும். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் எளிதில் குறையும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் எழும். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

கடன் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். உடனிருப்பவர்களின் தேவைகளை புரிந்து நடப்பீர்கள். பயணங்களால், ஆதாயம் உண்டாகும். பணி தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கடின உழைப்பினால் வெற்றி பெற நினைப்பீர்கள். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெண் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பணிகளில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் நெருங்கி வருவர். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கலாம். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தெளிவு கிடைக்கும். கணவன், மனைவி இடையே இருந்த குழப்பங்கள் விலகி நன்மைகள் உண்டாகும். ஆன்மீக செயல்பாடுகளில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

துலாம் | Nalaya Rasi Palan Thulam

இழுபறியான பணிகள் அனைத்தும் விரைவில் செய்து முடிப்பீர்கள். தொழில் நுட்பங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சாதகமான வாய்ப்பு கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவீர்கள். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் பெறுவீர்கள். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

எதிர்பார்த்த சில பயணங்களால் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குழந்தைகளால் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சில் சற்று கவனம் தேவை. உறவினர்கள் வழி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வாழ்க்கைத் துணையின் வழியில் நல்ல அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்கள் வழி நன்மை உண்டாகும். பொருளாதாரத்தில் லாபம் உண்டாகும் நாள். சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மன தைரியத்துடன் செயல்படுவது நல்லது. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் | Nalaya Rasi Palan Magaram

பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பழைய உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். இனம்புரியாத சந்தோஷம் கிடைக்கும். இழுபறியான பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகலாம். உடல் அசதிகள் நீங்கி, எதிலும் விரைவாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். அசதி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர். குடும்பத்தில் உங்களின் மதிப்பு மேலோங்கும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகமாகலாம். உத்தியோகத்தில் புது விதமான அனுபவம் பெறுவீர்கள். வேலையாட்கள் வழியில் சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகலாம். உறவினர் வழி நெருக்கடிகள் உண்டாகி நீங்கும். கல்வி தொடர்பான பயணங்கள் மேற்கொள்ளலாம். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. புதிய வீடு, நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்பாடு அடையும். உடல் நலம் சிறப்பாக உள்ளது. விருத்தி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்