Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in Tamil

Priyanka Hochumin Updated:
தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம்  4 ஆம் நாளுக்கான  [19 ஜூன் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்:

காலை: 06.30 – 07.30 வரை

மாலை: 04.30 – 05.30 வரை

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

மேஷம் | Today Rasi Palan Mesham

துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் இத்தனை நாட்களாக யாருகிட்ட பேச வேண்டும் என்று நினைத்தீர்களோ அவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பாரா சந்தோசத்தை அள்ளி கொடுக்கும். குழந்தைகள் வழியில் பெருமை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதை பயன்படுத்தி கொள்வீர்கள். பணிவான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிரம்!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

ரிஷபம் | Today Rasi Palan Rishabam

ஆரோக்கியத்தை பொறுத்த வரையில், செரிமானம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. மலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். தனவரவு சிறப்பாக இருக்கும். உடலில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருப்பதால் தண்ணீர் அதிகமாக ஏற்றுக்கொள்ளவும். வேலை செய்யும் இடத்தில் தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். பிறருடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். சில விஷயங்கள் கசப்பான தருணத்தை உருவாக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். கவலை!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

மிதுனம் | Today Rasi Palan Midhunam

கும்பத்தில் இருக்கும் சூழலால் ஓய்வே இல்லாதது போல உணர்வீர்கள். இதனால் ஒரு விதமான வெறுமை உணர்வு ஏற்படும். வீண் செலவுகள் வரும், பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம். பல சவால்களை சந்திக்க தயார இருந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனக்குறைவு காரணமாக பணியில் சின்ன சின்ன தவறுகள் ஏற்படலாம். துணையின் வார்த்தைகளை உன்னிப்பாக கேட்டு எதையும் பேச வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். பிரமை!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

கடகம் | Today Rasi Palan Kadagam

இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். முற்காலத்தில் செய்த செலவுகளை நினைத்து வருந்துவீர்கள். பணி சம்பந்தமான பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மனதில் பல விஷயங்கள் வந்து வந்து போகும். உங்களுடைய வீண் பேச்சால் துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்படலாம். நிதிநிலைமை பலன் தரும் வகையில் இருக்காது. எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் வெற்றி காணலாம். உணவு விஷயத்தில் கவனம் தேவைப்படும். மகிழ்ச்சி!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

சிம்மம் | Today Rasi Palan Simmam

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். உத்தியோகம் செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். நம்பிக்கையுடன் ஈடுபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு ஏற்படும் வாய்ப்புள்ளது. திறமையுடன் செயல்பட வேண்டும். ஆபிஸ் கோபத்தை வீட்டில் காண்பிப்பீர்கள். இதனால், உங்கள் துணையுடன் சின்ன சின்ன வாக்குவாதம் ஏற்படும். ஓய்வு!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

கன்னி | Today Rasi Palan Kanni

நீங்கள் மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடும்போது பெரியவர்களிடம் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு நீண்டநாள் கனவு நிறைவேறலாம். எனவே, குடும்ப உறுப்பினர்களிடையே யோசித்து பேசுங்கள். உங்க துணையிடம் இருந்து ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணம் பற்றாக்குறையால் வீட்டில் சின்ன சின்ன பிரச்சனை வரலாம். ஆக்கம்!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

துலாம் | Today Rasi Palan Thulam

தனவரவு அருமையாக இருக்கும். இருப்பினும் கவனமாக செலவு செய்வது உசிதம். வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். கடின உழைப்பிற்கு சரியான பலன் கிடைக்கும். உங்கள் துணையுடன் மனம் திருந்து பேசுவீர்கள். சொத்துக்கள் திருடு போகும் வாய்ப்புள்ளதால் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பேசும் விதத்தில் பேசினால் அவரும் உங்களை புரிந்துக் கொள்வார்.  நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. உற்சாகம்!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

விருச்சிகம் | Today Rasi Palan Viruchigam

உடன்பிறந்தவர் வழியில் மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது. சலிப்புத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நிதி நிலைமையில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் உதவி கிட்டும். சில நல்ல காரியங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். கோபத்தால் சின்ன விஷயத்தை பெரியதாக்குவீர்கள். இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகலாம். சிலர் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். ஓய்வு!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

தனுசு | Today Rasi Palan Dhanusu

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உங்களின் துணை மிகப்பெரிய உதவியை உங்களுக்காக செய்வார். நீங்க கடன் வாங்கியவர்கள் வீடு தேடி வந்து பணம் கேட்பார்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. வேலை செய்யும் இடத்தில் அனைவரும் நீங்கள் சொல்லை கேட்டு நடப்பார்கள். தேவையற்ற வார்த்தைகளை பொது சபையில் பேசுவதை தவிக்கவும். எதிர்காலம் சார்ந்த மனக்குழப்பங்கள் காணப்படும். துணையுடன் கவனமாக பேச வேண்டும். மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உழைப்பு!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

மகரம் | Today Rasi Palan Magaram

பண வரவு திருப்திகரமாக இல்லாததால், நெருக்கடியான சூழல் உருவாகலாம். பொறுமையை கடைபிடியுங்கள் நற்பலன்கள் உண்டு. உங்களுடைய கவலைகளை உங்கள் துணையுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் எரிச்சலூட்டும் அளவிற்கு நடந்துக் கொள்வார்கள். அமைதியாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். நலம்!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

கும்பம் | Today Rasi Palan Kumbam

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பணம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வரலாம். காதலில் எதிர்பாராத எதிர்ப்புகள் வரலாம். நிதிநிலையைப் நன்றாக இருக்கும். கணவன்-மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அதனால் எப்படி செலவு செய்வது என்று கவனித்து செயல்படவும். சிந்தனை!

தனவரவு சிறப்பாக இருக்கும்...யோசித்து செலவு செய்யுங்கள்..! | 19 ஜூன் 2023 ராசிபலன் | Today Rasi Palan in TamilRepresentative Image

மீனம் | Today Rasi Palan Meenam

வியாபாரம் சிறப்பாக இருக்காது என்பதால் பொருளாதாரத்தில் கவனம் தேவை. பொறுமை மற்றும் மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். வராத கடன் வந்து சேரும். புது நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும். உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். அதனால் ஒரு விதமான மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். களிப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்