Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்பமான மனநிலையால் அனைவரையும் சிரிக்க வைக்கும் ராசிக்காரர்.... ஜூலை 31, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 30, 2022 & 16:05 [IST]
Nalaya Rasi Palan: இன்பமான மனநிலையால் அனைவரையும் சிரிக்க வைக்கும் ராசிக்காரர்.... ஜூலை 31, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (31.07.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம் - மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 1:30- 2:30  வரை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (31.07.2022, ஞாயிற்றுக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்கள் மனம் சந்தோஷத்தின் உச்சத்தில் திளைக்கப் போகும் அதிர்ஷ்ட நாளாகும், இதுவரை உங்களுக்கு இருந்த தடைகள் படிப்படியாகக் குறையும். உங்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கை தொழிலில் நல்ல லாபம் காணும். பணியிடத்தில் உங்கள் மதிப்பு அதிகமாகும். போதுமான அளவு பணம் கையில் இருக்கும், ஆனால் செலவு அதிகமாக இருக்கும்.

வீட்டில்  நிம்மதியான சூழல் இருக்கும், கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகமாகும்.  ஆரோக்கியத்தில் பெரியளவு பிரச்சனை இல்லை.  செலவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் சிறப்பான நாளாகும், புதிய மனிதர்களால் சில ஆதாயம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணிகளை வேகமாக செய்து முடிப்பீர்கள். கையில் திருப்திகரமான பணப் புழக்கம் இருக்கும்.

இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல புரிதல் இருக்கும். கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது.  ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், உணவு பழக்கத்தில் கவனம் தேவை. நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் பொறுமையான குணத்தால் பலரை ஈர்த்து விடுவீர்கள். தொழிலில் திட்டமிட்ட படி காரியங்கள் நடக்கும். இலக்கை அடைய முடியும், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். செல்வத்தை சேமிக்க இயலாது. பண விஷயத்தில் உங்கள்  மனம் கவலை கொள்ளும். செலவு செய்யும்போது கவனமாக இருங்கள். 

திருமண வாழ்க்கை அமைதியாக நகரும், தந்தை வழி உறவால் பிரச்சனைகள் வரும். கல்வி ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  ஆரோக்கியத்தில் அடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரக்கூடும். நற்செயல் !

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று சமூகத்தின் மீது உள்ள ஆர்வம் உங்களைப் பொதுக்காரியத்தில் ஈடுபடுத்தும். சில பணக் கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கையைத் தளரவிட மாட்டீர்கள். உங்களின் தர்மம் உங்களின் கஷ்டங்களைத் தீர்க்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்க அதிக போராட வேண்டும், போட்டிகள் அதிகமாக இருக்கும். 

குடும்பத்தில் நிம்மதி குறையும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் சிறு கருத்து வேறுபாடு இருக்கும். உடல் நலம் நன்றாக இருந்தாலும் சற்று சோர்வாக உணர்வீர்கள். போட்டி !

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 8

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் சிந்தனை இன்று நிறைவேற சில வழிகாட்டல் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும், உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள். நிதி நிலை ஓரளவு நன்றாக உள்ளது, செலவுகள் குறைவாக இருக்கும். 

 

குடும்ப வாழ்க்கை சுமுகமாக உள்ளது, சிறிய பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. சுபகாரியத்தில் கலந்து கொள்ளுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களுக்குக்  கல்வியில் ஆர்வம் தோன்றும். காதல் வாழ்க்கை நன்றாக உள்ளது. ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் விடாமுயற்சி வெற்றி காணும், உங்களின் இன்பமான மனநிலை தொழிலில் செயல்படுத்த பல புதிய முயற்சிகளை செயல்படுத்தும்.  கல்வியில் மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடக்கும். செல்வ நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். காதல் வாழ்க்கை நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 6

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்