Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: வார இறுதியில் நிம்மதியாக பொழுதைக் கழிக்க போகும் அதிர்ஷ்டக்காரர் இவரா....! ஜூலை 31, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi July 30, 2022 & 16:00 [IST]
Nalaya Rasi Palan: வார இறுதியில் நிம்மதியாக பொழுதைக் கழிக்க போகும் அதிர்ஷ்டக்காரர் இவரா....! ஜூலை 31, 2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (31.07.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 1:30- 2:30  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் அன்பான குணம் இன்று அதிகமாக வெளிப்படுவதால் மற்றவர்களிடம் அதிகமாக உரையாடுவீர்கள்,  நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க முடியும். தொழில் ஸ்தானத்தில் அதிக வேலைச் சுமை இருக்கும், கடுமையாக உழைக்க வேண்டிய நிலை இருக்கும். சக பணியாளரின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். செல்வ நிலையில் செலவு சற்று உயரும். 

குடும்ப வாழ்வில் அன்பு அதிகரிக்கும், நல்லுறவு அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் வெளிப்படையான உரையாடல் அதிகமாகும். வீட்டில் இலகுவான நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம் 

அதிர்ஷ்ட எண்: 4 

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்கள் திடமான முயற்சியும் தெளிவான திட்டமும் இன்று எதிர்பார்த்த வெற்றி அளிக்கும், தொழிலில் வேலைகள் மும்முரமாக நடக்கும். வியாபாரத்தில் இன்று வெற்றி நிச்சியம், நல்ல லாபம் பார்க்கலாம். நிதி நிலையில் போதுமான கையிருப்பு இருக்கும்.

குடும்ப வாழ்க்கை சிறிய கருத்து வேறுபாடு உருவாகும், வெளிப்படையான பேச்சு பிரச்சனை அளிக்கும். காதல் வாழ்வில் அமைதியாக இருப்பது நன்மையாகும்.  ஆரோக்கியத்தில் சில வலிகள் இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையும், நண்பர்களின் உதவி இன்று மிகப்பெரிய பலமாக மாறும். மனதில் தோன்றும்  எதிர்மறை எண்ணங்களைக் கடக்கும் அறிவுரை கிடைக்கும். தொழிலில் சில புதிய வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். நல்ல பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கை அமைதியாக நகரும்.  வாழ்க்கை துணையுடன் வெளியே செல்லுவீர்கள். திருமணமாகாத மிதுன ராசியினருக்கு திருமண பேச்சு இருக்கும்.  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வளர்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்   

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் பொறுமை மிகமிக அவசியமாகும், மனதை அமைதியாக்க இறை பிரார்த்தனை தேடுவீர்கள். பணியிடத்தில் சில கடினமான சூழ்நிலை ஏற்படும், சக பணியாளரிடம் விட்டுக்கொடுத்து போக வேண்டும்.  பண விசயத்தில் சிறிய கவனம் வேண்டும்.

வீட்டில் சிறிய அமைதியற்ற சூழல் இருக்கும், கணவன் மனைவி உறவில் மனம் திறந்து பேச வேண்டியது அவசியமாகும். குடும்பம் சார்ந்த செலவுகள் மனதில் குழப்பத்தை விதைக்கும்.  ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை   

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய நாள்  சக பணியாளரிடம் கிடைக்கும்  உறவு தொழிலில் முன்னேற உதவியாக இருக்கும். மனதில் அவ்வப்போது சில எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். முறையான திட்டமிடல் இன்று அவசியமாகும், வியாபாரத்தில் அடுத்த நிலையைப் பெற மிகவும் போராட வேண்டி இருக்கும். செல்வ நிலையில் எதிர்பார்த்த அளவு பணம் கையில் இருக்காது.

குடும்ப வாழ்க்கையில் அமைதி இருப்பது மிக மிக அவசியமாகும், கணவன் மனைவி உறவில் வாக்குவாதம் உருவாகக்கூடும். காதல் வாழ்வில் பிடிவாதத்தால் உறவில் விரிசலை உருவாக்குவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 6

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் ராசிக்கு இன்றைய தினம் சாந்தமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது, உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் நிகழும். மனம் விரும்பும்படியான மாற்றங்கள் இருக்காது. பணி நிமித்தமாக சில மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருக்கும். வியாபாரத்தில் இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும்.

இல்லற வாழ்வில் பிரச்சனைகள் உருவாகும், அமைதியாக இருப்பது நன்மை அளிக்கும். உங்களின் கோபம் இன்று புதிய பிரச்சனையை உருவாக்கும். நண்பர்களின் அறிவுரை கிடைக்கும். உடல்நலத்தில் தூக்கமின்மை பிரச்சனை இருக்கும். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 8

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (31.07.2022, ஞாயிற்றுக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்