Mon ,May 20, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: எது பேசினாலும் அது பிரச்சனையில் தான் முடியும்.. அக்கம் பக்கத்தினருடன் கவனமா பழகுங்க... ஜூன் 30, 2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan June 29, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan: எது பேசினாலும் அது பிரச்சனையில் தான் முடியும்.. அக்கம் பக்கத்தினருடன் கவனமா பழகுங்க... ஜூன் 30, 2022 ராசிபலன்!Representative Image.

Tomorrow Rasi Palan | Nalaya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Inraiya Raasi Palan | Tomorrow Horoscope in Tamil 

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.00 வரை

மாலை: இல்லை

Today Horoscope: மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 16 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.


மேஷம் முதல் கன்னி வரை உள்ள முதல் 6 ராசியின் தினசரி பலன் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்..


துலாம் | Libra 2022 Horoscope

பணம் சம்பந்தமான விஷயத்தில் உங்களுக்கும் உங்களுடைய மனைவிக்கும் சண்டை வரலாம். இருந்தாலும், உங்களின் அமைதியான தன்மையால் எல்லாத்தையும் சரிசெய்விங்க. உடம்பு சரியில்லாமல் இருக்கும் சொந்தக்காரர்களை போய் பாத்துட்டு வாங்க. உங்க அன்புக்குரியவர்களின் நடத்தையில் சந்தேகம் மட்டும் பட்டுறாதீங்க. அதேபோல், எது பேசினாலும் அது பிரச்சனையில் தான் முடியும்; எனவே, அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுங்க. தேவையில்லாத செலவுகள் இருக்கும். இன்று வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். சிக்கல்!

விருச்சிகம் | Scorpio 2022 Horoscope

இன்னைக்கு ரிலாக்ஸ் பண்ண வேண்டிய நாள். உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை செய்யுங்க. தெரியாத நபர்களின் ஆலோசனையின் பேரில் எங்காவது முதலீடு செய்திருந்தால் இன்று லாபம் பார்ப்பீர்கள். யாராவது எனக்கு பிரச்சனை என்று உங்ககிட்ட வந்தா அமைதியாக ஒதுங்கிக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பேரும் கிடைக்க வேண்டுமென்றால் ஸ்மார்ட்டாக சிந்திக்க ஆரம்பிங்க. விருச்சிக ராசி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிக்கல் இருக்கும். உங்களுடைய துணை அவர்களின் வேலையில் மும்பரமாக இருப்பார்கள், இதனால் உங்களை கண்டுக்கொள்ளாமல் போகலாம்.  அமைதி!

தனுசு | Sagittarius 2022 Horoscope

புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். இன்று பணிபுரியும் இடத்தில் கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் முடித்து, மேல் அதிகாரியின் பாராட்டை பெறுவீங்க. கணவன்-மனைவி உறவில் நல்ல புரிந்துணர்வு காணப்படும். வீட்டில் நல்ல காரியங்கள் நடைக்க வாய்ப்புள்ளது. கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்க. சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரத்தை பொறுத்த வரை சுமாராக தான் இருக்கும். உற்சாகம்!

மகரம் | Capricorn 2022 Horoscope

எதிர்பாரா பணவரவு உண்டு. இதனால் உடனடி செலவுகளை சமாளிப்பீங்க. இன்றைய நாள் சுமூகமாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நம்பிக்கையோடு முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். உடன் பணிபுரியும் பணியாளர்களிடம் கவனமாக பழக வேண்டும். அதிக வேலை காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிக சிறந்த நாளாக இன்று அமையும். நன்மை!

கும்பம் | Aquarius 2022 Horoscope

எதிலும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், உங்களுடைய தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். பணி செய்யும் இடத்தில் கவனம் தேவை. எப்போதும் கடிந்துக்கொண்டே இருந்த நீங்க, இன்று துணையிடம் கனிவாக நடந்துக் கொள்வீர்கள். வியாபாரம் சுமாராக காணப்படும். குடும்ப நலனில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொறுப்பு!

மீனம் | Pisces 2022 Horoscope

எந்த செயலையும் குழப்பத்தோடு செய்ய வேண்டாம். அது தவறுக்கு வழிவகுக்கும். எனவே, கவனமாக செயல்படுங்கள். இன்று துணையுடன் மகிழ்ச்சியுடன் இருக்க அவர்களை வெளியிடங்களுக்கு கூட்டிட்டு போங்க. கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பதால் வெற்றிகரமான நாள்.  காதலின் உச்சத்தை இன்று அடைவந்து இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று ரொமான்ஸ் செய்வீர்கள். வீட்டு பிரச்சனைகளை பணியை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்க. அன்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்