Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan: இன்னைக்கு பொறுமையின் சிகரமாக இருக்கனும் இல்லனா அனத்தம் உங்களுக்கு தான்... உஷாரா இருந்துக்கோங்க... ஜூன் 30, 202 ராசிபலன்..!

Nandhinipriya Ganeshan June 29, 2022 & 14:00 [IST]
Tomorrow Rasi Palan: இன்னைக்கு பொறுமையின் சிகரமாக இருக்கனும் இல்லனா அனத்தம் உங்களுக்கு தான்... உஷாரா இருந்துக்கோங்க... ஜூன் 30, 202 ராசிபலன்..!Representative Image.

Tomorrow Rasi Palan | Nalaiya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Inraiya Raasi Palan | Tomorrow Horoscope in Tamil 

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.00 வரை

மாலை: இல்லை

Today Horoscope: மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 16 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம் | Aries 2022 Horoscope

இன்று இலக்குகளை நிர்ணயித்து முயற்சி செய்தால் வெற்றி உங்களுக்கு தான். வேலை செய்யும் இடத்தில் சவால்கள் நிறைய இருக்கும். ரொம்ப கவனத்தோடு நம்பிக்கையோடு பணியை செய்யுங்க. அதுமட்டுமல்லாமல், உங்களின் திறமைகளை நீங்கள் அறியும் நாள் இன்று. எதிர்பாராத நேரத்தில் பணஉதவி உங்களை தேடி வரும். தொழில் லாபம் நீங்க நினைத்தபடி லாபம் இருக்கும். உங்களுடைய துணையால் இன்று நீங்க சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக இருங்க. கவனம்!

ரிஷபம் | Taurus 2022 Horoscope

இன்னைக்கு பொறுமையின் சிகரமாக இருப்பது தான் தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாத்தும். பணிச்சுமை அதிகமாக இருக்கும், அதனால் சற்று போராட வேண்டியிருக்கும். எனவே, தப்பு எதுவும் நடக்காத மாதிரி திட்டம்போட்டு வேலை செய்யுங்க. உங்களுடைய துணையுடன் பேசும் போது எச்சரிக்கை வேண்டும். ஜாலியாக பேசுகிறேன் என்று எதையும் பேசிவிட வேண்டாம். அப்பறம் அனத்தம் உங்களுக்கு தான். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு வளத்தையும் லாபத்தையும் அள்ளி கொடுக்கும். நண்பர்களுடன் வெளியில் செய்யும் போது நீங்களாக முந்திக்கொண்டு செலவு செய்ய வேண்டாம். அப்படி செய்தால் வெறும் பாக்கெட்டுடன் தான் வீடு திரும்புவிங்க. நீங்க செய்யும் ஒரு நல்ல விஷயத்தால் இதுவரை எதிரியாய் இருந்தவர்கள் நட்புடன் பழகுவார்கள். செலவு!

கர்ப்பக்காலத்தின் முதல் மூன்று மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்..? கருவின் அளவு எவ்வளவு...?

மிதுனம் | Gemini 2022 Horoscope

பரந்த மனம் உள்ளவராக, நல்லது செய்பவராக இருங்க. இவ்வளவு நாளா நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஆசைகள் நிறைவேறும். ஆனால், சில போராட்டங்களுக்கு பிறகே அது சாத்தியம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இன்னைக்கு உங்க வேலையில மும்மரமாக இருப்பீங்க. சக ஊழியர்கள் உங்களுடைய வேலையை பாராட்டுவார்கள். பிசினஸில் நீங்க எதிர்பார்த்த லாபம் இருக்கும். உங்களுடைய திருமண வாழ்வு இனிமையாகவும் குதூகலமாகவும் இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பாராட்டு!

கடகம் | Cancer 2022 Horoscope

வீட்டுல ஏதாவது விஷேசங்கள் நடத்த திட்டம்போட்டிருந்தால் தள்ளிப் போடுவது நல்லது. இன்னைக்கு கஷ்டமான வேலையை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணியில் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். எந்த செயலிலும் உணர்ச்சிவசப்படாமல், பொறுமையாக சிந்தித்து செயலாற்ற வேண்டும். காதல்-துணையும் பிணைப்பும் அதிகரிக்கும். எதிர்பாராத செய்திகள் சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எண்ணெய் உணவுகளை தவிர்ப்பது நல்லது. பொறுமை!

இந்த பொடிய போட்டு முகம் கழுவுங்க... அப்பறம் பாருங்க மாயாஜாலத்த...!!

சிம்மம் | Leo 2022 Horoscope

வேலையில் கவனம் செலுத்தினால் அங்கீகாரமும் வெற்றியும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் இன்று லாபகரமானதாக இருக்கும். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பவாழ்வை பொறுத்த வரை எந்த பிரச்சனையும் சுமூகமாக இருக்கும். மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆக மொத்தத்தில் சிறப்பான நாள். ஆனந்தம்!

கன்னி | Virgo 2022 Horoscope

இன்னைக்கு மகிழ்ச்சியான  நாளாக இருக்கும். புதிய உறவுகள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் அவசரப்பட்டு செய்யும் வேலையால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கவனத்தோடு செயல்பட்டால் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். கெட்டபேறு கிடைக்காமலும் இருக்கும். உங்க மனசுல எந்த பிரச்சனை இருந்தாலும் அது உங்க துணையிடம் மனம் திறந்து பேசுங்கள். எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்யலாம். மகிழ்ச்சி!


துலாம் முதல் மீனம் வரை உள்ள அடுத்த 6 ராசியின் தினசரி பலன் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்..


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்