Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. 11.9.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan September 10, 2022 & 17:40 [IST]
நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. 11.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

மங்களகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 26 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

நல்ல நேரம்

காலை: 06:15 - 07:15 வரை

மாலை: 03:15 - 04:15 வரை

மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்!

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். இலக்குகளை அடைய புதிய யுக்திகளை மேற்கொள்வது அவசியம். கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். 

மனைவியுடன் தேவையற்ற பேச்சுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இன்று வரவோடு செலவும் அதிகரித்து காணப்படும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளதால் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நிதானம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெண் சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் நாள். சிலர் வேண்டுமென்றே உங்களிடம் சண்டைக்கு வருவார்கள், வார்த்தையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

வேலை செய்யும் இடத்தில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். எதிர்பார்த்த ஒப்பந்தம் சிலருக்கு சாதகமாக அமையும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. எச்சரிக்கை! 

அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

பெரியோர்களின் ஆலோசனையால் மனதில் புதிய மாற்றம் உண்டாகும். எந்த காரியமும் வெற்றியை தேடித்தரும். இலக்குகளை அடைவதற்கு வேண்டிய மனஉறுதியும், ஆற்றலும் காணப்படும். பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 

கடன் தொடர்பான பிரச்சனைகள் படிபடியாக குறையும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். உறவினர்களின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். உங்களுக்கு சாதகமனான நாள். வேலை செய்யும் இடத்தில் சிறந்த கவனத்துடன் பணியாற்றுவதன் மூலம் விரும்பிய பலன்களை அடையலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும்.

இல்லற வாழ்க்கையில் கருத்து வேறுபாடு எழலாம். விட்டுக்கொடுத்து போவது நல்லது. பத்திரிக்கை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அனுகூலம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்:  8

கும்பம் (Kumbam Nalaya Rasi Palan)

இத்தனை நாட்களை மனதில் இருந்துவந்த சில விஷயங்களுக்கு புரிதலும், தெளிவும் ஏற்படும். குழப்பம் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும். நெருங்கியவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. வாக்குறுதிகளை அளிப்பதற்கு முன்பு சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளவும். 

சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. விரும்பிய உணவை உண்டு மகிழ்வீர்கள். இன்று அதிக செலவுகள் காணப்படும். கண் சார்ந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

வெற்றிகரமான நாள். நேரம் உங்களுக்கு சாதமாக உள்ளது. புதிய முயற்சிகள் வளர்ச்சியை கொடுக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

பணியில் சிறந்து காணப்படுவீர்கள். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். செழிப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்  

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்