Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,399.78
-845.12sensex(-1.14%)
நிஃப்டி22,272.50
-246.90sensex(-1.10%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.. 11.9.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan September 10, 2022 & 17:30 [IST]
இந்த ராசியினர் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.. 11.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

மங்களகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 26 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

நல்ல நேரம்

காலை: 06:15 - 07:15 வரை

மாலை: 03:15 - 04:15 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நடப்பவை அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். பணியிடச்சூழல் மகிழ்ச்சி கரமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரித்து காணப்படும்.  

பணவரவு சார்ந்த நெருக்கடிகள் குறையும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு காண்பீர்கள். நிலம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை துணைவரின் வழியில் சந்தோசமான செய்திகள் கிடைக்கும். கூடப்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். 

வேலை செய்யும் இடத்தில் திறமைக்கு உண்டான சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லறவாழ்க்கையில் நெருக்கம், அன்பு, பாசம் அதிகரிக்கும். நிதி நிலைமை அமோகமாக உள்ளது. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். முயற்சிக்கு சின்ன தடைகள் ஏற்படும். இலக்கை அடைய எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது.

நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை கையாளும் போதும் கவனத்துடன் கையாள வேண்டும். உங்க துணையுடன் இதுவரை இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் குறைந்து நெறுக்கும் மேம்படும்.  கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

தொழில் முன்னேற்றம் ஏற்படும். சூழ்நிலையை அனுசரித்து போவதன் மூலம் சில சிக்கல்களை தவிர்க்கலாம். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளுடன் சில பிரச்சனைகள் காணப்படும். அனுசரித்து போவது நல்லது. 

கணவன்-மனைவி இடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணம் சம்பந்தமான விஷயங்களில் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். வீட்டின் அருகில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் நிறைய வாய்ப்புகள் தேடி வரும், புத்திசாலித்தனமாக பயன்படுத்துக் கொள்ளுங்கள். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். நீங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.

திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் இரட்டிப்பு லாபம் காணப்படும். நிதிநிலைமை அமோக இருக்கும். அங்கீகாரம்! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாள். நம்பிக்கை அதிகரித்து காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் உண்டாகும். 

வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்துவரை, எந்த பிரச்சனையும் இல்லை. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்