Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு மட்டும் இன்றைக்கு இன்பமான நாள் தான்... 17.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 16, 2022 & 14:00 [IST]
 Nalaya Rasi Palan: இந்த 3 ராசிக்கு மட்டும் இன்றைக்கு இன்பமான நாள் தான்... 17.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 32 ஆம் நாள் சனிக்கிழமை (17.9.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:  10:45- 11:45 வரை

மாலை:   4:45- 5:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்றைய தினம் தொழிலில் திட்டமிட்டு களமிறங்குவது ஜெயமாக அமையும். செய்யும் செயலை குழுவாக செய்வதால் நல்ல பலன் உண்டு. தேவையற்ற செலவு வரலாம், பணத்தைக் கவனமாக செலவிட வேண்டும். 

குடும்பத்தில் சிறிய வாக்குவாதம் உருவாகலாம். கணவன் மனைவி உறவு விட்டுக்கொடுத்து போவதால் நன்மை உண்டாகும். ஆரோக்கியத்தில் கண் சார்ந்த தொல்லைகள் உருவாகும். கல்வியில் பிரச்சனை இல்லை. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று தொழில் மிகவும் நன்றாக இருக்கிறது, குறித்த பணிகளை முடிப்பதில் கால தாமதம் ஏற்படும். இதுவரை இருந்த நிதி நெருக்கடி  குறையும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்,  இன்று திடீர் பயணம் கொள்ளும் யோகம் அதிகமாக உள்ளது. 

கணவன் மனைவி உறவில் நல்ல இலக்கணம் உருவாகும், ஒற்றுமை அதிகமாகும். இன்று மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சிறிய கவனம் அவசியமாகும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று பணியிடத்தில் வழக்கத்தைவிட அதிகமாக வேலை இருக்கும், சக பணியாளரின் உதவி தேவைப்படும். போதுமான பணப்புழக்கம் கையில் இருக்காது, தேவையை சமாளிக்க பிறரின் உதவி தேவைப்படும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். 

குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் குறையும், சிறிய விஷயத்துக்கு சண்டை வரும். திருமண வாழ்வில் பொறுமை மிக அவசியம். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, வேலை அழுத்தம் உடலை சோர்வாக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய உங்களுக்கு இன்பமான மனநிலை இருக்கும். பணியில் மகிழ்ச்சி நிலை, உங்கள் வேலை மேலதிகாரிக்கு திருப்தி அளிக்கும். சிறப்பான பணப்புழக்கம் இருக்கும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்க முடியும். மாணவர்கள் கல்வி மந்தமாக இருப்பர்.

கணவன் மனைவிக்குள் அன்பு இருக்கும், ஒற்றுமை அதிகரிக்கும். விட்டில் முக்கிய முடிவு எடுப்பீர். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. அசதி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களுக்கு தொழிலில் கிடைக்கும் புதிய வாய்ப்பு மனதில் சந்தோஷத்தை விதைக்கும். மனதில் நிம்மதி இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கையில் கணமான பணப்புழக்கம் உண்டு. 

கணவன் மனைவிக்குள் வாழ்க்கை வளர்ச்சி கொள்ள செய்யும் கலந்துரையாடல் இருக்கும். காதல் வாழ்வில் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர்

அதிர்ஷ்ட எண்: 4 

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களுக்கு இதுவரை இருந்த தேவையில்லாத எண்ணங்கள் மறைந்து தெளிவான சிந்தனை பிறக்கும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகமாக இருக்கும். செலவு இருக்கும், குடும்ப செலவுகளைக் குறைக்க அதிகம் முயற்சி செய்வீர்கள். செலவை சமாளிக்கும் அளவு பண வரவு இருக்கும். 

குடும்பத்தில் வாக்குவாதம் மூலம் சண்டைகள் வளரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை  கிடைக்கும்.. ஆரோக்கியம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (17.09.2022, சனிக்கிழமை)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்