Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Purattasi Matha Rasi Palan 2022 Meenam : மீன ராசிக்கு கொஞ்ச அசந்த கூட ஆபத்து தான்...!

Manoj Krishnamoorthi September 16, 2022 & 11:30 [IST]
Purattasi Matha Rasi Palan 2022 Meenam : மீன ராசிக்கு கொஞ்ச அசந்த கூட ஆபத்து தான்...!Representative Image.

மேஷத்தில் இராகு, ரிஷபத்தில் செவ்வாய், சிம்மத்தில் சுக்கிரன், கன்னியில் சூரியன் மற்றும் புதன், துலாமில் கேது,  மகரத்தில் சனி வக்கிரம், மீனத்தில் குரு வக்கிரம் இருப்பதால்  2022 புரட்டாசி மாதம் எப்படி இருக்கும் என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 

மீனம் புரட்டாசி மாத ராசிபலன் 2022 (Purattasi Matha Rasi Palan 2022 Meenam) 

 

பொது பலன்: 

மீன ராசிக்காரரே தொழிலில் சில கஷ்டங்கள் வரும், விடாமுயற்சி வேண்டும்.  வேலை அழுத்தம் உடல்நலத்தில் சிறிய குறைகள் அளிக்கும். வண்டி வாகனத்தில் கவனம் வேண்டும். சுற்றத்தார் உடன் அனுசரணையாக இருக்க வேண்டும். 

குடும்பம்: 

இல்லற வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை அளிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பெற்றோரின் ஆசி கிடைக்கும், வீட்டில் பெரியவரின் ஆலோசனை நல்ல பலன் அளிக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை கலந்துரையாடி எடுப்பது நன்மை அளிக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. 

தொழில்:

உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டில் சூரியன் இருப்பதால் பணியில் அதிக பொறுப்புகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் பெரிய முதலீடு அளிப்பதை தவிர்க்கவும். கல்வியில் பிரச்சனை இல்லை, வெற்றிக்காக போராட வேண்டும்.  வெளியூர் வேலைக்கு அல்லது உயர்கல்வி தடைகளுக்கு பிறகு தான் கிடைக்கும். ஊக்கத் தொகை கிடைக்கும். பணத்தை செலவு செய்யும்போது 

உடல்நலம்:

உடல்நலத்தில் சில உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வாமை, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

சந்திராஷ்டமம்: 

செப்டம்பர் 26, 27, 28



 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்