Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : நிம்மதியான மனநிலையில் மற்ற ராசிகள் ஆனால் துலாம் மட்டும்.. 17.09.2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi September 16, 2022 & 15:10 [IST]
Nalaya Rasi Palan : நிம்மதியான மனநிலையில் மற்ற ராசிகள் ஆனால் துலாம் மட்டும்.. 17.09.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 32 ஆம் நாள் சனிக்கிழமை (17.9.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:   10:45- 11:45 வரை

மாலை:   4:45- 5:45 வரை

Part 2: மேஷம்- கன்னி ராசிபலன் (17.09.2022, சனிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பார்த்த வளர்ச்சி தொழிலில் இருக்காது, குறித்த இலக்கை அடைய கடினமாக இருக்கும். செய்யும் முயற்சி வெற்றி பெறுவதில் வெற்றி காண தெளிவான திட்டம் வேண்டும். பணத்தை கவனமாக செலவிட வேண்டும். 

குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும். காதல் வாழ்வில் நட்பான அணுகுமுறையில் நடந்து கொள்வது உறவைக் காக்கும். உடல்நலத்தில் சிறிய உடல் கோளாறு ஏற்படும். சிரமம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்களின் தொழிலில் இன்று கிடைக்கும் முன்னேற்றம் உங்களை பெருமைப்படுத்தும். வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி உண்டு, கையில் போதுமான பண வரவு உண்டு. 

திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். உங்கள் வெளிப்படையான பேச்சு வீட்டில் மகிழ்ச்சி அளிக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது, மனம் தெளிவாக இருக்கும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும், இவ்வளவு நாட்களாக அனுபவித்த போராட்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் இலக்கை எளிதில் அடைந்துவிட முடியும். கையில் போதுமான பணம் இருக்கும். 

குடும்பத்தின் மீது அக்கறை காட்டுவீர். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். காதல் வாழ்வில் நெருக்கம் அதிகமாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்கள் மனம் இன்று எந்த கவலையும் இன்றி இன்பமாகப் பொழுதைக் கடத்தும். அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். சுய தொழிலில் சவாலான சூழலை வெற்றி காண்பீர். பணிச்சுமை இருக்காது. கையில் பணப்புழக்கம் உண்டு, உடல்நலத்துக்காக செலவு செய்ய வேண்டியதாக இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் இருக்கும். காதல் வாழ்வில் நல்ல புரிதல் இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.  இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் சாதாரணமாக செய்யும் செயல் நல்ல முன்னேற்றம் அளிக்கும். தீர்மானித்த இலக்கை எளிதில் அடைய முடியும். பண இழப்பு ஏற்படலாம், கவனமாக இருக்க வேண்டும். 

குடும்ப பிரச்சனை உங்கள் மனதில் சிறிய குழப்பத்தை உருவாக்கும். பிறரின் ஆலோசனை மனதில் தெளிவு அளிக்கும். காதல் வாழ்வில் பிரச்சனை இல்லை. ஆரோக்கியத்தில் கால் சார்ந்த தொல்லைகள் ஏற்படும். அச்சம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும், திறமையாக பணியாற்றுவதால் வேலைகள் விரைவாக முடியும். உங்கள் திறமை  வெளிப்படும். பண வரவு மகிழ்ச்சி அளிக்கும், சேமிக்க முயற்சி செய்வீர்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தம் அளிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. மனதில் நேர்மறையான எண்ணங்கள் குறையும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 9

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்