Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று புகழின் உச்சியில் நிற்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்.... 19.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 18, 2022 & 11:30 [IST]
Nalaya Rasi Palan: இன்று புகழின் உச்சியில் நிற்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்.... 19.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 2 ஆம் நாள் திங்கட்கிழமை (19.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 7:30- 8:30  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று பணியிடத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும் நீங்கள் செய்யும் செயலின் விளைவு நல்ல முன்னேற்றம் அளிக்கும். சுய தொழில் புரியும் மேஷ ராசிக்காரருக்கு நம்பிக்கையான வாடிக்கையாளர் கிடைப்பர். செல்வ நிலை நன்றாக உள்ளது. 

வீட்டில் கணவன் மனைவி உறவில் இனிமையான தருணமாக இருக்கும். குடும்பத்தினருடன் உற்சாகமாகப் பொழுதைக் கழிப்பீர். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. புகழ்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மனதிற்கு உற்சாகம் அளிக்கும். மாணவர்கள் தேர்வில் சிறப்பான வெற்றி பெற்று புகழடைவர். அலுவலகத்தில் குறித்த வேலையை விரைவாக முடிப்பீர். கையில் பண வரத்து குறையும், கையிருப்பு செலவாகும். 

குடும்பத்தில் சில வாக்குவாதம் வரும். கணவன் மனைவி உறவில் சண்டைகள் உருவாகி புரிதல் அளிக்கும். ஆரோக்கியத்தில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாகும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்கள் வழக்கமான வேலையில் சிறிய சலிப்பு தோன்றும். அலுவலகத்தில் சக பணியாளரின் தூண்டுதல் வேலையை முடிக்க உதவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி இருக்காது.  செலவை சமாளிக்கும் பண வரவு உண்டு. 

கணவன் மனைவி உறவில் வாக்குவாதம் வரும், பிறரின் அறிவுரை குடும்பத்தில் அமைதியை உருவாக்கும். காதல் வாழ்வில் சாதாரணமான பேச்சு பிரச்சனை உருவாக்கும். ஆரோக்கியத்தில் கால், நரம்பு சார்ந்த தொல்லைகள் ஏற்படலாம். தொல்லை! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

 உங்கள் தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, இன்று வியாபார ரீதியாக பல முக்கிய முடிவுகள் எடுப்பீர். அனுபவம் வாய்ந்த பலரின் ஆலோசனை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், வாடிக்கையாளர் மத்தியில் பிரபலம் அடைவீர்கள். நிதி நிலை நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை அவ்வளவாக சரியில்லை என்றாலும் மனம் நிம்மதியாகத் தான் இருக்கும். கல்வியில் பாராட்டு கிடைக்கும். ஒரு புரியாத பதட்டம் மனதில்  இருக்கும். உடல்நலத்தில் வயிறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் இருக்கும்.பெருமை! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  7

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் வருங்காலத்தை பற்றிய பயம் இலக்கை அடைய ஊக்கப்படுத்தும். அலுவலகத்தில் ஒற்றுமையாக பணியாற்றுவீர், பணிகள் மும்முரமாக நடக்கும். கலைத்துறை சேர்ந்தவருக்கு நல்ல வாய்ப்பு அமையும். பண வரவு உண்டு.

 

காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது.  திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப செலவு வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும்.  உடல் சோர்வாக இருக்கும், ஓய்வு தேவைப்படும். வாழ்வு! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  4

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் பொறுமையாக இருக்க வேண்டும், உங்களின் பொறுமையற்ற நிலை இன்று தொழிலில் பிரச்சனை அளிக்கும். அலுவலகத்தில் கருத்து மோதல் ஏற்படும். நட்பு வட்டாரம் மூலம் மனம் அமைதி கொள்ளும். கையில் ஓரளவு பணப்புழக்கம் இருக்கும். 

வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும், ஆனால் உங்கள் மனநிலை வீட்டில் சலசலப்பை உருவாக்கும்.  காதல் வாழ்க்கையில் இன்று புரிதல் இருக்காது, வாக்குவாதம் அதிகமாக இருக்கும். உணவு பழக்கம் ஆரோக்கியக் குறையை உருவாக்கும். சினம்! 

அதிர்ஷ்ட நிறம்: 

அதிர்ஷ்ட எண்: 

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (19.09.2022, திங்கட்கிழமை)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்