Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: வெற்றி இருந்தும் இவரின் மனதில் நிம்மதி இருக்காது.... 2.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 01, 2022 & 13:50 [IST]
Nalaya Rasi Palan: வெற்றி இருந்தும் இவரின் மனதில் நிம்மதி இருக்காது.... 2.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 17 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (02.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு மனம் வருத்தமாகும் செயல் நடைபெறும், மன ஊறுதி தேவைப்படும். பணியிடத்தில் முன்னேற்றம் குறையும், சறுக்கல் உருவாகும். வியாபாரத்தின் மூலம் பண வரவு வரும், ஆனால் பண இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து போக வேண்டும், இன்று மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக வரும்.  பெற்றோரின் ஆறுதல் தேவைப்படும். சிறப்பான ஆரோக்கியம் உண்டு. உதவி!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இதுவரை மனவருத்தம் அளித்த தருணம் அகலும் நேரமாக இன்று இருக்கும்,  பணியில் அதிகமான வேலைகள் இருக்கும், புதிய தருணமாக பணியிடத்தில் இருக்கும். பண வரவு இருக்கும், ஆனால் சேமிப்பு என்பது இருக்காது. 

குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு இருக்கும், ஒற்றுமை அடிப்படாது. இரத்த சொந்தத்துடன் சிறிய மனஸ்தாபங்கள் உருவாகி மறையும். ஆரோக்கியத்தில் செரிமானம் சார்ந்த பிரச்சனை வரும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று இருக்கும் தெளிவான மனநிலை சுயமாக சிந்தித்து பல புதிய யுக்திகளைத் தொழிலில் கையாளும், இன்றைய தினம் வேலைகள் மும்முரமாக நடக்கும்.  வியாபாரத்தில் ஓரளவு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிகமான செலவுகள் இன்று இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் சிறிய சண்டைகள் மனதை வருத்தம் அடைய செய்யும், மனதில் வருத்தம் அளிக்கும்.  காதல் வாழ்க்கையில் பெரிய பிரச்சனை இருக்காது. ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த பிரச்சனை இருக்கும். தெளிவு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று அலுவலகத்தில் அதிகப்படியான வேலைகள் இருக்கும், உடல்நலத்தில் சிறிய தொல்லைகள் அளிக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் காரணமாக அலைச்சல் இருக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் இன்று  அதிகமான கலந்துரையாடல் இருக்கும், பணியில் இருக்கும் சோர்வு வீட்டில் சிறிய மன வருத்தத்தை அளிக்கும். காதல வாழ்வில் நல்லுறவு அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சோர்வு! 

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் செயல் இன்று சில மனவருத்தத்தை அளிக்கும், பொறுமையாக நடந்து கொள்வது அவசியம். அலுவலகத்தில் உணர்ச்சிவசத்தால் அதிக பிரச்சனையை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். பணிச்சுமை கொஞ்சம் தொல்லையாக இருக்கும். நிதி வளர்ச்சி வழக்கம்போல் இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், குடும்பத்தினருடன் மாலை நேரத்தில் இன்பமாக இருப்பீர். இன்று காதல் வாழ்வில் முக்கியமான பேச்சு வார்த்தை வேண்டாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தடங்கல்! 

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

நீங்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும், தொழிலில் சில ஏமாற்றங்களும் நடக்கும், அதை சரி செய்ய அனுபவம் வாய்ந்த மனிதர்களின் உதவி கிடைக்கும். உங்களின் தைரியம் இன்று வேலையில்  உறுதியாக இருக்கும். பண வரவு

உண்டு.

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக நகரும், குடும்ப செலவுகள் மட்டும் கவலை அளிக்கும். நண்பர்களுடன் சந்தோஷமாகப் பொழுது கழியும். உடல்நலத்தில் கால் மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட தொல்லைகள் வரும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (02.09.2022, வெள்ளிக்கிழமை)

இதுபோன்ற கோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்