Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : அமைதியாக இருந்தால் நிம்மதியா இருக்கலாம்.... 20.09.2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi September 19, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan : அமைதியாக இருந்தால் நிம்மதியா இருக்கலாம்.... 20.09.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 3 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (20.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (20.09.2022, செவ்வாய்)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்றைய தினம் புரியாத ஒரு மனநிலை இருக்கும். ஆன்மீக நாட்டம் உதிக்கும். தொழிலில் புதிய ஐடியாக்கள் உருவாகும். உங்கள் கையில் பணப்புழக்கம் குறையும். சிறிய அளவு கடன்கள்  வாங்கும் நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையும், கவனம் சிதறும். 

குடும்பத்தினரின் அன்பு மனதிற்கு ஆறுதலாக இருக்கும். இல்லற வாழ்வில் சிறிய சண்டைகள் வரும். காதல் வாழ்வில் புரிதல் குறையும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட தொல்லைகள் வரும். வருத்தம்! 

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் கிடைக்கும் வெற்றி உங்களை நல்ல நிலைக்கு எடுத்து செல்லும். பணியிடத்தில் உங்கள்  புகழ் ஓங்கும், உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும். பண வரவு குறைவாக இருந்தாலும் நிதி நெருக்கடி இருக்காது. 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியாது. காதல் வாழ்வில் ஒற்றுமை பிறக்கும், திருமண பந்தமாக மாற்ற முயற்சி செய்யலாம். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். பாராட்டு! 

அதிர்ஷ்ட நிறம்:  இளமஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு வழக்கத்தை விட அதிகமாகக் கோபம் வரும். தொழில் ஸ்தானம் சுமுகமாக இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை, செல்வத்தை சேமிக்க முடியும்.

குடும்ப வாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத நாளாக இருக்கும், உங்கள் கோபம் குடும்பத்தில் சச்சரவு அளிக்கும். நண்பர்களுடன் கருத்து மோதல் ஏற்படும். உடல்நலம் நன்றாக உள்ளது.  சினம்! 

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம் 

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு முடிக்காத காரியங்களை முடிக்க அதிகமாக அலைய வேண்டியதாக இருக்கும். அலுவலகத்தில் வேலைகள் அதிகமாகும். அதிகமான நேரத்தை பணியில் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். நிதிநிலையில் பிரச்சனை இல்லை. 

குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும், கணவன் மனைவி உறவு நிம்மதியாக நகரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திடீர் பயணம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது, ஓய்வு தேவைப்படும். அலைச்சல்! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்:  9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் முயற்சி பலன் சரியாக இருக்குமா என்ற குழப்பம் உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கும். அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆலோசனை உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். தொழிலில் வேலைகள் வழக்கம் போல் செயல்படும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பர். செலவு இன்று வரவைக் காட்டிலும் அதிகமாகும். 

குடும்பத்தில் அனுசரித்துச் சென்றால் சந்தோஷமாக இருக்கலாம்.  காதல் வாழ்வில் பிரச்சனை இல்லை. சுற்றத்தாருடன் பொறுமையாக நடக்க வேண்டும், உறவினர் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் ஏற்பட்டு மறையும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று பணியிடத்தில் இருக்கும் வேலை சுமை மனதிற்கு பதட்டம் அளிக்கும். உங்களின் தெளிவான திட்டம் அலுவலக பணிகளை சிறப்பாக முடிக்கும். பண வரவு குறைவாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் அமைதி காக்க வேண்டிய நாளாகும். காதல் வாழ்வில் பொறுமை தேவைப்படும், சாதாரணமான பேச்சு சண்டையாக மாறலாம். குடும்ப செலவு அதிகரிக்கும்.  உடல்நலத்தில் அக்கறை வேண்டும். செலவு! 

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்