Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்காரருக்கு போராட்டம் தான்...! 20.09.2022 ராசிபலன் !

Manoj Krishnamoorthi September 19, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: இன்றைய தினம் இந்த ராசிக்காரருக்கு போராட்டம் தான்...! 20.09.2022 ராசிபலன் !Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 3 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (20.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் பழைய எண்ணங்கள் வருத்தம் அளிக்கும், பிறரின் ஆறுதல் மூலம் மனம் புத்துணர்ச்சி அடையும். பணியிடத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும்.  பணப்புழக்கம் நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்ககை இனிமையாக இருக்கும், வாழ்க்கை துணையின் அன்பு மனதிற்கு ஆனந்தம் அளிக்கும். நண்பர்களுடன் வெளியே செல்வீர். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. கவலை!

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் செய்யும் செயலில் கவனமாக இருக்க வேண்டும், தொழிலில் புதிய முயற்சி செய்வதை யோசித்து செய்யவும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகமாகும். பண வரவு இருக்கும் ஆனால் செலவு அதிகமாகும். 

குடும்ப வாழ்க்கை இன்று மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி உறவில் சிறிய கருத்து மோதல் உருவாகும். காதல் வாழ்வில் அமைதி காப்பது நன்மை அளிக்கும். உடல்நலத்தில் கால் சார்ந்த தொல்லைகள் வரும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்கள் முயற்சியில் இன்று பல தடங்கல் ஏற்படும், புதிய முயற்சிகள் வெற்றி காண பொறுமை வேண்டும். வேலையில் ஒற்றுமை தேவைப்படும். பயணத்தின்போது கவனம் வேண்டும். செல்வத்தைக் கவனமாக செலவு செய்ய வேண்டும்.

குடும்ப வாழ்க்கை புரிதல் இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை தடைகளை கடக்க உதவும். மாணவர்கள் கல்வியில் பிரச்சனை இல்லை, வழக்கம்போல் இயங்கும்.  உடல்நலத்தில் கவனம் வேண்டும், உடல்வலி போன்ற பிரச்சனை வரலாம். தடை! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

நீங்கள் எதிர்பார்க்காத வெற்றி இன்று கிடைக்கும், தொழிலில் நல்ல மதிப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மீது நல்ல மதிப்பு பிறக்கும்.  சுய தொழிலில் நிலையான அங்கிகாரம் கிடைக்கும். ஓரளவு நல்ல பண வரவு உண்டு. 

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்.  காதல் வாழ்வில்  உங்கள் உணர்ச்சிவம் புரிதலை பாதிக்கும். நண்பர்களுடன் நிம்மதியாக பொழுதைக் கழிக்க முடியும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அதிர்ஷ்டம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் மனதில் ஏற்படும் தயக்கம் சிறிய குழப்பத்தை அளிக்கும். தொழில் ஸ்தானத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. பண வரவு இருக்கும், தேவையில்லாத செலவுகள் அதிகமாக இருக்கும். 

காதல் வாழ்வில் இன்று திருப்தி இருக்காது. குடும்பத்தினரின் மனதை புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்க முடியும். வயிறு சார்ந்த பிரச்சனை வரும். போராட்டம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று நீங்கள் வழக்கத்தை விட சந்தோஷமாக இருப்பீர், நீங்கள் கை வைக்கும் செயல் ஜெயமாகும். பணியிடத்தில் குறித்த வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்.  வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு, வருமானம் உயரும். 

கணவன் மனைவி உறவில் நல்லுறவு இருக்கும்.  காதல் வாழ்வில் இன்றைய தினம் சிறந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சுறுசுறுப்பாக செயல்படுவீர். இன்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (20.09.2022, செவ்வாய்க்கிழமை)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்