Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்று இந்த 2 ராசிக்காரர் நிலைமை டாப் தான்... 21.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 20, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan: இன்று இந்த 2 ராசிக்காரர் நிலைமை டாப் தான்... 21.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 4 ஆம் நாள் புதன்கிழமை (21.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:30- 10:30 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக பொழுதைக் கழிப்பீர். மனநிலை தெளிவாக இருக்கும்.  பணியிடத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். செல்வ நிலையில் கவனம் வேண்டும், செலவு அதிகரிக்கும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். இல்லற வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், அமைதியாக செல்வீர். காதல் வாழ்வில் இன்றி பிரச்சனை வராது. ஆரோக்கியத்தில் அக்கரை வேண்டும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் இனிமையான பேச்சாற்றல் இன்று பணியிடத்தில் சந்தோஷமான சூழலை உருவாக்கிவிடும். மனம் உற்சாகமாக வேலை பார்க்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். 

காதல் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும், ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் அனைவருடனும் நெருக்கமாவீர். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.  ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் வழக்கமான வேலைகள் எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், பணிகள் சுமுகமாக நடக்கும். நண்பர்களுடன் முக்கிய விஷயத்திற்காக ஆலோசிப்பீர். புதிய மனிதரின் சந்திப்பு உண்டு. 

குடும்ப வாழ்க்கை அமைதி காக்க வேண்டும், கணவன் மனைவி உறவில் கருத்து மோதல் ஏற்படலாம். மாணவர்கள் சக மாணவருடன் சேர்ந்து படிப்பர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும்.  நட்பு! 

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்:  3 

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்ட உங்களுக்கு இன்றைய ஆன்மிக ஸ்தலம் செல்ல தோன்றும். அலுவலகத்தில் வேலைகள் வழக்கம்போல் செயல்படும்.  தொழிலில் மிதமான நிலை தான் இருக்கும், பெரிய வளர்ச்சி இருக்காது. பண விஷயத்தில் சாதுரியம் தேவை. 

குடும்ப வாழ்க்கை சுமுகமாக செல்லும், குடும்பத்தினருடன் வருங்கால தேவையைக் குறித்து கலந்துரையாடுவீர். காதல் வாழ்வில் நிம்மதி பிறக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தாயின் ஆரோக்கியத்தில் பிரச்சனை வரலாம். நலம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். தொழிலில் எடுக்கும் புதிய முயற்சி நல்ல பலன் அளிக்கும்.  அலுவலகத்தில் சக பணியாளருடன் ஒற்றுமையாக  பணியாற்றுவீர். பண வரவு குறைவாக இருக்கும் ஆனால் செலவு அதிகமாக இருக்கும். 

 

இல்லற வாழ்வில் இன்றைய தினம் மாறுபட்டு இருக்கும், கணவன் மனைவிக்குள் அமைதி நிலவும். நண்பர்களின் உதவி உங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி பெற்று தரும். உடல்நலத்தில் கால் சார்ந்த தொல்லைகள் ஏற்படும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை 

அதிர்ஷ்ட எண்:  4

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகும், எதிர்பார்க்காத இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும்.  அலுவலகத்தில் சக பணியாளர் மூலம் உங்களுக்கு ஆதாயம் உண்டு. சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். கணமான பணப்புழக்கம் உண்டு.

காதல் வாழ்வில் பிரச்சனை இல்லை, திருமண பந்தமாக மாறும் பேச்சு வார்த்தை நடக்கும். குடும்பத்தினருடன் பொழுதை செலவிட நினைப்பீர். உடல்நலம் நன்றாக உள்ளது. ஆதாயம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (21.09.2022, புதன்கிழமை)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்