Wed ,Apr 24, 2024

சென்செக்ஸ் 74,026.30
287.85sensex(0.39%)
நிஃப்டி22,458.35
90.35sensex(0.40%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்றைய தினம் கிடைக்கும் சலுகை இவருக்கு அதிர்ஷ்டம் தான்... 21.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 20, 2022 & 14:15 [IST]
Nalaya Rasi Palan : இன்றைய தினம் கிடைக்கும் சலுகை இவருக்கு அதிர்ஷ்டம் தான்... 21.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி 4 ஆம் நாள் புதன்கிழமை (21.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:30- 10:30 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (21.09.2022, புதன்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று  நீங்கள் விரும்பும் நாளாக காட்சி அளிக்கும், பணிகள் உற்சாகமாக நடக்கும். புதிய யோசனைகள் பல நடைமுறையாக மாறும். சுய தொழிலில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும்

குடும்ப வாழ்க்கை கலகலப்பாக இருக்கும், வீட்டில் அதிக நேரம் செலவிடுவீர். குடும்பத்தினருடன் ஆன்மீக ஸ்தலத்திற்கு செல்லுவீர்.  கணவன் மனைவி உறவு அனுசரணையாக செல்லும். உடல்நலம் சிறப்பாக உள்ளது. பக்தி! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் அலுவலகத்தில் நீங்கள் யதார்த்தமாக செய்யும் காரியம் நல்ல வளர்ச்சி அளிக்கும்.  வியாபாரத்தில் பெரிய லாபம் இருக்காது ஆனால் முதலீடு அதிகரிக்கும். செல்வத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், கணவன் மனைவி உறவில் நட்பான பேச்சு வார்த்தை ஆறுதல் அளிக்கும். குடும்ப உறுப்பினர் ஆலோசனை தொழிலில் நல்ல பலன் அளிக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும், மருத்துவ செலவு ஏற்படலாம். நற்செயல்! 

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று சுற்றத்தாருடன் உங்கள் நட்பு நன்றாக இருக்கும். தொழிலில் வெற்றி காண மும்முரமாக வேலை செய்வீர்கள். அலுவலகத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். புதிய திட்டங்கள் வகுக்க வேண்டிய நிலை ஏற்படும். பணம் வரவு நன்றாக உள்ளது, ஆனால் சேமிப்பு இருக்காது. 

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்வில் உணர்ச்சிவசம் ஆகாமல் பொறுமையாக இருப்பது நல்லது. கல்வியில் ஆர்வம் குறையும். உடல்நலத்தில் சிறிய கோளாறு ஏற்படும். பாசம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது, தொழிலில் விரத்தி ஏற்படும். பணியின் மீது ஈர்ப்பு இருக்காது.  மேலதிகாரியிடம் மோதல் ஏற்படலாம், பொறுமை காக்க வேண்டும். பணப்புழக்கம் ஓரளவு நன்றாக உள்ளது.

இல்லற வாழ்க்கையில் பொறுமையாக இருந்தால் மகிழ்ச்சி குறையாது. காதல் வாழ்வில் இன்பம் குறையும். நண்பர்களுடன் கருத்து மோதல் ஏற்படும். ஆரோக்கிய குறை ஏற்படும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வருத்தம்! 

அதிர்ஷ்ட நிறம்:  இள மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  4

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் உடல் ஓய்வை எதிர்பார்க்கும். அலுவலகத்தில் சக பணியாளரின் உதவி வேலை அழுத்தத்தை குறைக்கும்., பணியில் உங்களின் அறிவுரை படி செயல்கள் நடக்கும்.  நிதிநிலை சிறப்பாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், குடும்பத்தில் பெரியவர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். வீட்டில் இன்று நட்பான கருத்து பரிமாற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஓய்வு! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1  

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் நிதானமாக பணியாற்றினால் நிச்சியம் வெற்றி பெறலாம்.  சக பணியாளர் ஆலோசனை மிகப்பெரிய பலமாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். பணப்புழக்கம் போதுமான அளவு கையில் இருக்காது, பிறரிடம் நிதி உதவி எதிர்பார்ப்பீர். 

கணவன் மனைவி உறவில் சிறிய அசௌகரிய நிலை ஏற்படும், சுற்றத்தார் கருத்து பிரச்சனை உருவாக்கும். தந்தை மகன் உறவில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, ஒருசிலருக்கு தலைவலி அல்லது உடல் சோர்வு வரலாம். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்