Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்றைய தினம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்.. 22.09.2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi September 21, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan : இன்றைய தினம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்.. 22.09.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 5 ஆம் நாள் வியாழக்கிழமை (22.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 12:15- 01:15 வரை

மாலை: 06:30- 07:30  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (22.09.2022, வியாழன்)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் மனதில் பிறக்கும் நம்பிக்கை தொழிலில் கவனம் செலுத்த தூண்டும். அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். வாழ்க்கை வளர்ச்சி பாதையில் செல்லும். நிதிநிலை நன்றாக உள்ளது. 

வாழ்க்கை துணையுடன் சுமுகமான உறவு இருக்கும். வீட்டில் பெற்றோருடன் சந்தோஷமாக பேசுவீர். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் , இனிமையான ஞாபகங்கள் பிறக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ஊக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும், மனதிற்கு விருப்பமானவருடன் வெளியே செல்லுவீர். பணியில் மகிழ்ச்சியாக வேலை செய்வீர், சாதகமான பலன் கிடைக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது, செலவை சமாளிக்கும் அளவு பணப்புழக்கம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கை சந்தோஷம் அதிகமாகும். வீட்டின் பராமரிப்பாக சிறிய செலவு ஏற்படும்.  காதல் வாழ்வில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்:  சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று நீங்கள் சிறிய அசதியில் இருப்பீர். அலுவலக வேலைகளில் சிறிய தொய்வு ஏற்படும். சக பணியாளரின் ஆறுதல் கிடைக்கும். வியாபாரத்தில் நாணயமான பங்களிப்பாளர் கிடைப்பர். நிதி உதவி தேவைப்படும், பணத்தை நிதானமாக செலவு செய்ய வேண்டும்.

காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வருங்கால பயம் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். வீட்டில் பெரியவரினறிவுரை ஆறுதலாக இருக்கும். ஆரோக்கியத்தில் கண் சார்ந்த பிரச்சனை வரலாம், கவனமாக இருக்க வேண்டும். பாசம்! 

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அமைதியாக பொழுதை செலவிடுவீர். தொழில் ஸ்தானத்தில் சவாலான தருணங்கள் உருவாகும். பணியில் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க அதிகம் போராட வேண்டியதாக இருக்கும். பணப்புழக்கம் பெரியளவு இருக்காது ஆனால் எதிர்பார்க்காத பண வரவு நிம்மதி அளிக்கும்.

 

வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ளுவீர். குடும்பத்தில் வெளிப்படையான கலந்துரையாடல் இருக்கும். கல்வியில் ஆர்வம் குறையும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். விருத்தி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  5

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று நிம்மதியான  நாளாகும், தொழிலில் சக பணியாளருடன் ஒற்றுமையாக பணியாற்றுவீர். புதிய யோசனைகள் பல பிறக்கும். வியாபாரம் ஓரளவு நன்றாக இருக்கும். பணப்புழக்கம் போதுமான அளவு இருக்கும்.

குடும்பத்தினரின் ஆதரவு நிம்மதி அளிக்கும். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் சந்தோஷமாக நாள் நகரும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. தெளிவு! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம்  வியாபாரம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகும். அலுவலகத்தில் வழக்கமான வேலைகள் சுமுகமாக செல்லும். கடினமான வேலைக்கு எளிய வழி கண்டுபிடிப்பீர். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி உண்டு. 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், கணவன் மனைவி உறவி நட்பு அதிகரிக்கும்.  கல்வியில் சிறப்பான வளர்ச்சி உண்டு, மாணவர்களுக்கு பாராட்டு உண்டு. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்