Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பொறுமை இழந்தால் இன்று வீண் வம்பு தான்.. 22.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 21, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: பொறுமை இழந்தால் இன்று வீண் வம்பு தான்.. 22.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 5 ஆம் நாள் வியாழக்கிழமை (22.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:  12:15- 01:15 வரை

மாலை: 06:30- 07:30  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனதில் இறை நாட்டம் அதிகமாக இருக்கும், ஆன்மிக ஸ்தலத்தில் நேரம் செலவிட நினைப்பீர். பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்காது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாது.  பண வரவு குறைவாக இருக்கும். பணப்பரிமாற்றத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டில் கருத்து மோதல் ஏற்படும். கணவன் மனைவி உறவில்  சண்டைகள் ஒற்றுமை அளிக்கும். காதல் வாழ்வில் சந்தோஷம் இருக்கும். ஆரோக்கியத்தில் கால் வலி இருக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும், வேலை அழுத்தம் பெரியதாக இருக்காது. அலுவலகத்தில் எந்த குறுக்கிடு இல்லாமல் நடக்கும். ஓய்வு கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். கையில் போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், வீட்டில் அனைவருடன் மகிழ்ச்சியான உரையாடல் இருக்கும். நண்பர்களுடன் வெளியே செல்ல வாய்ப்பு உள்ளது. உடல்நலம் நன்றாக உள்ளது. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று நீங்கள் சில புதிய மனிதர்களை சந்திக்கும் நிலை ஏற்படும், உங்களின் தொழிலில் புதிய திருப்பமாக இன்று இருக்கும். அலுவலகத்தில் வேலைகள் முழுமூச்சாக நடக்கும். அதிக நேரம் வேலையில் செலவிட வேண்டியதாக இருக்கும். பண வரவு குறையும். 

வீட்டில் அமைதியாக இருப்பீர். காதல் வாழ்வில் இன்று வித்தியாசமான நடவடிக்கை இருக்கும். மாணவர்களுக்கு அதிக நேரம் படிப்பில் செலவிடுவர், விளையாட்டு குறையும். உடலில் மூட்டு மற்றும் முதுகு பகுதியில் பலி ஏற்படும். பணிவு! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் யோசனையை நடைமுறைப்படுத்த  பல வழிகளில் சிந்திப்பீர். தொழில் ஸ்தானத்தில் வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பணம் வழக்கத்தை விட அதிகமாக செலவாகும். 

காதல் வாழ்க்கையில் முக்கிய முடிவு எதுவும் எடுக்க வேண்டும். கணவன் மனைவி உறவு வருங்கால யோசனை பதட்டத்தை உருவாக்கும். உடல்நலத்தில் சருமம் சார்ந்த பிரச்சனை வரும். சிந்தனை! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் உங்களை கோபமாக்கும். இன்றைய தினம் பொறுமையாக இருப்பது நல்லதாகும், பணியில் சில தவறுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் பார்க்க போராட வேண்டும். பண வரவு பெரிய அளவு இருக்காது, செலவுகள் அதிகமாகும். 

வீட்டில் குடும்பத்தினருடன் சிறிய விஷயத்திற்கு சண்டை செய்வீர். நட்பில் பிளவு ஏற்படலாம், அமைதியாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் வந்து மறையும். சினம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் தொழிலில் இன்று செய்யும் செயல் நல்ல முன்னேற்றமாக அமையும். அலுவலகத்தில் பதவி உயர்வு போன்ற முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். சுய தொழிலில் உங்கள் புகழ் அதிகமாகும். சிறப்பான பணப்புழக்கம் உண்டு. 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், நட்பான அணுகுமுறை இல்லற வாழ்வில் சந்தோஷம் அளிக்கும். காதல் வாழ்வில் அன்பு அதிகரிக்கும், நல்ல புரிதல் உண்டாகும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (22.09.2022, வியாழன்)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்