Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: செலவு கட்டுப்படுத்த இன்று பெரும்பாடாக இருக்கும்... 23.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 22, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: செலவு கட்டுப்படுத்த இன்று பெரும்பாடாக இருக்கும்... 23.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 6 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (23.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:12:15- 01:15 வரை

மாலை: 06:30- 7:30 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

சாதாரண நிகழ்வுகளுக்கும் இன்று நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர், ஆரோக்கியத்திற்கு கேடாக மாறும். பணியிடத்தில் வேலைகள் அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் பெரியளவு இருக்காது. தேவையற்ற செலவைக் குறைத்து கொள்ளவும்.

குடும்ப வாழ்க்கையில் தகராறு வரும், வார்த்தைகளில் கவனம் தேவை. காதல் வாழ்வில் அமைதியாக இருக்க வேண்டும், அவசர முடிவு எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு  

அதிர்ஷ்ட எண்:  6

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு நிதானம் தவறினால் ஆபத்தாக மாறும். தொழில் ஸ்தானத்தில் பெரிய முதலீடுகளை ஆராய்ந்து செய்ய வேண்டும். அலுவலகத்தில் இன்று இறுக்கமான சூழல் இருக்கும்.  பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

குடும்ப உறுப்பினருடன் நட்பாக பழகுவீர். குடும்பத்தினரின் தேவையை ஓரளவு நிறைவேற்ற முடியும்.  நட்பு வட்டாரம் பலமாகும். காதல் வாழ்வில் பிரச்சனைகள் இருக்காது. ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. பேராசை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் நல்ல வளர்ச்சி பிறக்கும். பணியில் உங்கள் தனித்திறமை வெளிப்படும். சக பணியாளரிடம் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

இல்லற வாழ்க்கையில் நேர்மறை வாக்குவாதம் ஏற்படும். வெளிப்படையான பேச்சு நிம்மதி அளிக்கும். காதல் வாழ்வு சுமுகமாக செல்லும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, மனம் அமைதி தேடும். உயர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று மனம் மிகவும் தெளிவாக இருக்கும், தொழில் செயல்படுத்த பல புதிய யுக்திகள் பிறக்கும். பணியிடத்தில் இருக்கும் வேலைகளை எளிதில் முடிக்கும் வழிகள் பிறக்கும். சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணப்புழக்கம் போதுமான அளவு இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது, குடும்பத்தினரின் மனதை புரிந்து கொள்வீர். காதல் வாழ்வில் நிதானமாகப் பேச வேண்டும், வீண் வாக்குவாதம் வரும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தெளிவு! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் உங்களுக்கு சில அசௌகரியங்களைக் கொடுக்கும், ,மனம் குழப்பம் அடையும்.  தொழிலில் கவனம் குறையும். அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். பணம் வழக்கத்தை விட அதிகமாக செலவாகும்.

கணவன் மனைவி உறவில் அமைதி குறையும். காதல் வாழ்வில் சந்தேகம் உறவில் விரிசல் உருவாக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.  மாணவர்களுக்கு கல்வி கவனம் சிதறும். தூக்கமின்மை பிரச்சனை இருக்கும்.  கவனம்! 

அதிர்ஷ்ட நிறம்:  அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்கள் தொழில் ஸ்தானத்தில் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக சிலரின் நடவடிக்கை இருக்கும். இலக்கை அடைய இன்று விடாமுயற்சி தேவைப்படும். உங்கள் வியாபாரத்தில் திருப்தி இருக்காது. பண வரவு வழக்கம்போல இருக்கும் ஆனால் புதிய செலவுகள் அதிகமாகும்.

 

வீட்டில் நல்ல உறவு பிறக்கும், குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பீர். கணவன் மனைவி உறவில் நட்பான அணுகுமுறை இருக்கும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்.  உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இருக்காது, சிலருக்கு வயிறு சார்ந்த தொல்லைகள் இருக்கும். செலவு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (23.09.2022, வெள்ளிக்கிழமை)

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்