Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,130.69
-617.73sensex(-0.85%)
நிஃப்டி21,849.60
-206.10sensex(-0.93%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan :  என்னதான் இன்பமான வாழ்க்கை இருந்தும் அனுபவிக்க முடியாது... 24.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 23, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan :  என்னதான் இன்பமான வாழ்க்கை இருந்தும் அனுபவிக்க முடியாது... 24.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி 7 ஆம் நாள் சனிக்கிழமை (24.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (24.09.2022, சனிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நிம்மதியாகப் பொழுதை செலவிட முடியும், மனம் உற்சாக இருக்கும். வேலைகள் பெரியதாக இருக்காது. பணியிடத்தில் மிதமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் சுமுகமாக நடக்கும். தன லாபம் உண்டு. 

வாழ்க்கை துணையுடன் வெளியே செல்லுவீர். குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியும். காதல் வாழ்வில் புரிதல் உண்டாகும். மாணவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியம் நன்றாக உள்ளது. சுகம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

வழக்கத்தை விட இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர். தொழிலில் வேலைகள் மும்முரமாக நடக்கும்.  அலுவலகத்தில் இன்று உங்களின் முக்கியத்துவம் அதிகமாகும், சக பணியாளர் மூலம் புகழ் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். உங்கள் நேர்மையான நடத்தை காதல் வாழ்வில் மதிக்கப்படும். திருமண பந்தத்தில் புரிதல் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு புதிய முயற்சி செய்ய யோசிக்க வைக்கும். சிறப்பான ஆரோக்கியம் உண்டு.  ஆக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு  

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று புதிய முயற்சிகள் செய்யும் முன் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். தொழில் ஸ்தானத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் இன்று அதிக நேரம் செலவாகும். பண விஷயத்தில் கவனம் தேவை, கடன் வாங்குவீர்.

இல்லற வாழ்வில் பொறுமை தேவை, விரிசல் ஏற்படும்.  நட்பு வட்டாரம் பெரியதாகும், புதிய மனிதர் சந்திப்பு கிடைக்கும். ஆரோக்கியம்  கவனம் தேவை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். கவனம்! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மிக மிக உஷாராக இருக்க வேண்டிய நாலாகும், புதிய செயல்கள் தொடங்க வேண்டும். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வதை தவிர்க்கவும். பணியிடத்தில் இன்று வேலைகள் சரியாக செல்லாது, நிதானமாக இருக்க வேண்டும். பணம் அதிகமாக செலவாகும்.

 

குடும்பத்தினரின் நட்பான அணுகுமுறை மனதில் ஆறுதல் அளிக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். காதல் வாழ்வில் ஏமாற்றம் ஏற்படும். உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும், உடல்நல கோளாறு ஏற்படும். நஷ்டம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்:  9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு மற்றவர்கள் செய்யும் செயல் சாதகமாக அமையும். தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும்.  கல்வியில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவு நன்றாக உள்ளது.

குடும்பத்தினர் மூலம் பெருமை கிடைக்கும். இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் உண்டு. காதல் வாழ்வில் சந்தோஷம் இரட்டிப்பாகும். இல்லறத்தில் புரிதல் அதிகமாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. பெருமை! 

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் ஒருவித பதற்றம் இருக்கும், புதிய முயற்சி செய்ய தயக்கம் கொள்ளும். பணி நிமித்தமான சந்திப்பு உண்டு. வேலை அழுத்தம் அதிகமாகும், தெளிவான திட்டம் தேவைப்படும். பணப்புழக்கம் பெரியதாக இருக்காது. 

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் பெரியவர்களின் அறிவுரை தேவைப்படும். நண்பர்களின் உதவி தேவைப்படும். கல்வியில் கவனம் தேவை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்:  நீலம் 

அதிர்ஷ்ட எண்: 4

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்