Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,117.20
-631.22sensex(-0.87%)
நிஃப்டி21,846.20
-209.50sensex(-0.95%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: அமைதியான நாள் நிம்மதி அளிக்கும்....25.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 24, 2022 & 14:05 [IST]
Nalaya Rasi Palan: அமைதியான நாள் நிம்மதி அளிக்கும்....25.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 8 ஆம் நாள் ஞாயிறு (25.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 01:30- 2:00  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர் தேடி வருவர். அலுவலகத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு உண்டு. மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த நல்ல தகவல் கிடைக்கும். கையில் கணமான பணப்புழக்கம் உண்டு. 

குடும்பத்தினர் வார்த்தைகள்  நிம்மதி அளிக்கும். காதல் வாழ்வில் முக்கியமான முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். உடல்நலத்தில் கவனம் தேவை. தனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் புதிய மனிதரின் சந்திப்பு நல்ல அனுபவமாக இருக்கும். தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் பார்க்க பல தடைகளை கடக்க வேண்டும். கல்வியில் ஓரளவு வளர்ச்சி இருக்கும், ஆனால் போராட்டம் அதிகமாக இருக்கும். செலவை குறைத்து கொள்வது நல்லது.

வீட்டில் உங்களின் மனதை காயப்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும். காதல் வாழ்வில் நிம்மதி குறையும், வாக்குவாதம் அதிகமாகும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

தொழிலில் ஏற்படும் தடை உங்களை கோபமாக்கும். ஆத்திரத்தில் நல்ல நழுவவிடுவீர். எதிர்பாராத பயணம் உண்டு. பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை, புதிய இடத்தில் முதலீடு செய்வதை குறைத்து கொள்ள வேண்டும். 

 

திருமண வாழ்க்கை அமைதியாக நகரும். காதல் விவகாரம் பிரச்சனைகளை உருவாக்கும். சொந்தத்தின் மூலம்  நீண்ட காலமாகக் காத்திருந்த நல்ல தகவல்கள் கிடைக்கும். உணவில் கவனமில்லாமல் இருந்தால் உடல் நலத்திற்குப் பாதிப்பாகும். சினம்! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு பழைய வேலைகளை செய்வதிலே நேரம் ஓடி விடும்.  வேலைகள் அதிகமாக இருக்கும் ஓய்வு நேரம் குறையும். உங்கள் வேலையை முடிக்க பிறரின் உதவி தேவைப்படும். வியாபாரம் சுமுகமாக நடக்கும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை. 

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். திருமண  பந்தம் நிம்மதியாக செல்லும்.  நண்பர்கள் உதவி தேவைப்படும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும். அசதி! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவரின் உதவி அதிகமாகக் கிடைப்பதால் வேலை பழு குறையும். பண வரவு நன்றாக இருக்கும், வருமானம் உயரும். 

திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும், கணவன் மனைவி உறவில் புரிதல் அதிகமாகும்.  கல்வி நிலையில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, நலமான உடல்நலம் இருக்கும்.  வரவு! 

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களுக்கு இருக்கும்  தெளிவான சிந்தனை தொழிலில் சரியான திட்டங்கள் தீட்டி வருமானத்தை உயர்த்தும், தொழிலில் அசுர வளர்ச்சி உண்டு. மனம் மற்றும் உடல் இரண்டுமே ஒருநிலை செயல்பட்டு வேலையில் முன்னேற்றம் அளிக்கும். கனமான பண வரவு உண்டு, சேமிக்க முயலவும். 

வீட்டில் இனிமையாக நடந்து கொள்ளுவீர்கள். கல்வி நிலையில் பிரச்சனையில்லை. மருத்துவ செலவுகள் வரும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்