Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,058.11
-690.31sensex(-0.95%)
நிஃப்டி21,832.60
-223.10sensex(-1.01%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: செலவை குறைத்தால் இன்று பிரச்சனை இல்லை.. 25.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 24, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan:  செலவை குறைத்தால் இன்று பிரச்சனை இல்லை.. 25.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 8 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (25.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 01:30- 2:00  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (25.09.2022, ஞாயிறு)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கையில் வரும் பணம் இருக்கும் இடம் தெரியாமல் செலவாகும், ஆடம்பர பொருள் வாங்குவீர். வியாபாரத்தில் வேலை அதிகமாகும், ஓய்வு நேரம் குறையும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு, சக மாணவர்களின் பாராட்டு கிடைக்கும். 

வீட்டில் இருக்கும் நேரம் குறையும். இல்லற வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். காதலர்களுள் புரிதல் அதிகமாகும், முக்கியமான உரையாடல் இருக்கும். குடும்ப உறுப்பினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.செலவு! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வேலை செய்வதை காட்டிலும் மனம் ஓய்வு எதிர்பார்க்கும். சுய தொழில் சற்று மந்தமாக இருந்தாலும் நஷ்டம் வராது. பணப்புழக்கம் செலவை சமாளிக்கும் அளவு இருக்கும். 

நட்பு வட்டாரம் நன்றாக உள்ளது. குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏதுவுமின்றி நிம்மதியாகப் போகும்.  புதிய கல்வி ஞானம்  கிடைக்கும். உணவு கட்டுப்பாடு அவசியம், வயிறு சார்ந்த தொல்லைகள் ஏற்படும். இன்பம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் தொழில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்று ஓய்வு நேரம் இருக்கும், ஓய்வு நேரத்தில் மனம் விரும்பும் நபருடன் ஆனந்தமாக இருப்பீர்கள். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது. 

திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாளாகும், வீட்டில் ஆனந்தம் அதிகமாகும்.  காதல் விவகாரம் நிம்மதியாக நகரும். பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் அதிகமாகும்.  ஆரோக்கியத்தில் சற்று கவனம் கொள்வது நல்லது. ஆசை! 

அதிர்ஷ்ட நிறம்: 

அதிர்ஷ்ட எண்: 

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் யாருடனும் தகராறு செய்யாமல் நிதானமாக இருந்தால் சந்தோஷம் நிலவும். அனுபவம் வாய்ந்தவரின் அறிவுரை நெகட்டிவ் எண்ணங்கள் மறைத்து லட்சிய பாதையில் அடி எடுத்து வைக்க உதவும். இன்று செலவில் கவனமாக இருக்க வேண்டும். 

இல்லற வாழ்க்கை நிம்மதியாக செல்லும். ஆன்மிக ஸ்தலம் செல்லும் வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்வில் செலவு அதிகமாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நிதானம்! 

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 6 

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று நடக்கும் எதிர்பாராத சம்பவங்களால் இன்று உங்களின் மனதை ஆனந்தமாக்கும். அலுவலகத்தில் பணிகள் சுமுகமாக தாமதமின்றி சரியாக நடக்கும். பண வரவு இருக்கும் செல்வம்  அதிகரிக்கும். 

குடும்ப வாழ்வு சிறப்பாக உள்ளது. வீட்டில் அதிக நேரம் செலவிட முடியும். முதிய வயதினருக்கு உடல்நலத்தில்  நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலருக்கு தூக்கமின்மையால் உடல் சோர்வடையும். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இதுவரை தொழிலில் இருந்து சலிப்புக்கு ஒரு தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலைக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். வண்டி வாகனத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருப்திகரமான பணப்புழக்கம் உண்டு, ஆனால் தேவையற்ற செலவு வரும். 

குடும்பத்தினரின் ஆலோசனை தொழிலில் நல்ல பலன் அளிக்கும். மாலை நேரம் இனிமையாக அமையும்.  உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. நிறைவு! 

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்