Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,058.11
-690.31sensex(-0.95%)
நிஃப்டி21,832.60
-223.10sensex(-1.01%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan :  இன்று பேசாமல் இருந்தால் பல பிரச்சனை அகலும்...26.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 25, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan :  இன்று பேசாமல் இருந்தால் பல பிரச்சனை அகலும்...26.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி 9 ஆம் நாள் திங்கட்கிழமை (26.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 07:30- 08:30 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (26.09.2022, திங்கட்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் அலுவலகத்தில் வேலைகள் அதிகமாக இருந்தாலும் மனம் ஓய்வு எதிர்பார்க்கும். வியாபாரத்தில் லாபம் குறையும், ஆனால் செலவை சமாளிக்கும் அளவு கையில் பணப்புழக்கம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் அலட்சிய போக்கு சண்டையாக மாறும். காதல் வாழ்க்கையில் வருங்கால சார்ந்த உரையாடல் அதிகமாகும். நண்பர்களின் உதவி தேவைப்படும், உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். ஓய்வு! 

அதிர்ஷ்ட நிறம்:  இள மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 5 

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

தொழில் ஸ்தானம் வெற்றி பாதையில் நகரும்.  கல்வி நிலை சிறப்பாக உள்ளது, வெளியூரில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். நிதி நிலையில் சரிவு ஏற்படும். பணத் தேவைகளை பூர்த்தி செய்ய  கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.

குடும்ப வாழ்வு இயல்பாக இருக்கும், குடும்பத்தினரின் ஆலோசனை குடும்பத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.  இன்று ஆரோக்கியத்தில் அதீத கவனம் வேண்டும், திடீரென உடல் குறை ஏற்படும். பிரீதி! 

அதிர்ஷ்ட நிறம்: இள சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களின் இன்பமான மன நிலை அலுவலகத்தில் நட்பான சுழலை உருவாக்கும். பணிகளை சக பணியாளர் உதவியில் விரைவாக முடிக்க முயற்சி செய்வீர்கள்.  வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டு, வியாபாரம் சார்ந்த பயணம் உண்டு. பண வரவு உண்டு.

வீட்டில் பொறுமையாக  இருக்க வேண்டும். காதல் வாழ்வில் உங்கள் நட்பான அணுகுமுறை உறவை பலப்படுத்தும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, சிலருக்கு உடற்பயிற்சியில் ஆர்வம் தோன்றும். நட்பு! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று சாதகமான நாளாகும், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில்  வேலைகள் சுமுகமாக நடக்கும். மனம் தெளிவாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மிகவும் நன்றாக  இருக்கும். கையில் கணமான பண வரவு இருக்கும், கடன் குறையும். 

கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம்  இருக்கும், எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்வதைப் பற்றி சிந்திப்பீர்கள். இன்று  நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உடல்நலத்தில் மூட்டு சார்ந்த தொல்லைகள் வரும். அன்பு! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  2

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் ஏற்படும் பலவித எண்ணங்கள் வேலையை பாதிக்கும். தெளிவான திட்டமிடல் நேரத்தை விரையமாக்காது. அலுவலக பணிகள் நிலுவையில் கிடக்கும், சிலருக்கு சலிப்பு உருவாகும்.  பணப்புழக்கம் நன்றாக இருக்கும் ஆனால் செல்வம் கையிஒல் நிற்காது. 

வீட்டில் வார்த்தைகளால் சண்டைகள் உருவாகும்,  திருமண வாழ்வில் துணையுடன் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பீர்கள். சுற்றத்தார் உடன் மன வருத்தம் ஏற்படும். உடல்நலம் அக்கறை தேவை. பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில்  மேலதிகாரி நிர்மாணித்த இலக்கை எளியதாக முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் நாணயமான பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் குறையும். செல்வ நிலை  நல்ல வளர்ச்சி கொள்ளும். 

 குடும்பத்தில் இன்பம் அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். உடல்நலத்தில் சிறிய கவனம் காட்டுங்கள், தூக்கமின்மை மிகப்பெரிய பிரச்சனையாக மாறும்.  அதிர்ஷ்டம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்