Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : நிதனமாக இருந்து பெருமை அடையும் ராசிக்கார இவர் தான்.. 3.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 02, 2022 & 13:50 [IST]
Nalaya Rasi Palan : நிதனமாக இருந்து பெருமை அடையும் ராசிக்கார இவர் தான்.. 3.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 18  ஆம் நாள் சனிக்கிழமை (3.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (3.09.2022, சனிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் தன்னம்பிக்கைக்கு சவாலான நாளாக இன்று அலுவலக வேலைகள் இருக்கும். மனதில் அமைதி குறையும். தொழிலில் புதுமையான முயற்சி இருக்கும்.  நிதி நிலையில் செலவுகள் அதிகரிக்கும். விலை மதிப்பு கொண்ட விஷயத்தில் பணம் கரையும்.

வீட்டில் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளுவீர்கள். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகமாகும். நண்பர்கள் மத்தியில் உங்கள் புகழ் அதிகமாகும்.  ஆரோக்கியத்தில் கால் சார்ந்த தொல்லைகள் வரும். அன்பு!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் எந்தவித கஷ்டம் இல்லாமல் வெற்றி கிடைக்கும் வண்ணமாக இருக்கும், தொழிலில் புதிய மாறியான முன்னேற்றம் இருக்கும். கடினமான பணிகளும் எளியதாக ஒற்றுமையாக முடிப்பீர்கள். நிதி நிலையில் கவனம் வேண்டும், அவசரமாக எங்கு முதலீடு செய்ய வேண்டாம். மாணவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும், வாழ்க்கை துணையுடன்  நல்ல தொடர்பு இருக்கும்.  காதல் வாழ்வை திருமண பந்தமாக முயற்சி செய்ய நல்ல தருணமாகும்.  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேர்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு சிறந்த பண வரவு இருக்கும், தொழிலில் வெற்றிகரமாக பல செயல்கள் செய்ய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வெகுமதி கிடைக்கும். நண்பர்களின் தொடர்பில் வியாபாரம்  சார்ந்த  சந்திப்பு இருக்கும். கையில் இருக்கும் பணம் தேவைகளைப் பூர்த்தி செய்ய சரியாக இருக்கும். 

திருமண வாழ்வில் அன்பு அதிகரிக்கும், வாழ்க்கை துணையுடன் இணக்கமாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர்கள். கல்வியில் ஆர்வம் அதிகமாகும். உடல்நலம் நன்றாக இருக்கும். வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று சுமாரான நாளாக இருக்கும், பெரிய லாபம் எதிர்பார்த்து தொழிலில் செய்ய முயற்சி பலன் அளிக்க  தாமதமாகும். பணிகளை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். சூடான விவாதங்களை தவிர்த்து கொள்ளவும், நேர விரையத்தை உண்டாக்கும். பணத்தைத் திட்டமிட்டு செயல்படுத்தவும். 

குடும்ப வாழ்க்கையில் இன்று பொறுமை காக்க வேண்டும், வீட்டில் நன்மைக்காக செய்த காரியம் மற்றவர்களுக்கு கோபமாக்கக் கூடும். ஆரோக்கியத்தில் திடீரென சளி அல்லது காய்ச்சல் போன்ற பிரச்சனை வரும்.  ஏமாற்றம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  6

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் தொழிலில் இருக்கும் பிரச்சனை சில முக்கியமான முடிவில் தடுமாற்றத்தை உருவாக்கும், உங்களின் சமர்த்தியம் அதை சமாளித்துவிடும். தொலை தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உருவாகும். பணியில் நிதானமாக இருப்பதால் சக பணியாளர் மத்தியில் புகழ் அடைவீர்கள். பணப் பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். 

குடும்பத்தில் பேசும்போது பொறுமையாக இருக்க வேண்டும், உணர்ச்சிவசப்படுவதால் வீட்டின் அமைதியைக் கெடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் இருக்க  வேண்டும், தூக்கமின்மை பிரச்சனை இருக்கும்.   பெருமை! 

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

வழக்கத்தைவிட  இன்று உங்கள் மனதில் துணிச்சல் அதிகமாக இருக்கும், புதிய முயற்சிகளைத் தயங்காமல் செய்வீர்கள். பணியிடத்தில் வேலைகளை விரைவாக முடிக்கும் வேலையை அறிந்து கொள்ளுவீர்கள். நிதிநிலை கொஞ்சம் கவனம் வேண்டும், தேவையற்ற செலவுகள் வரும்.  

குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும், கணவன் மனைவிக்குள் வெளிப்படையான பேச்சு நட்பான சூழலை அளிக்கும். காதல் வாழ்வில் இனிமையான வார்த்தைகள் சந்தோஷம் அளிக்கும்.  ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்காது.  ஆக்கம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:1

இதுபோன்ற ஜோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்