Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: வாயால் வழக்கை உருவாக்கப் போகும் ராசிக்காரர்கள்.... 3.09.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi September 02, 2022 & 12:00 [IST]
Nalaya Rasi Palan:  வாயால் வழக்கை உருவாக்கப் போகும் ராசிக்காரர்கள்.... 3.09.2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 18 ஆம் நாள் சனிக்கிழமை (3.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மௌனம் காத்தால் பிரச்சனை இல்லாமல் சுமுகமான நாளாக மாறும். அலுவலகத்தில் முக்கிய முடிவு  எடுப்பதில் பொறுமை வேண்டும். பணி நிமித்தமான பயணம் உண்டு. பணம் எளியதாகக் கிடைக்கும் ஆனால் கையில் நிற்காது.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், உங்கள் பேச்சு வீட்டில் குழப்பத்தை உருவாக்கலாம். காதல் வாழ்க்கை சந்தோஷம் குறையும். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு இருக்காது.  அமைதி!

அதிர்ஷ்ட நிறம்:  இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று உங்கள் எப்படி வெற்றி பெறுவது என்பதைப் பற்றி பல முயற்சி செய்யும், அலுவலகத்தில் சக பணியாளரின் ஆதரவு உண்டு. கவனக் குறைவு அலுவலகத்தில் சிறிய தொய்வை உருவாக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை அமைதியற்ற நிலை இருக்கும், வீட்டில் தேவைகள் மன அழுத்தம் அளிக்கும். உங்களின் நடத்தைக்கு தக்க வெகுமதி சுற்றத்தாரின் மூலம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த தொல்லைகள் இருக்கும், கவனமாக இருக்க வேண்டும். பணிவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் இனிமையான நாளாக இருக்கக் கூடும், நம்பிக்கையான சூழல் பணியிடத்தில் இருக்கும். தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும், நல்ல அங்கீகாரம் கிடைக்கும். செலவு அதிகமாக இருக்கும். 

வாழ்க்கை துணையுடன் சிறிய ஊடல் இருக்கும், குடும்பத்தினரின் மனதைக் காயப்படுத்துவீர்கள்.  காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தினரின் மூலம் செலவு ஏற்படும். உடல்நலத்தில் அக்கறை வேண்டும், நரம்பு சார்ந்த தொல்லைகள் இருக்கும். இன்சொல்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சல்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று உழைப்புக்கு ஏற்ற வெற்றி நிச்சியமாகக் கிடைக்கும், பணி நிமித்தமான முடிவுகளில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். ஆதாயமான நாள். வேலையில்  கவனம் அதிகமாகும். அதிக பண வரவு இருக்கும், சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம்போல் பண வரவு இருக்கும்.

இல்லறத்தில் நல்லுறவு இருக்கும், புரிதல் இருக்கும். வயதில் முதிர்ந்த கடக ராசியினருக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்வில் மகிழ்ச்சி அதிகமாகும். பரிசு! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் நேரத்தைப் பிறரின் தேவையைப் பூர்த்தி செய்வதில் செலவிடுவீர்கள். பணிகள் மும்மரமாக நடக்கும், சக பணியாளுடன் நல்லுறவு இருக்கும். நட்பு வட்டாரம் உங்களுக்கு பல சகாயம் செய்யும். வரவும் செலவும் சரி சமமாக இருக்கும்.

குடும்பத்தில் முக்கியமான விஷயத்தை மறந்து விடுவீர்கள். கணவன் மனைவி உறவில் சிறிய ஊடல் இருக்கும். செலவை சமாளிக்கும் பேச்சு வீட்டில் நடக்கலாம். உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும், சளி போன்ற பிரச்சனை வரும்.  மறதி! 

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் 

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் தனித்துவமான நடத்தை தொழிலில் முன்னேற்றத்தை அளிக்கும், இன்பமான மனநிலை கிடைக்கும். வேலை சம்பந்தமான முக்கிய முடிவுகளைத் துணிச்சலாக எடுப்பீர்கள். பண இழப்பு ஏற்படும் நிலை உருவாகும்.

குடும்பத்தினரின் மூலம் உங்கள் ஆசை நிறைவேறும், உங்களின் திடமான நம்பிக்கையாக குடும்பத்தினர் இருப்பர். திருமண வாழ்க்கை அமைதியாக இருக்கும். நட்பு வட்டாரம் மூலம் சந்தோஷம் பிறக்கும். உடல்நலத்தில் தலைவலி போன்ற சிறிய தொல்லைகள் இருக்கும். விருப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (3.09.2022, சனிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்