Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரர்கள் கனவு தேசத்தில் மிதப்பர்... 4.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 03, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரர்கள் கனவு தேசத்தில் மிதப்பர்... 4.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (4.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15  வரை

மாலை: 3:15- 4:15 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (4.09.2022, ஞாயிற்றுக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் வழக்கம்போல் இல்லாமல் அமைதியாக இருக்கும், பிரச்சனைகள் இல்லாமல் அமைதியாகப் பொழுது நகரும். ஆன்மீக நாட்டம் இருக்கும்.  உங்கள் செயலுக்கு ஏற்ற பலன் நிச்சியமாகக் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் மறையும். பணப்புழக்கம் சீராக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக செல்லும், வீட்டில் பெரியவரின் அறிவுரை மனதில் தெளிவைக் கொடுக்கும்.  குடும்பத்தில் வெளிப்படையான பரிமாற்றம் இருக்கும். நண்பர்கள் மனதை நிம்மதியாக வைப்பதில் உறுதுணையாக இருப்பர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சாந்தம்! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும், முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாளாக இருக்கும். தொழிலில் வெற்றியை சாமர்த்தியமாக அடைவீர்கள். வியாபாரம் அமோகமாக நடக்கும், திருப்திகரமான பணப்புழக்கம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும், குடும்ப உறுப்பினருடன் நேரம் ஒதுக்க முடியும். காதல் வாழ்வில் விட்டுக்கொடுத்து போக வேண்டும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும், வயிறு சார்ந்த பிரச்சனை வரும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனம் கிடைக்காத ஒன்றை நினைத்து கவலைப்படும், மனதிற்கு நெருக்கமான மனிதரின் ஆறுதல் ஊக்கம் அளிக்கும். அலுவலகத்தில் சில முடிவுகள் சுயமாக எடுக்கும் நிலை உருவாகும். செலவு இருக்கும், ஆனால் செலவை சமாளிக்கும் வகையில் கையில் பணப்புழக்கம் இருக்கும். 

வீட்டில் சில பிரச்சனைகளை சமாளித்து துணிச்சலை வெளிப்படுத்துவீர்கள். காதல் வாழ்க்கையில் பிரச்சனை இருக்காது. நலமான உடல்நலம் இருக்கும், மனதிற்கு மட்டும் ஆறுதல் தேவைப்படும்.  ஊக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எந்தவித கவலை இல்லாமல் நாள் மகிழ்ச்சியாக நகரும். மனதிற்கு விருப்பமானவர்கள் உடன் பொழுதை அதிகமாக செலவிடுவீர்கள். அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக நடக்கும். சுய தொழில் செய்பவர்கள் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். பணத்தை நிதானமாக செலவு செய்ய வேண்டும். 

இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், கணவன் மனைவி வெளியே செல்வீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து இன்ப சுற்றுலா அல்லது சிறிய பயணம் மேற்கொள்ளுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மகிழ்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்:  1

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

மனதில் கொண்ட கனவை அடைய வேண்டும் என்ற வெறி இன்று வெற்றி காணும் வரை உழைக்க வைக்கும். வியாபாரத்தில் அசாதாரண சாதனை செய்வீர்கள். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும், வெகுமதி கிடைக்கும். கல்வியில் நற்பலன் கிடைக்கும். பணம் சுப செலவாக முடியும். 

குடும்ப வாழ்க்கை வாக்குவாதம் தோன்றி மறையும். உங்களின் முக்கியத்துவம் வீட்டில் புரியும். நண்பர்களின் ஆறுதல் முயற்சிக்கு துணையாக இருக்கும். உடல்நலத்தில் சோர்வு மட்டும் இருக்கும். சாதனை! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் இனிமையான நாளாக இன்று இருக்கும், வேலை அழுத்தம் இல்லாமல் ஆனந்தமாக இருப்பீர். சுய தொழிலில் சுமுகமான நிலை இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை வேண்டும். 

குடும்பத்தில் ஆனந்தம் அதிகமாகும், மனதில் எந்த கவலை இல்லாமல் மனம் அமைதியாக இருக்கும். சுற்றத்தாருடன் சகஜமாக பழகுவீர்கள். உணவு விசயத்தில் கட்டுப்பாடு வேண்டும்.  அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

இதுபோன்ற ஜோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்