Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பல நாள் கனவு நனவாகும் புகழின் உச்சத்தில் இருக்கப்போகும் ராசி…. 4.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 03, 2022 & 12:00 [IST]
Nalaya Rasi Palan: பல நாள் கனவு நனவாகும் புகழின் உச்சத்தில் இருக்கப்போகும் ராசி…. 4.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (4.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15  வரை

மாலை: 3:15- 4:15 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் வழக்கமான வேலைகளில் இருக்கும் ஆர்வம்  அதிகரித்தாலும் இன்று உற்சாகமாக உழைக்க மனம் தூண்டாது, கொஞ்சம் ஓய்வு எடுக்க ஏங்கும்.  தொழிலில் வழக்கமான வேலையில் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் வேகம் குறையும். நிதி உதவி கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், வீட்டில் அதிக நேரம் செலுத்த முடியும். காதல் வாழ்வில் இன்று தைரியமான முடிவு எடுப்பீர்கள், அவசர முடிவு வேண்டாம். எதிர்பாராத மனிதரின் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறிய உடல் உபாதைகள் உருவாகும்.  ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் மனம் வழக்கம்போல் இல்லாமல் இன்று கொஞ்சம் ஓய்வு பற்றி சிந்திக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். தொழிலில் பிரச்சனை இல்லை, வியாபாரத்தில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். நிதி பிரச்சனை இருக்காது. 

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக நகரும், கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியில் செல்ல திட்டம் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும், தூக்கமின்மை இருக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று எண்ணிய காரியம் மிகவும் எளியதாகக் கிடைக்கும், உங்களின் தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். சக பணியாளரின் ஒத்துழைப்பு மனதில் நிம்மதி அளிக்கும். சுய தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், வியாபாரத்தை விரிவுபடுத்த அதிகம் போராட வேண்டியதாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் இன்று அதிக கவனம் வேண்டும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும். மருத்துவ செலவு ஏற்படலாம். கல்வியில் பிரச்சனை இல்லை, சக மாணவர்களிடையில் பாராட்டப்படுவீர்கள். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் பெரியதாகக் கவலையில்லாமல் இலகுவாக இருக்கும், தொழிலில் வேலை அழுத்தம் பெரியதாக இருக்காது. சுய தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டு. பணத்தைக் கவனமாக செலவு செய்ய வேண்டும்.


வீட்டில் நிம்மதியாக இருப்பீர்கள், குடும்ப உறுப்பினரை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். காதல் வாழ்வில் இன்பமான நாளாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும், சிறிய உடல் கோளாறு ஏற்படும். உற்சாகம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் மனம் இன்று குழப்பமான மனநிலையில் இருக்கும், எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அறிவுரை மனதில் புதிய  ஊக்கத்தை அளிக்கும். தொழிலில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்ய கடுமையாகப் போராடுவீர்கள். பணப்புழக்கம் வழக்கம்போல் இருக்கும்.

வீட்டில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மனதில் அன்பை அதிகரிக்கும், பெற்றோர் வழியில்  நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சுறுசுறுப்பாக இருக்க முடியும். அனுகூலம்!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் இனிமையான நாளாக இருக்கும், தொழிலில் சில நல்ல மாற்றங்கள் நிகழும். உங்களின் நிவர்த்தியான நடவடிக்கை இன்று நல்ல மதிப்பை அளிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய கலை கற்க ஆர்வம் கிடைக்கும். 

வீட்டில் இனிமையாகப் பேசுவீர், மற்றவர்களின் மனதை புரிந்து கொள்ள முடியும். இல்லற வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சரியான ஓய்வு அவசியம். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (04.09.2022, ஞாயிற்றுக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்