Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்றைய தினம் இவருக்கு இருக்கும் வளர்ச்சி எல்லோரையும் அமைதியாக்கும்... 5.09.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi September 04, 2022 & 13:00 [IST]
Nalaya Rasi Palan : இன்றைய தினம் இவருக்கு இருக்கும் வளர்ச்சி எல்லோரையும் அமைதியாக்கும்... 5.09.2022 ராசிபலன்..! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 20 ஆம் நாள் திங்கட்கிழமை (5.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 01:45- 2:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (5.09.2022, திங்கட்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

தொழிலில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும், வேலைச் சுமை அதிகரிக்கும், வருமானத்தை உயர்த்த அயராது உழைப்பீர்கள். உங்களின் கலகலப்பான நடவடிக்கை அலுவலகத்தில் சந்தோஷமாகப் பொழுதை எடுத்து செல்லும். செல்வ நிலை நன்றாக இருக்கும்.  

குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைக்கான தீர்வை அறிய முயலுவீர்கள், கணவன் மனைவிக்கு இடையில் அமைதியான பேச்சுவார்த்தை இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.  சாந்தம்! 

அதிர்ஷ்ட நிறம்:  நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

தொழிலில் இன்று அசாதாரண வளர்ச்சி இருக்கும், உங்களுக்கு வேலை அழுத்தம் பெரியதாக இருக்காது.  சக பணியாளரின் ஒத்துழைப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும், இலக்கை விரைவாக அடைய முடியும். செல்வ வரவு சிறப்பாக இருக்கும். 

 

காதல் உறவில் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வதால் கவலை இல்லாமல் நகரும். வீட்டில் இன்பமாக இருக்க முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இருக்காது.  உயர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: இள மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று தொழில் போட்டிகள் அதிகமாகும், வியாபாரத்தில் பல புதிய முயற்சிகளை செய்வீர்கள். பண வரவு வழக்கம்போல் இருக்கும்.  அலுவலகத்தில் வேலைகள் மும்மரமாக நடக்கும், நல்ல பெயரை பெறுவீர். மாணவர்களுக்கு கல்வியில் இன்று கவன சிதறல் ஏற்படும். 

குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், நேரம் ஒதுக்க முயற்சி செய்தல் நன்மை அளிக்கும். காதலர்களுள் புரிதல் அதிகமாகும். உறவினர் மூலம் அனுகூலம் உண்டு. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை.  நலம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் நல்ல அங்கிகாரம் கிடைக்கும் அதனால் எல்லையற்ற ஆனந்தத்தில் மிதப்பீர்கள். உங்கள் அணுகுமுறை நல்ல லாபம் வரும்.  பணியில் முன்னேற்றம்  இருக்கும், நட்பான அணுகுமுறை பணியிடத்தில் ஏற்படும். ஆடம்பர பொருளை வாங்க முடியும். 

குடும்ப வாழ்க்கையில் இன்பம் இருக்கும்.  வயதான மகர ராசிக்காரர்கள் ஆன்மீக ஸ்தலத்தில் செல்வர், சிலர் ஆன்மீக செலுக்கு உதவி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்:  9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வைக்கும் ஒவ்வொரு அடியும்  நிதானமாக இருக்க வேண்டும், தொழிலில் பெரிய முதலீடு வேண்டாம். பண இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. அலுவலகத்தில் வழக்கம்போல் வேலை நடக்கும். செல்வத்தைக் கவனமாக செலவிட வேண்டும். 

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இல்லை. காதல் வாழ்வில் நல்லுறவு இருக்கும். குடும்பத்தினருக்கு சில தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், ஓய்வு தேவைப்படும். எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

அலுவலகத்தில் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும், தவறுகள் நடக்க நேரிடும். செல்வ நிலை ஓரளவு நன்றாக உள்ளது, நிதி சம்பந்தப்பட்ட முக்கியக் காரியத்தில் இன்று எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம்.

திருமண வாழ்வில் ஒற்றுமை அதிகரிக்கும், கணவன் மனைவி உறவில் பிரச்சனைகள் குறையும்.  குடும்ப செலவு அதிகரிக்கும். உடற்பயிற்சி அல்லது தியானம் பற்றிய சிந்தனை மனதில் துளிர்விடும், ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. செலவு! 

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

இதுபோன்ற ஜோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்