Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: மிதுன ராசிக்காரரே உங்களுக்கு இன்று நல்ல ஆரம்பம் தான்.... 5:09:2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 04, 2022 & 11:50 [IST]
Nalaya Rasi Palan: மிதுன ராசிக்காரரே உங்களுக்கு இன்று நல்ல ஆரம்பம் தான்.... 5:09:2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 20 ஆம் நாள் திங்கட்கிழமை (5.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 1:45- 2:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் மனதிலிருந்த எதிர்மறை எண்ணங்கள் குறைந்து வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்துவீர். அலுவலகத்தில் புத்துணர்ச்சியாக பணியாற்றுவீர்கள். புதிய நபர்களைச் சந்திக்கும் நிலை வரும். நேரத்தை அதிகமாக வீணடிக்காமல் சற்று திட்டமிடுவது வருங்கால வேலையைக் குறைக்கும். சுய தொழிலில் புதிய முயற்சி செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

திருமண வாழ்வு இனிமையான பந்தமாக இருக்கும்.  வீட்டில் சந்தோஷமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் காட்டுவது நல்லதாகும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

சாதமான மனதுடன் இன்று இருப்பது அவசியம் ஆகும், உங்கள் வெறுப்பு உணர்ச்சி முன்னேற்றத்திற்கு ஒரு தடையாகும். தன்னம்பிக்கை பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க ஆன்மீகம் அல்லது தியானம் உதவும்.  வீட்டில் உள்ளவர்களால் இன்று திடீர் செலவு வரும்.  தொழிலில் கோபம் அடையாமல் இருப்பது உங்கள் நட்பு வட்டாரத்தைப் பாதுகாக்கும்.  

திருமண வாழ்க்கையில்  சுய நலமாக இருப்பீர்கள், மனம் ஒரு நிலையில் இருக்காது. காதல் வாழ்வில் விரிசல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் வயிறு சார்ந்த பிரச்சனை இருக்கும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

எதிர்பார்த்த வாழ்க்கையைப் பெற அதிகமாக முயற்சி செய்ய வேண்டும், இன்று தகராறு செய்ய வந்தாலும் அமைதி காப்பது  வேலையைப் பாதிக்காது. மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு இருக்கும் செல்வம்  அதிகரிக்கும்.

வாழ்க்கைத் துணையைப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும். உங்களின் அலட்சியமான நடவடிக்கையால் குடும்ப வாழ்வின் சுவாரஸ்யத்தை இழப்பீர்கள். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

சுய தொழிலில் இன்று அமோக வளர்ச்சி இருக்கும். அலுவலக வேலைகள் தாமதமின்றி சரியாக நடந்து கொண்டு இருக்கும். செல்வ நிலையில் நல்ல வளர்ச்சி உண்டு.  தொழிலில் ஏற்படும் வளர்ச்சி சுற்றத்தார் மத்தியில் உங்களை பெருமைப்படுத்தும். 

திருமண வாழ்க்கை   சுமாராக உள்ளது.  காதல் வாழ்வில் சூடான வாக்குவாதம் ஏற்படலாம், அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். உடல் நலம் மேம்படும். புகழ்! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

தொழிலில் இருக்கும் கவலையால் பிறர் மீது அடிக்கடி கோபத்தைக் காட்டுவீர்கள். ஆனால் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் உதவி உங்களை நிம்மதி அடையச் செய்யும். வேலை சம்பந்தமான அலைச்சல் இருக்கும்.  

குடும்பத்தில் சகஜமாகப் பழக முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் சண்டை சச்சரவுகள் வந்து வந்து மறையும். உறவினர் வருகை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது உடல்நலத்தைப் பேணிக்காக்கும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9 

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

அலுவலக வேலையில் துணையாக இன்று சிலரின் உதவி கிடைக்கும், பணியிடத்தில் வேலைகள் சுமுகமாக செல்லும். சுய தொழிலில் இன்று வேலை சுமை அதிகமாகும். செலவு வரவைவிட அதிகமாக இருக்கும்.  

குடும்ப வாழ்க்கையில் சில வாக்குவாதம் வரலாம், கணவன் மனைவிக்குள் பேசும் வார்த்தையில் கவனம் வேண்டும். சுற்றத்தார் மூலம் மனக்கவலை நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  உதவி! 

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (5.09.2022, திங்கட்கிழமை)

இதுபோன்ற ஜோதிட  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்