Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இந்த 2 ராசிக்காரர்கள் உஷாராக இல்லையென்றால் அவ்வளவு தான்…. ஜூலை 26, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 25, 2022 & 15:15 [IST]
Nalaya Rasipalan: இந்த 2 ராசிக்காரர்கள் உஷாராக இல்லையென்றால் அவ்வளவு தான்…. ஜூலை 26, 2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasipalan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 9 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (26.07.2022) தினத்தில் கிரக நிலையின் மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன் கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 04:45-  05:45 வரை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (26.07.2022,  செவ்வாய்க்கிழமை)

துலாம் (Tthulam Nalaya Rasipalan)

வெற்றிக்காக இன்று பல முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும், உங்கள் வாழ்வில் இன்று சற்று போராட்டமான நாளாக காட்ட்சியளிக்கும். உங்கள் முயற்சிக்கு பலமாக சில உதவிகள் கிடைக்கும். பணியின் காரணமாக சிறிய பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும். 

கணவன் மனைவி உறவில் இனிமையான நாளாகும் இன்று இருக்கும், உங்கள் வாழ்க்கை துணையின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது.  விடா முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasipalan)

புதிய முயற்சிகளை எடுத்து வெற்றி காண சற்று போராட வேண்டிய நாளாகும், திட்டமிட்டு செயல்படுவது இன்று அவசியமாகும். பணியிடத்தில் வேலைகள் சற்று அதிகமாக இருக்கும். வியாபார வாழ்வில் அகல கால் வைக்க வேண்டாம். பண விசயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டில் இன்று மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும், செலவுகள் மன வருத்தமளிக்கும். உடல்நலத்தின் மீது கவனம் காட்ட வேண்டும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

தனுசு (Dhanusu Nalaya Rasipalan)

உங்கள் பொறுமையான குணத்தால் இன்று தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளைக் கடந்து தொழிலை மேம்படுத்துவீர்கள். நல்ல லாபம் பார்க்க முடியும். சுய  தொழில் செய்பவர்களுக்கு இன்று மிக சிறந்த நாளாக அமையும். வியாபாரத்தில் அசுர வளர்ச்சி இருக்கும், கையில் திருப்திகரமான பணப்புழக்கம் இருக்கும்.

குடும்ப வாழ்வில் பிரச்சனை குறையும், கணவன் மனைவி உறவில் பிரச்சனை குறையும். காதல் வாழ்வில் பொறுமையாக அமர்ந்து வருங்கால முடிவுகள் எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் இருக்கும், மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். தன லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Magaram Nalaya Rasipalan) 

இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும், பல நாட்களாக நிறைவேறாத ஆசை இன்று நிறைவேறும். நிம்மதியான மனநிலை  இருக்கும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். சிறப்பான பணப்புழக்கம் இருக்கும்.

வீட்டில் சந்தோஷமாக இருக்க முடியும். குடும்பத்தினருடன் இயல்பாக நடந்து கொள்வீர்கள். சில தவிர்க்க முடியாத குடும்ப செலவுகள் வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நலமான நாள்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 7

கும்பம் (Kumbam  Nalaya Rasipalan) 

இன்று நீங்கள் இறைப்பணியில் ஆர்வமாக இருப்பீர்கள், பணி நிமித்தமாக சிறிய பயணம் செய்ய நேரிடும். உங்கள் தொழில் ஸ்தானத்தில் இலக்கை அடைய சற்று  கடுமையாக உழைப்பீர்கள். நிதி நிலை நன்றாக உள்ளது.

குடும்ப வாழ்க்கையில் பேச்சின் மூலம் பிரச்சனை வரும், பொறுமையாக இருக்க வேண்டும். பெற்றோரின் பேச்சைக் கேட்பது நன்மை அளிக்கும். சிறப்பான உடல்நலம் கிடைக்கும். ஆன்மீக சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

மீனம் (Meenam Nalaya Rasipalan) 

இன்று உங்களுக்கு சில முக்கிய செலவுகள் வரும், கையிருப்பு செலவாகும். செல்வத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். அலுவலகத்தில் சில திடீர் முடிவுகள் வரும். வியாபாரத்தில் முன்னேற்றத்துக்காக அயராது உழைக்க வேண்டும்.

வீட்டில் சிறிய பதட்டத்துடன் இருப்பீர்கள். காதல் வாழ்வில் சண்டைகள் வரும்,நண்பர்களின் மூலம் உங்கள் மதிப்பு கூடும். உடலில் வலி இருக்கும். மதிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 




 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்