Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இன்று ஏராளமான பிரச்சனையை சந்திக்க போகும் அந்த ராசிக்காரரும் இவரா? இந்த ராசிக்காரருக்கு நல்ல வளர்ச்சி தான்...... ஜூன் 20, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 19, 2022 & 15:15 [IST]
Nalaya Rasipalan: இன்று ஏராளமான பிரச்சனையை சந்திக்க போகும் அந்த ராசிக்காரரும் இவரா? இந்த ராசிக்காரருக்கு நல்ல வளர்ச்சி தான்...... ஜூன் 20, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:30-  07:30 வரை

மாலை: 04:30-  05:00 வரை

Nalaya Rasipalan


Representative Image. மேலும் படிக்க: மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசியின் ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

உங்கள் விடாமுயற்சியால் பல  முயற்சிகள் செய்து உங்களின் திறமையை நிரூபித்துக் காட்டுவீர்கள். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் பல உங்கள் பணியிடத்தில் உருவாகும், அதனால் செல்வ வரவு அதிகரிக்கும். திருமண வாழ்கையில் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது, திடீரென அத்திருப்திகரமான மனநிலை இருக்கும். சுறுசுறுப்பான உடல்நலம் இருக்கும். முக்கியமாக செல்வ ஸ்தானத்துக்குப் பிரச்சனை இல்லை, உங்கள் செல்வ நிலை நன்றாக உள்ளது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்கள் நிதானமான மனதால் வாழ்வில் உருவாகும் கடினமான சூழலைச்  சமாளித்து வெற்றி பெறும் வரை முயற்சி செய்வர். இன்றைய தினம் உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் தொழிலில் வேகம் இல்லாமல் பணிகளை முடிக்க சற்று காலதாமதமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சுழலை உருவாக்க அதிகமாக முயல்வீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். செல்வ ஸ்தானத்துக்குப் பிரச்சனை இல்லை, வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். முயற்சி!

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 4

தனுசு (Sagittarius 2022 Horoscope)

கடினமான முயற்சியால் பெரிய காரியத்தையும் எளியதாக வெல்ல முடியும் என்று விடாமுயற்சி குணம் கொண்ட உங்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் மந்தமாக இருக்கும்.தொழில் வளர்ச்சி சொல்லும்படி இருக்காது, இன்று நிதி நிலைமை ஓரளவு நன்றாக இருக்கும். உங்கள் இல்லற வாழ்க்கையில் நிம்மதி இருக்கும், பெற்றோரின் மனநிலை புரிந்து நடந்து கொள்வீர்கள். கல்வி நிலை மிகவும் நன்றாக உள்ளது, உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. வீட்டில் உள்ளவர்களுக்கு திடீரென மருத்துவ செலவு செய்யும் நிலை உருவாகலாம். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

மகரம் (Capricorn 2022 Horoscope)

உங்களின் அயராது உழைக்கும் குணம் இன்று நல்ல மதிப்பைப் பெற்று தரும், அலுவலகத்தில் உங்களின் வேலை வியப்பை உருவாக்கி மேலதிகாரியின் பாராட்டைப் பெற்று தரும். உங்களின் ராசிக்கு இன்று மன உறுதி அவசியமாகும், எதிர்பார்த்த செல்வ நிலை இன்று இருக்காது, செலவை சமாளிக்க அதிகமான மனவலிமை தேவைப்படும். குடும்ப வாழ்க்கையில் திடீர் சண்டைகள் வரும், ஆனால் குடும்பத்தாரின் மனதைப் புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் பெரியதாகப் பிரச்சனை இல்லை, சிறிய சளி தொல்லைகள் மட்டும் இருக்கும். செல்வ நிலையில் கவனம் அவசியம். மாணவர்களின் கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது. மதிப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்று நீங்கள் செய்யும் திட்டமிட்ட செயல் சிறந்த பலன் அளிக்கும், பணியிடத்தில் செய்யும் புதிய முயற்சி முன்னேற்றமாக அமையும்.   அருமையான தொழில் வளர்ச்சி இருக்கும். குடும்ப வாழ்க்கையில்  அனைவரின் மனதையும் புரிந்து கொள்ளுவீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியைப் பெறுவீர்கள். இன்று உங்களின் ராசிக்கு செல்வ நிலையில் செலவுதான் உயர்ந்து உள்ளது. உடல் மற்றும் மனநிலை இரண்டும் சீராக இருக்கும், அமைதியான நிலை இருக்கும். கல்வி நிலை ஓரளவு நன்றாக உள்ளது. சிந்தனை!   

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7 

மீனம்(Pisces 2022 Horoscope)

உற்சாகமான மனதுக்கு சொந்தக்காரரான உங்களுக்கு நன்மைகள் பல நிகழும் நாளாக இன்று இருக்கும், பணியிடத்தில் விட்டுக்கொடுத்து போக வேண்டிய சூழ்நிலை அதிகமாகத் தோன்றும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாகக் கிடைக்காத அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். இன்று பண வரவு இருக்கும், ஆனால் செலவு மனவருத்தத்தை அளிக்கும். உடல்நலத்தின் மீது அதிக கவனம் காட்ட வேண்டும், இரவில் சரியான தூக்கமின்மை பெரிய பிரச்சனையாக இருக்கும். கல்வி நிலை நன்றாக உள்ளது. வெற்றி!   

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்