Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Daily Astrology in Tamil: இன்று அதிக கவனமாக நடக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா..! இந்த ராசிக்காரர் கவனமாக இல்லையென்றால் சிக்கல் தான்! ஜூன் 20, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 19, 2022 & 15:00 [IST]
Daily Astrology in Tamil: இன்று அதிக கவனமாக நடக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா..! இந்த ராசிக்காரர் கவனமாக இல்லையென்றால் சிக்கல் தான்! ஜூன் 20, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:30-  07:30 வரை

மாலை: 04:30-  05:00 வரை

Daily Astrology in Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

முதன்மையான ஸ்தானத்தில் இருக்கக் கடினமாகப் போராடும் மேஷ ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு போராட்டம் நிறைந்ததாக இருக்கும், தெளிவான திட்டமிடல் வேண்டும். வீட்டில் உங்கள் நடவடிக்கை குழப்பத்தை உருவாக்கும், ஆனால் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தொழிலில் பிரச்சனை ஏதுமில்லை, எந்த செயலும் தொடங்குவதற்கு முன்னால் திட்டமிட்டு செயல்படுவது இன்று அவசியமாகும். ஆரோக்கியக் குறை ஏற்படும், கை கால்களில் மூட்டு வலி இருக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பார்கள், கல்வி ஸ்தானம் முன்னேற்றம் கொள்ளும்.  போராட்டம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

இன்பமான வாழ்க்கை வாழ ஆசை கொள்ளும் உங்களுக்கு இன்று சௌகரியமான நாளாகும், மனம் நிம்மதியாக இருக்கும். தொழிலில் கடுமையாக உழைக்க வேண்டும். வீட்டில் உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும், உங்கள் மீது புரிதல் உருவாகும் குடும்பத்தினர் எல்லையில்லாத அன்பைக் காட்டுவர். தன லாபம் இருக்கும், கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும், புதிய பொருட்கள் வாங்குவீர்கள். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக உள்ளது.  மாணவர்கள் கொடுத்த வேலையைச் சரியான நேரத்தில்  முடிப்பதால் பாராட்டு கிடைக்கும். காதல் வாழ்க்கையில்  அன்பு அதிகரிக்கும். புரிதல்!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்கள் திடமான மனதால் கடினமான காரியத்தையும் எளியதாக முடித்துகாட்டும் மிதுன ராசிக்காரரே இன்று உங்களின் ராசிக்கு போதுமான பணப் புழக்கம் இருக்கும். இன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். கல்வி நிலை அமோகமாக உள்ளது. திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது, குடும்பத்தினருடன் அதிக நேரத்தைப் பகிர்ந்து கொள்ளுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் நன்றாக செயல்படும், மனம் ஆனந்தம் கொள்ளும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். வளர்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

கடகம் (Cancer 2022 Horoscope)

பணிவான குணம் கொண்ட கடக ராசிக்காரரே உங்கள் ராசிக்கு இன்று மனதில் அதிகமான பதட்டம் இருக்கும். எனவே ஆன்மீக யாத்திரை அல்லது ஆன்மீக எண்ணங்களை மனதில் நினைப்பது இதமான மனநிலையைத் தரும். வழக்கமான வேலைகளைச் செய்ய மிகவும் கடினமாகத் தோன்றும். மனதில்  உருவாகும் பதட்டம் தொழிலில் தவறுகளை உருவாக்கும். பண விசயத்தில் கவனமாக இருந்தால் ஏமாறமாட்டீர்கள். விட்டில் இன்று அமைதியான நிலைமை இருந்தாலும் உங்கள் மனம் கலவரமாக இருக்கும், பெரியவர்களிடம் மோதல் ஏற்படும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நலம்!   

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Leo 2022 Horoscope)

தைரியமான முடிவுகள் பல எடுத்து வாழ்வில் உயர்ந்த நிலையில் ஸ்தானம் கொண்டு இருக்கும் சிம்ம ராசிக்காரரே இன்று  நீங்கள் விடாப்பிடியாக இருப்பது மகிழ்ச்சியைக் கெடுக்கும். தொழிலில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி அளிக்காது, வேலையில் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பேச்சு இன்று குடும்பத்தாரின் மனதைக் காயப்படுத்தும். நிதி நிலை  மகிழ்ச்சியாக உள்ளது. உடல்நலம் சுமாராக உள்ளது, ஒரு சிலருக்கு அசௌகரியமான நிலை இருக்கும். இன்று உங்களின் கல்வியில் கவன சிதறல் ஏற்படும். பணத்தை செலவிடும் முன் கவனமாக இருக்க வேண்டும்.  சுகம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Virgo 2022 Horoscope)

வெகுளியான மனதைக் கொண்ட உங்களுக்கு செய்யும் காரியம் ஜெயம் தான், தெளிவான சிந்தனையால் நம்பிக்கை பெறுவீர்கள். தொழிலில் நற்பலன்கள் பல நடக்கும். ஆரோக்கியம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. பயனுள்ள செலவு இருக்கும், குடும்ப செலவுகளைக் குறைக்க அதிகம் முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் இன்று அதிகம் நட்பாக நடந்து கொள்ளுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை மகிழ்ச்சி அளிக்கும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 8


Representative Image. மேலும் படிக்க: Part 2- துலாம் முதல் மீனம்.

 


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்