Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இன்று இந்த ராசிக்காரரின் குழப்பமான மனநிலை மற்றவர்களுக்கு தலைவலி தான்……ஜூன் 29, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi June 28, 2022 & 16:30 [IST]
Nalaya Rasipalan: இன்று இந்த ராசிக்காரரின் குழப்பமான மனநிலை மற்றவர்களுக்கு தலைவலி தான்……ஜூன் 29, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                          Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 04:45- 5:45 வரை

Nalaya Rasipalan


Representative Image. மேஷம்- கன்னி வரை முதல் 6 ராசியின் தினசரி பலன் (29:06:2022)  பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


துலாம் (Libra 2022 Horoscope)

சந்தோஷமான வாழ்வு நம் எண்ணத்தில் தான் உள்ளது என்பதை நன்கு அறிந்த நீங்கள் இன்று கவனமாக இருங்கள். யாருடனும் வெளிப்படையாக வெகுளித்தனமாக பேசாதீர்கள். இன்று பணப்புழக்கம் கையில் கொஞ்சமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளை செய்து கொண்டுதான் இருப்பீர்கள். குடும்பத்தில் நிலைமை அவ்வளவாக சரியில்லை என்றாலும் மனம் நிம்மதியாகத் தான் இருக்கும். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு இருக்கும். கல்வியில் பாராட்டு கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதியாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சரியில்லை, நல்ல உடல்நிலையில் இருப்பீர்கள். இரக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்:  4

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

அறிவியல் சிந்தனை அதிகம் கொண்ட விருச்சிக இராசிக்காரரே, ஆரோக்கியத்தில் குறை இல்லை ஆனால் மனம் அமைதியாக இருக்காது.  இன்று செலவு அதிகமாக இருந்தாலும் செல்வ நிலை அமோகமாகத் தான் உள்ளது. குடும்ப வாழ்க்கை சிறிய குழப்பமான சூழல் நிலவும். அலுவலகத்தில் வேலை சுமாராகத் தான் நடக்கும் மனம் ஆசுவாசமாக இருக்கும், இலக்கை முடிக்கக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது. உடலில் சிறுசிறு வலிகள் இருக்கும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

கலைநயம் கொண்ட உங்களுக்கு  இன்றைய தினம்  நிதி நிலைமையில் லாபகரமான நாளாகும், செல்வத்தைச் சரியாக திட்டமிட்டுப் பாதுகாக்க வேண்டும். தேவையில்லாத மன அழுத்தம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேறும் நிலையிலிருந்தாலும் மனம் பதட்டமாகவே இருக்கும். ஒருவித பயம் மனதில் ஓடிக்கொண்டு தான் இருக்கும். மண வாழ்க்கையில் நல்ல அன்யோன்யம் இருக்கும், காதல் வாழ்க்கையில் வெளிப்படையான பேச்சு நெருக்கத்தை உருவாக்கும். மாணவர்கள் கல்வி பாதிப்பு இல்லை, சுமுகமாக இருக்கும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: மெருன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8 

மகரம் (Capricorn 2022 Horoscope) 

பொறுமையாக இருந்தாலும் இருக்கும் தரணி ஆளும் யோகம் கொண்ட  மகர ராசிக்காரரே, இன்று உங்கள் காதல் விவகாரத்தில் பிரச்சனை வரும் அதனால் திடீர் திருமணம் கைகூடும் சூழ்நிலை வரும், பொறுமையாக இருப்பதால் இந்த பிரச்சனையில் சிக்கி கொள்ள மாட்டீர்கள். குடும்பத்தில் சில ஆரோக்கியமான உறவு முறை இருக்கும். அலுவலகத்தில் போட்டி உருவாகும். செல்வ நிலையில் பாதிப்பில்லை, எதிர்பார்த்த நேரத்தில் பண உதவிக் கிடைக்கும். தொழிலில் லாபம் வரும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  3

கும்பம் (Aquarius 2022 Horoscope)

எப்போதும் சந்தோஷமாக இருக்க நினைக்கும் உங்களுக்கு இன்று குழப்பமான நாளாக இருக்கும். தொழிலில் அடுத்து என்ன செய்வது என்ற தெளிவு இல்லாமல் சந்தேகத்தில் தத்தளிப்பீர்கள். வீட்டில் பொறுமையுடன் இருக்க வேண்டும், பெற்றோருடன் வாக்குவாதம் உருவாகும். சுமாரான நிதி வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியத்தில் ஒவ்வாமை பிரச்சனை வரும். புதிய கல்வி கற்க  வேண்டிய தருணம் உருவாகும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

மீனம்(Pisces 2022 Horoscope)

எப்போதும் கலகலப்பாக இருக்கும் மீன இராசிக்காரரே இன்று உங்கள் மருத்துவச் செலவு அதிகரிக்கும், அதைத் தவிர்க்க உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுங்கள். தொழில் ஸ்தானத்தில் எதிர்பார்த்த ரிசல்டை பெற புதிய முயற்சிகள் பல எடுப்பீர்கள், அதை வெற்றி அடைய செய்ய அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடன் வெகு தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.  நிதி நிலையில் பணப்பற்றாக்குறை ஏற்படும். கடன் வாங்குவீர்கள். உறவினர் வருகை இருக்கும், சுப நிகழ்ச்சியில்  கலந்து கொள்ளுவீர்கள். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்