Wed ,Apr 24, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: மூளை குழம்பிப் போற அளவுக்கு இந்த ராசிக்காரங்களுக்கு வேலை இருக்கும்…! 16.09.2022 ராசிபலன்!

Gowthami Subramani September 15, 2022 & 15:45 [IST]
Nalaya Rasi Palan: மூளை குழம்பிப் போற அளவுக்கு இந்த ராசிக்காரங்களுக்கு வேலை இருக்கும்…! 16.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 31 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (16.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி அறிய வேண்டுமா..? இந்த பதிவில் துலாம் ராசி முதல் கன்னி ராசி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்!

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று நம்பிக்கையாகச் செயல்படும் நாள். வெற்றி மேல் வெற்றி ஈட்டுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாளாக அமையும். கடின உழைப்புக்கேற்ற பயன்களைப் பெறுவீர்கள். பணிகளை உற்சாகத்துடன் செய்வீர்கள்.

https://lh4.googleusercontent.com/SGr4ScDd98YmUEl1fiXunxW1fsBONQ7IO8eB2HmZc1ytv4HvLflBioHKGSS9PTfsyj9QxyerO8MaYXbN10HO6QqV2mSjMC6gEHGBHvyqrlJigijJy8_UFrF-G_YObSerEbb7tEFDMOqZgPUEU9cw5l5mmysjSwnruTGKwpY6rpwgc0ZfCBN4dYDosA

பண வரவு நன்றாக இருக்கும். மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும்.  உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை நீக்க வேண்டும். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று உங்களது லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். மகிழ்ச்சிகரமான நாளாகவும், சந்தோஷத்தை அள்ளித் தரும் நாளாகவும் அமைகிறது. முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாகும். பணிகளில் மன அழுத்தம் காணப்படும். சக ஊழியர்களிடம் நட்புறவு மேற்கொள்வது பயனளிக்கும்.

https://lh3.googleusercontent.com/6bE9W3sJcIDMbrs04Zaw4NgeqYuedZXFY_U_LaVjjDiTgwfjjVVXOvYk1JtQhmXn152TVULyKI_nDPhziCuvgvSp6EFTsi9YcX2mGCmh8OZcsw4uqo-JOuav9hsiYsofTAMegHog6PdbPjEg_K80XwjsWCmj8f9sl4_r11Yks27omIEK2mW81kDGIg

உங்களது அன்பான அணுகுமுறையால், உங்கள் துணை உங்களை நன்கு புரிந்து கொள்பவராக அமையும். நிதிநிலை திருப்தியாக இருப்பதுடன் சேமிப்பதற்கான உந்துதல் அதிகரிக்கும். சிறந்த ஆரோக்கியம் கிடைக்கும் ஊக்கம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று உங்களது தடைகள் அனைத்தையும் வென்று திருப்திகரமாக இருக்கும் நாளாக உள்ளது. யோகா, தியானம் உள்ளிட்டவை மூலம், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம். பணி தொடர்பாக இடையூறுகள் உண்டாகலாம். இருப்பினும், கடினமாக உழைத்தால் வெற்றிக்கு வழி கிடைக்கும். உங்களது துணையை புரிந்து கொள்ள முயல்வதற்கான நாளாக அமைகிறது.

https://lh6.googleusercontent.com/qTVEbbXELhBMtsRMOciOYM4GGOecvGjnUDTrYzbEzCXtdiLJKFEAr47upvdDPdZUMQXbdx5v_5gm5laz-1ZHew8Hkum8ZiSqgeG9JJtGHlRowNx-A14tTBrUJh4f9lgCE7l1K-54pf8Cnfzq0i97muMgZLQGbZxXSdaUuxdG5F2097bVuzEDYd7HZw

இன்று பணப்புழக்கம் அதிகம் இருக்காது. வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். இதனால், பதட்டம் காணப்படும். இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடியவையாக அமையும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய நாள் உங்களுக்குச் சாதகமாக இல்லை. சவாலான சூழ்நிலையை எதிர் கொள்ளக் கூடியவையாக அமைகிறது. தேவையில்லாத பிரச்சனைகள் வரும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளால், கவலை உண்டாகும். பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆறுதல் அடையலாம். அதிக பணிச் சுமை காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கவனமாகச் செயல்படுவது நல்லது.

https://lh3.googleusercontent.com/6ymZCtrn73cQPvPoM_iPDpu79pHs044x4D3cyzfMqFfbZf6FrwYSaCyfmIFYdr_nXSVqYaFRG_eQCuQe73KWhV-WyRc5n1e0zRb3HAyr3yqXZD7fywcmkmKSJOpTDEuMIjyxMZaom74zbUphb7020nhOSZhKWAjzGfac2urD4ceDVevJoiAoU700ug

பணப்புழக்கம் குறைவாக இருகும். இது அதிருப்தியை உண்டாக்கும். மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்ய வேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்று வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. கணவன், மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நல்ல புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். இதனால், சேமிப்பு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் இருந்து வந்த மந்தத் தன்மை நீங்கி விடும். உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்வது நல்லது

https://lh4.googleusercontent.com/O28xOFjKZgBV55oFbgFZHKW6lgJBMKphm-Hy3ff5_y5H7ydB_CKOsdG1Eek6oox72mseZVmORHvZscrQlPkXVraq__0k61OCF4sg46rVHUnuJavEyqBpxPVpMi_V6XAWrVCXS752STU1nxmI8i0QliIiPnctpmQhQK8N-mkZ8FvDkit_fOe-_m9MAQ

பயணங்கள் தொடர்பானவற்றில் மிகக் கவனமாக இருப்பது நல்லது. எல்லா விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும்... பயணம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

எண்ணிய முயற்சிகளில் வெற்றியை ஈட்டுவீர்கள். இன்று எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நாள். மேலும், பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உற்சாகமாக செயல்படக் கூடிய நாளாக அமைகிறது.

https://lh4.googleusercontent.com/BGviQPd-PWBaEfCUcUp8yeStxUohDslmBQ75-eN_4SbqOdXt8m9INTxFXndTtQkABdWolkqZHDLBuXZR38WLeVC4_0zoxSDDQ8KBKX9nZRlSM-KYIbfh2qKrJ7UhRbk3LlY7-tzuVMFDVMuqdASyKPQnfTgudGkx-3ZGjLsC7BeZopgOevSEK0vugA

பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் அனுகூலமான வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்