Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இல்லற வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம்... 16.9.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan September 15, 2022 & 15:30 [IST]
Nalaya Rasi Palan: இல்லற வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம்... 16.9.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

மங்களகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 31 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். 

நல்ல நேரம்:

காலை: 09.15 - 10.15 வரை

மாலை: 04.45 - 05.45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan) 

இன்றைய தினம் கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.   

பணவரவு சுமாராக தான் இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு, சிக்கனத்தை கடைபிடியுங்கள். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நாள் முழுவதும் சோர்வாக காணப்படுவீர்கள். சோர்வு!

அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் எந்த காரியத்தையும் கவனமான முறையில் ஆற்ற வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் தள்ளிப்போடுங்கள். இன்னைக்கு உகந்த நாள் அல்ல. பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.  

பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். சிலருக்கு வாகன பராமரிப்பு சார்ந்த செலவுகள் ஏற்படும். துணையுடன் கோபத்தை குறைத்துக் கொண்டு சமநிலையான அணுகுமுறையோடு செயல்படுவது நல்லது. செலவு! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் அனுகூலபமான நாள். உங்க திறமைகளை வெளிபடுத்த வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி சர்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும். 

இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தொழிலில் லாபம் எதிர்பாராத அளவு இருக்கும். அதிர்ஷ்டம்! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். 

பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பாராட்டு! 

அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

எந்த காரியங்களையும் முன்கூட்டியே திட்டமிடுவது வெற்றியை அள்ளிக் கொடுக்கும். பணியிடத்தில் தடைகள் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படவும். 

இல்லற வாழ்க்கையில் அனுசரித்து போவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம். இன்றைய தினம் மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எந்த செயலிலும் பொறுமையை கையாள வேண்டும். எதையும் லேசாக எடுத்துக்கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். 

ஆன்மீகம் சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு புரிதல் ஏற்படும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் கிட்டும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும். நடக்கும்போது கவனம் தேவை. நிதானம்! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்