Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: இன்று இந்த ராசிக்காரரின் வளர்ச்சி தான் அனைவரையும் வாய் அடைக்க செய்யும்… ஜூலை 15, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi July 14, 2022 & 14:30 [IST]
Nalaya Sirappu Rasipalan: இன்று இந்த ராசிக்காரரின் வளர்ச்சி தான் அனைவரையும் வாய் அடைக்க செய்யும்… ஜூலை 15, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                            Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 04:45-  05:45 வரை

Nalaya Sirappu Rasipalan


Part 1: மேஷம்- கன்னி ராசியின் தினசரி ராசிபலன் (15.07.2022)


துலாம் (Libra 2022 Horoscope)

உங்கள் தொழிலில் இன்றைய தினம் பெறப்போகும் பலன் மிகவும் முக்கியமான பலனாக அமையும், அனுபவம் அடைந்த மனிதரின் ஆலோசனை கிடைக்கும், கிடப்பில் கிடந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். இன்று கையில் சற்று பணப்புழக்கம் குறைவாக இருக்கும்.

குடும்ப பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும், கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் உருவாகும். வீட்டில் சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியதாக இருக்கும். உங்களின் முடிவை அனைவரும் ஒருமனதாக ஏற்றுகொள்வீர்கள். உடல்நலத்தின் மீது கவனம் காட்ட வேண்டும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

எடுத்த காரியத்தில் வெற்றி காணும் வரை இன்று ஓயமாட்டீர்கள், முக்கியமாக உங்களை சார்ந்தவர்களையும் கடுமையாக உழைக்க ஊக்கப்படுத்துவீர்கள். தொழிலில் இன்று மிகவும் சாதுரியமாக நடந்து கொள்வீர்கள். பணியிடத்தில் இன்று வேலை மும்முரமாக நடக்கும். உங்கள் வேலையாற்றல் நல்ல மதிப்பை உருவாக்கும். கையில் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். 

வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் களிப்பீர்கள். உங்களின் மரியாதை இன்று குடும்பத்தில் அதிகமாகும். ஆன்மிக நாட்டம் தோன்றும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. அசதி!  

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு (Sagittarius 2022 Horoscope)

உங்களின் அயராது உழைப்புக்கு இன்றைய தினம் மிகவும் சாதகமான நாளாக அமையும், இன்று தொழிலில் திருப்திகரமான வெற்றி இருக்கும். வியாபாரம் செய்யும் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் வரவு உண்டு, தேவையற்ற செலவைக் குறைத்து கொள்ளவும். 

வீட்டில் இன்று நிம்மதி இருக்கும், நீங்கள் குடும்பத்தினரின் மனதைப் புரிந்து கொள்வீர்கள். நண்பர்களுடன் பேசும்போது மனம் நிம்மதியடையும். உடல்நலம் நன்றாக உள்ளது. வரவு!     

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Capricorn 2022 Horoscope)

நீண்ட நாளாக ஆசைப்பட்ட ஆடம்பரமான வாழ்க்கை இன்று கிடைக்கும், மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும், நல்ல வரவேற்பு கிடைக்கும். பணியிடத்தில் இன்று சாதகமான நிலை இருக்காது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகள் அதிகமாக இருக்கும், ஆனால் அதை சமாளிக்கும் அளவு இன்று கணமான பண வரவு இருக்கும்.

இன்பமான மன நிலை குடும்பத்தில் அன்பாக நடக்க உதவும். வீட்டில் அனைவரையும் சந்தோஷப்படுத்துவீர்கள்.  காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.  தன வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் (Aquarius 2022 Horoscope)

இன்று இருக்கும் அமைதியான மனநிலை இன்றைய தினத்தை அழகாகக்காட்டும், வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும். வியாபாரத்தில் விரிவுபடுத்துவதைப் பற்றி அதிகமாக சிந்திப்பீர்கள். உங்கள் சிந்தனைகளை அலுவலகத்தில் செயல்படுத்துவீர்கள். பணப் பற்றாக்குறை ஏற்படும்.

வீட்டில் இயல்பு நிலை உள்ளது, கணவன் மனைவி உரவில் சிறிய சண்டைகள் எட்டிப் பார்க்கும். காதல் வாழ்க்கையில் நல்ல உறவு உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். நலம்!  

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 6

மீனம்(Pisces 2022 Horoscope)

தொழிலில் இன்று காணும் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக அமையும், இன்றைய தினம் வியாபாரத்தில் நல்ல லாபம் காண முடியும். வாழ்வியலின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்வீர்கள். நல்ல பணப் புழக்கம் இருக்கும்.

திருமண வாழ்வில் உங்கள் இனிமையான வார்த்தை அன்பை அதிகப்படுத்தும். பழைய நண்பர்களுடன் பேச முடியும். மனம் அமைதியாகவும் தெளிவாகவும் செயல்படும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறிய குறைகள் வரும். லாபம்!  

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3 

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்