Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: வாயால் வம்பிழுத்து திக்குமுக்காடிப் போகும் அப்பாவி ராசிக்காரர் இவரா.... ஜூலை 15, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 14, 2022 & 14:25 [IST]
Nalaya Rasi Palan: வாயால் வம்பிழுத்து திக்குமுக்காடிப் போகும் அப்பாவி ராசிக்காரர் இவரா.... ஜூலை 15, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                                            Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 04:45-  05:45 வரை

Nalaya Rasi Palan

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாகும், உங்கள் எண்ணம் வளர்ச்சியை மட்டுமே நோக்கி இருக்கும்,  இன்று அறிமுகமாகும் மனிதரின் சந்திப்பு உங்கள் தொழிலில் நல்ல பலமாக இருக்கும். உங்கள் திறமையை வளர்த்து கொள்ள இது சிறந்த தருணமாக இருக்கும், தொழில் ஸ்தானத்தில் இன்று அதிர்ஷ்டமான நாளாகும், நிதி நிலை மிகவும் அருமையாக உள்ளது.

திருமண வாழ்க்கையில் இன்று ஆனந்தமான நாளாகும், உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளியில் செல்வீர்கள். காதல் வாழ்க்கையில் ஆனந்தமயமான சூழல் தான். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

இன்று நீங்கள் செய்யும் காரியம் உங்களின் வாழ்வைத் தீர்மானிக்கும், எனவே கவனமாக முடிவெடுங்கள், சவாலான சூழல் அலுவலகத்தில் இருக்கும் அதை உறுதியான மன தைரியத்துடன் சமாளிக்க வேண்டும். உங்கள் கையில் பணம் சற்று குறைவாக இருக்கும், செலவைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும்.

குடும்ப வாழ்க்கையில் இன்று அமைதியைக் கடைப்பிடிப்பது மிக மிக நல்லதாகும், சொந்த பந்தத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுவீர்கள். ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் வரும், மருத்துவச் செலவு வரலாம். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீல நிறம் 

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்களின் அன்பான மனதிற்கு இன்றைய தினம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், செய்யும் பணிகளில் சில தவறுகள் நிகழலாம். சுய தொழில் செய்பவர்கள் இன்று புதிய முயற்சி எதுவும் எடுக்க வேண்டும். செல்வ நிலை இன்று சாதகமாக இல்லை.

திருமண வாழ்க்கையில் இன்று மோதல் ஏற்படும், தேவையற்ற வாக்குவாதம் உறவுக்குள் விரிசலைத் தரும். நண்பர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். மனம் அமைதியான நிலையில் இருக்காது, பதட்டமான சூழலில் தான் இருக்கும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு புதிய முயற்சிகள் எடுக்க உகந்த நாளாகும், முக்கியமாகத் தொழிலில் இன்று சிறந்த வளர்ச்சி காண முடியும். அலுவலகத்தில் அனைவருடனும் நல்ல உறவு இருக்கும், ஒற்றுமை அதிகரிக்கும். சிறப்பான பண வரவு கையில் இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும், குடும்பத்தினரின் மனதை புரிந்து கொள்ளுவீர்கள். காதல் வாழ்க்கை மிகவும் சாதகமாக அமையும், இன்று நெருக்கம் அதிகமாகும். உடல்நலம் சிறப்பாக அமையும். சந்தோஷம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் (Leo 2022 Horoscope)

இன்பமான வாழ்வை எப்போதும் வாழ நினைக்கும் உங்களுக்கு இன்றைய நாள், சந்தோஷமான நாளாகும், தொழிலில் வெற்றி உடனே கிடைக்காது கொஞ்சம் போராட வேண்டும். இன்று அதிகமான மன உறுதி தேவைப்படும். வியாபாரத்தில் இன்று அகலக் கால் வைக்க வேண்டாம்.  செல்வ நிலையில் வரவைக் காட்டிலும்  செலவு தான் அதிகமாக இருக்கும். 

வீட்டில் அமைதியாக இருக்க முயற்சி செய்யவும், கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். பெற்றோரிடம்  பேசும்போது சாந்தமாகப் பேசவும். உடல்நலத்தில் சிறிய பிரச்சனை வரும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Virgo 2022 Horoscope)

இன்று உங்கள் மனதிற்கு  இருக்கும் புத்துணர்ச்சி கடினமான காரியத்திலும் வெற்றி காணும் வரை ஓயாது உழைக்கும். பணியிடத்தில் மந்தமான சூழல் இருந்தாலும் நீங்கள் உற்சாகமாக பணியாற்றுவீர்கள். கையில் பண வரவு நன்றாக இருக்கும், ஆனால் குடும்ப செலவுக்காகப் பணம் அப்படியே செலவாகும்.

வீட்டில் சில மாற்றங்கள் செய்வீர்கள், சிலர் வீட்டில் புனரமைப்பு வேலைகள் செய்வீர்கள். குடும்பத்தினரின் உதவி இன்று அதிகமாகத் தேவைப்படும். எதிர்பார்க்காத உதவி நெருங்கிய சொந்தத்தின் மூலம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், கால் அல்லது மூட்டுகளில் வலி ஏற்படும். முயற்சி!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 2


Part 2:  துலாம் - மீனம் வரை அடுத்த 6 ராசியின் தினசரி ராசிபலன் (15.07.2022)


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்