Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: இந்த ராசிக்காரருக்கு வார இறுதி சொர்க்கமாகத் தான் இருக்கும் ஆனால் அதுக்கு அப்புறம்.. ஜூலை 16, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 15, 2022 & 13:00 [IST]
Nalaya Sirappu Rasipalan: இந்த ராசிக்காரருக்கு வார இறுதி சொர்க்கமாகத் தான் இருக்கும் ஆனால் அதுக்கு அப்புறம்.. ஜூலை 16, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                       Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Nalaya Sirappu Rasipalan


Part 1: மேஷம்- கன்னி ராசியின் தினசரி ராசிபலன் (16.07.22)


துலாம் (Libra 2022 Horoscope)

உங்களின் திட்டமிட்டு செயல்படும்  யுக்தி இன்று அவ்வளவு உதவியாக இருக்காது, வழக்கமான வேலைகளில் பாதிப்பு இல்லை ஆனால் இன்றைய தினம் சிரமமாக இருக்கும். செல்வ நிலையில் பெரியதாக முன்னேற்றம் இருக்காது.  

வீட்டில் இன்று கொஞ்சம் பிரச்சனைகள் வரும் , எனவே உணர்ச்சிவசப்படாதீர்கள். உறவினர் மத்தியில் இன்று  ஊடல் இருக்கும்.  ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும். அறிவு!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 1 

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

உங்கள்  கருணை மிக்க குணத்தால் அன்பான சூழலை உருவாக்கும் உங்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த பண உதவி கிடைத்தாலும், செலவு அதிகமாக  இருக்கும். உங்களின் அன்பான சுபாவம் பலரால் ஈர்க்கப்படும். ஓய்வு நேரத்தில் விளையாடச் செல்வீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக உள்ளது.செல்வ நிலை நன்றாக உள்ளது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:2

தனுசு (Sagittarius 2022 Horoscope)

உங்களின் கடுமையான உழைப்பு மேலும் ஒரு ஊண்டுகோளாக அமையும் வண்ணம் இன்றைய தினம் தொழிலில் பல உதவிகள் கிடைக்கும். இறை வழிபாடு நன்மை வகுக்கும். நிதிநிலையில் கொஞ்சம் நெருக்கடியான சூழல் உருவாகும், அதை சமாளிக்க நண்பர்களின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும். காதல் வாழ்க்கை சுமுகமாகச் செல்லும். ஆரோக்கியத்தில் சீறிய பிரச்சனைகள் வரும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

மகரம் (Capricorn 2022 Horoscope)

இன்று தெளிவான மனநிலை இருக்கும், உங்கள் வழக்கமான வேலையிலிருந்து சற்று ஓய்வு கிடைக்கும். உங்கள் கவலைகள் படிப்படியாகக் குறையும், செல்வ நிலை சிறப்பாக உள்ளது, பேசும் பேச்சில் தெளிவாக இருங்கள். அலுவலகத்தில் இன்று வேலைகள் அதிகமாக இருக்காது. 

குடும்பத்தில் இன்று அமைதியான சூழல் நிலவும். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாக மாறும். ஆரோக்கியத்தில் கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்களுக்கு இன்று பதட்டமான நாளாக இருக்கும், அலுவலகத்தில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காது. மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் ஏற்படும். ஆனால் உங்களுடன் வேலை செய்வோர் மூலம் ஆதாயம் கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியும்.  

உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது, திருமணத்தில் முடியும். குடும்ப வாழ்க்கையில் மனநிறைவு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாகும், அலுவலகத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும், வியாபாரத்தில் பெரிய அளவு லாபம் இல்லை என்றாலும்  எந்தவொரு பெரிய பாதிப்பும் இல்லை. ஆன்மிக சிந்தனைகள் அதிகமாக இருக்கும். கல்வி நிலையிலும் பாதிப்பு இல்லை. செலவுகள் பெரியதாக இருக்காது. உங்கள் கீர்த்தி உறவினர் மத்தியில் ஓங்கும். குடும்பத்தில் அன்பு குறையும், எனவே இன்று வீட்டில் அமைதி காப்பது நன்மை ஆகும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இதுபோன்ற பொழுதுபோக்கு  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்