Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: எதிர்பாராத நேரம் வெற்றியைக் கைவசமாக்கிக் கொள்ளும் அதிர்ஷ்டக்காரர் இவரா.... ஜூலை 16, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi July 15, 2022 & 12:45 [IST]
Nalaya Rasipalan: எதிர்பாராத நேரம் வெற்றியைக் கைவசமாக்கிக் கொள்ளும் அதிர்ஷ்டக்காரர் இவரா.... ஜூலை 16, 2022 ராசிபலன்..!Representative Image.

Tamil Horoscope Full Predictions     Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

நாளைய ராசிபலன் (17.07.2022, ஞாயிறு)

Nalaya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

இன்று நீங்கள் அமைதியாக இருந்தாலும் இருக்கும் இடத்தில் உங்கள் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி உங்களுக்கு தேவையான காரியத்தைச் சாதித்து கொள்வீர்கள்.  உங்கள் செல்வ நிலை மிகவும் நன்றாக இருக்கிறது, சுப செலவு இருக்கும். அதிகமான பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் குறையும், பழைய நினைவுகள் கவலைத் தரும். கல்வி முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

இன்று நீங்கள் சற்று குழப்பத்துடன் இருந்தாலும் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். ஒரு அனுபவம் வாய்ந்த மனிதரின் அறிவுரை மனதைத் தெளிவுபடுத்தும்.  இன்று பயணம் செய்வதாக இருந்தால் ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டுச் செல்வது வீண் அலைச்சலைத் தவிர்க்கும். செய்யும் செயலை சரிபாருங்கள் அது குழப்பத்தைக் குறைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும். நிதி நிலையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். திருமண வாழ்க்கையில் சிறிய மன வருத்தம் உண்டாகும். உடலுக்கு ஓய்வு தேவைப்படும். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இன்று உங்களுக்கு அதிகமாக மன தைரியம் தேவைப்படும், இன்றைய தினம் உங்கள் நிதி நிலைமை பணப் பற்றாக்குறை ஏற்படும். நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேற அதிகமாகப் போராட வேண்டும். இன்று உங்கள் அலுவலகத்தில் திட்டமிட்டு பணியாற்றி நல்ல  பாராட்டுப்  பெறுவீர். உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அதிகமான ஓய்வு தேவைப்படும். வீட்டில் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும், மண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:1

கடகம் (Cancer 2022 Horoscope)

உங்கள் பணிவான குணத்திற்கு இன்றைய தினம் நேர்மாறாக இருக்கும்.  கவனக் குறையால் முக்கிய பொருட்களை இழக்க நேரிடம் கவனமாக இருங்கள். தொழில் ஸ்தானத்தில் பெரியதாக வெற்றி இருக்காது. பணம் கையில் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கல்வி நிலை நன்றாக உள்ளது. குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனை உருவாகும் அதனால் வீட்டில் அமைதி கெடும். சினம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் (Leo 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு கிடைக்கும் அனுபவம் வாழ்வை வேறு ஒரு கோணத்தில் காட்டும், இன்று அலுவலகத்தில் மேல் அதிகாரி கண்டிப்போடு இருப்பார், கடினமான வேலையையும் எளியதாக முடித்து சாதனை படைப்பீர்கள். சிறப்பான செல்வ நிலை உள்ளது,  செலவு செய்யும்போது சிந்தித்து செலவு செய்தால் எதிர்காலத்திற்கு நல்லது. மண வாழ்க்கை சுமாராகத் தான் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Virgo 2022 Horoscope)

உங்களுக்கு உருவாகும் எதிர்மறை எண்ணம் இன்றைய தினத்தில்  உங்கள் வளர்ச்சிக்கு தடையாக அமையும். பணியிடத்தில் இன்று வேலைச் சுமை அதிகமாக இருக்கும், ஆனால் உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஓங்கி இருக்கும். அஜாக்கிரதை இன்று செலவை அதிகப்படுத்தி கையிருப்பைக் கரைக்கும்.

வீட்டில் அனைவரும் உங்களிடமும் அன்பாக நடந்து கொள்வர். இன்றைய தினம் குடும்பத்தில்  கிடைக்கும் நிம்மதி மறக்க முடியாத நினைவுகளை அளிக்கும். ஆரோக்கியத்தில் சிறிய சிறிய பிரச்சனைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். தனம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6


Part 2: துலாம்- மீனம் ராசியின் தினசரி ராசிபலன் (16.07.2022)


இதுபோன்ற பொழுதுபோக்கு  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்