Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: ஐயோ..! இந்த 2 ராசிக்காரர் நிலைமை இன்று சிரமம் தான்... ஜுலை 17, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 16, 2022 & 11:00 [IST]
Nalaya Sirappu Rasipalan: ஐயோ..! இந்த 2 ராசிக்காரர் நிலைமை இன்று சிரமம் தான்... ஜுலை 17, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 03:15- 04:15 வரை

Nalaya Sirappu Rasipalan


Part 1: மேஷம்- கன்னி முதல் 6 ராசியின் தினசரி ராசிபலன் (17.07.22)


துலாம் (Libra 2022 Horoscope)

உங்கள் சாமார்த்தியமான நடவடிக்கை உங்களை பிரச்சனையிலிருந்து விடுவித்தாலும் இன்றைய தினம் சாதகமான நாளாக அமையாது, மேலும் உங்கள் தொழிலில் புதிய முயற்சிகள் எடுக்காமல் வழக்கமான வேலையை செய்தால் நிச்சியம் முன்னேற்றம் கொள்ளலாம்.  நிதி வளர்ச்சியில் சிறிய பிரச்சனை வரும்.

குடும்பத்தில் சில வாக்குவாதம் வரும். கணவன் மனைவி உறவில் இன்று சண்டைகள் வந்து புரிதலை உருவாக்கும். ஆரோக்கியத்தில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாகும். உயர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்று எதிர்பாராத செல்வ வரவு இருந்தாலும் செலவு அதிகமாக இருக்கும், செலவு செய்வது மனதுக்குக் கொஞ்சம் கசக்கத் தான் செய்யும். தொழில் ஸ்தானத்தில் பிரச்சனை இல்லை. 

உங்கள் பேச்சால் குடும்பத்தில் சிக்கல் உருவாகும். வாழ்க்கை துணையுடன் சில வாக்குவாதம் வரும். உடல்நலம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் தேவை. விரைய செலவு!       

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Sagittarius 2022 Horoscope)

உங்கள் மனதில் நம்பிக்கை அதிகமாக இருக்கும், ஒவ்வொரு செயலையும் கவனமாக செய்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு வகுத்த இலக்கை எளிதில் முடிப்பீர்கள், மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். நீங்கள் தலைமை பொறுப்பில் அமர்ந்து இன்று வேலையைத் திறம்பட செய்வீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி சுழலும். இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். பண வரவு இருக்கும். உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

மகரம் (Capricorn 2022 Horoscope)

உங்களின் அன்பான குணத்தால் இன்று  மகிழ்ச்சியின் உணர்த்துவீர்கள், முக்கியமாக இன்று நேரத்தைத் திட்டமிடுதல் நல்லதாகும்  இல்லையென்றால் நேரம் சிக்கல்களைத் தரும், தற்போது இருக்கும் தடுமாற்ற நிலையை சரி செய்ய எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

குடும்பத்தில் கொண்டாட்டம் அதிகமாகும். உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு கூடும். செலவு பெரியதாக இருக்காது. மனம் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வதாக நிறைவு பெறும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். புகழ்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் (Aquarius 2022 Horoscope)

 உங்களுக்கு இன்று ஓய்வு எடுக்க அதிக நேரம் இருப்பதால் முடிக்காத வேலைகளைச் செய்து முடிப்பீர்கள், மனம் தைரியமான முடிவெடுக்கும். மனதில் உருவாகும் எண்ணங்களால் நம்பிக்கை துளிர்விடும். பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.. 

குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சரியாக இருந்தாலும் கவனமாக இருப்பது நன்மையாகும், ஒவ்வாமை பிரச்சனை உருவாகும் வாய்ப்புள்ளது. பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்(Pisces 2022 Horoscope)

இன்று  இன்பமான மன நிலை இருக்கும், வேலைகளை விரைவாக முடிக்க முயற்சி செய்வீர்கள். சக பணியாளரின் நட்பான அணுகுமுறை பணியில் பல புதிய முயற்சிகள் எடுக்க திட்டம் தீட்டுவீர்கள். வீட்டில் உங்கள் வெளிப்படையான பேச்சு மதிக்கப்படும். கையில் பணம் திருப்திகரமாக இருக்கும்.

கணவன் மனைவி உறவில் வாக்குவாதம் வரும், பிறரின் அறிவுரை குடும்பத்தில் அமைதியை உருவாக்கும். ஆரோக்கியமான மனநிலை இன்று உடல்நலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும். நன்மை!  

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்