Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Next Week Horoscope in Tamil: அடுத்த வார ராசி பலன்களும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்களும்... [21.08.2022 - 27.08.2022]!!

Nandhinipriya Ganeshan August 18, 2022 & 18:50 [IST]
Next Week Horoscope in Tamil: அடுத்த வார ராசி பலன்களும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்களும்... [21.08.2022 - 27.08.2022]!!Representative Image.

Next Week Horoscope in Tamil: சுபகிருது வருடம் ஆவணி மாதம் 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான வார ராசிபலனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். இந்த வார காலநிலையில், துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்கள் எப்படிப்பட்ட மாற்றங்களைச் சந்திக்க போகிறார்கள் என்பதைப் பற்றி காணலாம்.

மேஷம் முதல் கன்னி வரை

துலாம் 

உங்க ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், எதிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல வளர்ச்சியினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்லாமல், மாதக்கோல் என்று வர்ண்ணிக்கக்கூடிய சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், பல்வேறு வளமான வாய்ப்புகளை பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. நல்ல நட்புகள் உங்களை நாடி வரும். நண்பர்கள் மூலமாக ஒரு முன்னேற்றமான பங்குகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் உங்களுடைய உறவினர்களின் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். 

ஒரு பெரிய மனிதருடைய எதிர்பாரத உதவுகள் உங்களுடைய கஷ்டங்கள் குறைக்கும். பிரதான கிரகங்களான குரு, சனி வக்கிரகதியில் இருப்பதால், நீண்ட நாள் கவலைகெல்லாம் மறைந்து நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் எட்டில் இருப்பதால் உடன்பிறந்தவர்களிடம் பேசும்போது சற்று பொறுமையோடு இருப்பதும், வண்டி வாகனங்களில் செல்லும்போது சற்று நிதானத்தோடு செல்வதும் மிக மிக நல்லது. 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று உங்களுக்கு சந்திராஷ்டம் இருப்பதால் நீங்க எதிலும் பொறுமையை கையாள வேண்டும். அன்றைய நாளில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. 

சாதகமான நாள்கள்: 24, 25, 26, 27

வழிபட வேண்டிய தெய்வம்: இந்த வாரத்தில் முருகன் மற்றும் துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிக மிகச் சிறப்பு.

விருச்சிகம்

உங்க ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதில் சுக்கிரன் சஞ்சரிப்பது, பத்தில் சூரியன், பதினொன்றில் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான நிலை என்பதால், எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் ஏற்படும். நல்ல நட்புகள் உங்களை நாடி வரும். ராகுவானவர் ஆறில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியினை அடையக்கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகா ரீதியாக, நல்ல முன்னேற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 

எதையும் சமாளிக்கும் கூடிய பலம் ஏற்படும். கணவன், மனைவி இடையே விட்டு செல்வது நல்லது. வேலை செய்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல நிலையை அடைவீர்கள். உடன் வேலைசெய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். 22, 23 ஆகிய நாட்கள் சந்திராஷ்டம் என்பதால், அந்த இரண்டு நாட்கள் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. 

சாதகமான நாள்கள்: 21, 27

வழிபட வேண்டிய தெய்வம்: முருகன் மற்றும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகச் சிறப்பான பலன்களை தரும்.

தனுசு

உங்க ராசிக்கு ஆறில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் இருக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும், கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் காப்பாற்றுவீர்கள். பிரதான கிரகங்களான குரு, சனி வக்கிரகதியில் இருப்பதால் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த அனைத்து இடையூறுகளும் விலகி, நல்ல வளமான நன்மைகளை கொண்டு வரும். 

தொழிலை பொறுத்தவரையில், நல்ல வளர்ச்சியினை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செல்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கடந்த கால சோதனைகள் எல்லாம் மறையும். 24, 25, 26 ஆகிய நாட்களில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே, புதிய முயற்சிகளை எடுப்படுதை தள்ளி வைப்பது நல்லது.

சாதகமான நாள்கள்: 21, 22, 23

வழிபட வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.

மகரம்

உங்க ராசிக்கு குறிப்பாக நான்கில் ராகு, எட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். சுக்கிரன் ஏழிலில் இருப்பதால், குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவால் எதையும் சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். 

தொழில், வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்பட்டால், ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். வேலை செல்பவர்கள் உங்களுடைய பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது மிக மிக நல்லது. 27 சனிக்கிழமை மட்டும் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். ஏனென்றால், அன்றைய தினம் உங்களுக்கு சந்திராஷ்டம் நாளாகும், அந்நாளில் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. 

சாதகமான நாள்கள்: 22, 23, 24, 25 மற்றும் 26 

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன் ஸ்தலங்களுக்கு செல்வதும், துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவதும் மிக மிகச் சிறப்பு.

கும்பம்

உங்க ராசிக்கு மூன்றில் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு நல்ல முன்னேற்றங்களை பெறுவீர்கள். பணவரவில் எந்த விதத்திலும் குறை இருக்காது. குரு வக்கிரகதியில் இருப்பதால் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உங்க ராசிக்கு நான்கில் செவ்வாயும், ஏழில் சூரியனும் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

பொதுவாக தேவையில்லாத அலைச்சல்களால், இருப்பதை அனுபவிப்பதில் இடையூறு ஏற்படும். எந்த செயலிலும் சற்று பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபாரத்தில் வேலை ஆட்களை அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோக ரீதியாக பார்க்கின்றபோது வேலைபளு கூடுதலாக இருந்தாலும், அதற்கான ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

சாதகமான நாள்கள்: 24, 25, 26, மற்றும் 27 

வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு மற்றும் முருகன் வழிபாடு மேற்கொள்வது அனுகூலமான பலன்களை அள்ளிக் கொடுக்கும்.

மீனம்

உங்க ராசிக்கு மூன்றில் செவ்வாய், ஆறில் சூரியன் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பு. இதனால், நீங்கள் நினைத்தெல்லாம் நடக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நண்பர்கள் மூலமாக ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணப்புழக்கம் மிக மிக சிறப்பாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகளெல்லாம் முழுமையாக விலகும். மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். 

தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உங்களுக்கும் உங்க மேல் அதிகாரிக்கும் இருந்த வந்த கருத்துவேறுபாடுகள் எல்லாம் மறைந்து ஒரு சுமூகமான நிலை ஏற்படும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

சாதகமான நாள்கள்: 21, 27

வழிபட வேண்டிய தெய்வம்: துர்க்கை மற்றும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகச் சிறப்பு

Next Week Rasi Palan | Next Week Rasipalan in Tamil | Vaara Rasi Palan in Tamil | Weekly Horoscope in Tamil | Indha Vara Rasi Palan | Weekly Rasipalan | Vara Raasi Palan August 21 2022 to August 27 2022 | Next Week Rasi Palan Meenam | Next Week Rasi Palan mithunam | Thulam Rasi Palan Next Week | Viruchigam Rasi Palan Next Week | Kanni Rasi Palan Next Week | Kumbam Rasi Palan Next Week | Dhanusu Rasi Palan Next Week | Mesha Rasi Palan Next Week | Magaram Rasi Palan Next Week | Mesham Next Week Rasi Palan | Next Week Rasi Palan 2022 | Next Week Rasi Palan august 2022 | Weekly Meena Rasi Palan in tamil | Weekly Rasi Palan Astrosage in Tamil | Next Week Horoscope in Tamil | Vara rasi palan | Next week rasi palan | Weekly Rasi palan 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்